Home ஜல்சா டிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மாணவியை அந்த டிரைவர் செய்த காரியம் இருக்கே.?

டிராக்டர் ஓட்ட ஆசைப்பட்ட மாணவியை அந்த டிரைவர் செய்த காரியம் இருக்கே.?

79

சேலம் அருகே உள்ள காமலாபுரம் ஊராட்சி சேவிக்காட்டுவளவு பகுதியை சேர்ந்தவர் ரமேஷ் (வயது-32) இவர் டேனீஸ்பேட்டை பகுதியில் குத்தகைக்கு தோட்டம் எடுத்து அங்கேயே தங்கி விவசாயம் செய்து வருகிறார்.
மேலும் சொந்தமாக டிராக்டர் வைத்து வாடகைக்கும் ஓட்டி வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில் டிராக்டர் ஓட்ட சென்றபோது காடையாம்பட்டி கரட்டுகொட்டாய் பகுதியை சேர்ந்த 16 வயது பிளஸ்-1 மாணவி ஒருவருடன் ரமேசுக்கு நட்பு ஏற்பட்டது.
இந்நிலையில், அந்த மாணவி தானும் ராக்டர் ஓட்ட கற்றுக் கொள்ள வேண்டும் என்று தனது விருப்பத்தை ரமேஷிடம் தெரிவித்துள்ளார்.
இதனை வாய்ப்பாக எடுத்துக் கொண்ட ரமேஷ், அந்த மாணவியின் அருகில் அமர்ந்து தினமும், டிராக்டர் ஓட்ட கற்று தந்துள்ளார்.
இதில் நட்பாக பழகிய இருவரும் காதலர்களாக மாறினர். பின்னர் இருவரும் தனிமையில் சந்தித்து இனிமை கண்டும் வந்துள்ளனர்.
கடந்த 13-ந்தேதி இருவரும் ஊரை விட்டு ஓடினர். மாணவியை ரமேஷ் கடத்தி சென்றதாக மாணவியின் பெற்றோர் தரப்பில் போலீசில் புகார் கொடுக்கப்பட்டது.
இதுகுறித்து ஓமலூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரேவதி வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார்.
இந்தநிலையில், கடத்தப்பட்ட மாணவியுடன் ரமேஷ் பொம்மிடி பேருந்து நிலையம் அருகே ஒரு வாடகை வீட்டில் மறைந்து குடித்தனம் செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இருவரையும் பிடித்து போலீசார் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் ரமேஷ் ஆசை வார்த்தைகள் கூறி மாணவியை கடத்தியது தெரியவந்தது.
பாலியல் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ரமேசை கைது செய்தனர்.
மீட்கப்பட்ட மாணவியை கவுன்சிலிங் மற்றும் உளவியல் பயிற்சிக்காக சேலத்தில் உள்ள காப்பகத்திற்கு போலீசார் அனுப்பி வைத்துள்ளனர்.