Home இரகசியகேள்வி-பதில் நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமாக்க நினைக்கிறாய்

நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமாக்க நினைக்கிறாய்

31

நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமா க்க நினைக்கிறாய்
அன்புள்ள அக்காவிற்கு,
என் வயது 32; எனக்கு திருமண மாகி ஆறு ஆண்டுகள் ஆகிவிட் டது. ஓர் ஆண்டுக்குமுன், என் கணவர் திடீரென மாரடைப்பி னால் இறந்து விட்டார். தற்போது , நான் வேறு ஒருவரை விரும்புகிறேன். ஆனால், அந்த நபர் எனக்கு நன்கு அறிமுகமானவர் அல்ல. அவரைப்பற்றி எந்த விவரமும் தெரியாது. நான் வேலைக்குச் செல்லும் இடத்தின் அருகாமையில்
அந்த நபரை கடந்த, ஏழு மாதமாக பார்த்து வருகி றேன். கடந்த ஒரு மாதத்திற்கு முன், அவர் விசிட்டிங் கார்டைக் கொடுத்து, என்னை போன் செய்யச் சொன்னார்.
ஒரு வாரம் கடந்தபிறகே, அந்த நம்ப ருக்கு போன் செய்து பேசினேன். அவ ரும் என் கடந்தகால வாழ்க்கை பற் றி வேறொரு நபர் மூலம் தெரிந்து, என்னிடமும் கேட்டார்; நானும் உண் மையை சொன்னேன். எனக்கு ஆறுத லான வார்த்தைகள் கூறினார்.
இரண்டு, மூன்று நாட்களில், என் அழ கை வர்ணித்தும், நான் அவரின் அருகில் இருக்க வேண்டும் என்றும் இரவு முழுவதும் எனக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்புவார். நான் அவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுகிறேன்; ஆனால், அவருக் கோ என்னை திருமணம் செய்யவும், நேசிக்கவும் விருப்பமில்லை. என்னுடன் எஸ்.எம்.எஸ்., மூலம் மட்டுமே பேச அதிகம் விரும்புகி றார்.
நாங்கள் பழகிய ஐந்து நாட்களுக்குள் என்னிடம் பணம் கேட்கிறார். அவரின் எண்ணம் என்ன? அவருக்கு என் மேல் உண்மையாக அன்பு இருக்கிறதா, இந்த நபரை பற்றி நான் என்ன முடிவெடுக்க வேண்டு ம் என்று தெரியவில்லை. அந்த நபர் திருமணமானவர் அல்ல, வேலைக்கும் எங்கும் செல்வதில்லை.
தற்போது, என் பெற்றோருடன் தான் வாழ்கிறேன்; எனக்கு குழந்தை கள் கிடையாது. பெற்றோர் எனக்கு திருமண ஏற்பாடு செய்கின்றன ர்.
என் கடந்த கால திருமண வாழ்க்கை பெரும் போராட்டம் நிறைந்த து. என்னை திருமணம் செய்தவரோ நிறத்திலும், உயரத்திலும் என க்கு சிறிதளவும் பொருத்தமில்லாதவர். நான் திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பு தான் அவரைப் பார்த்தேன்; என் பெற்றோரின் மன நிலை யை உணர்ந்து திருமணம் செய்து கொண்டேன். அதனால், இப்போது நான் என்னை நேசிக்கிற ஒரு அன்பானவரை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன். ஆனால், என் வாழ்க்கையில் சரி யான முடிவெடுக்க முடியவில்லை. சகோதரி உங்களின் அறிவுரை தான், எனக்கு ஆறுதலான முடிவு.
— இப்படிக்கு,
அன்பு சகோதரி.
அன்புள்ள சகோதரிக்கு,
வேலியில்போற ஓணானைபிடித்து, மடியில் கட்டிக்கொள்ள ஆசை ப்படுவதுடன், அது குத்துமா, குடையுமா என, கேள்வி வேறு கேட்டு ள்ளாய்.
உன் பெற்றோர் தான் தீர விசாரிக்காமல், உன் விருப்பத்தை மதிக்கா மல், உன் திருமணத்தை கண்ணீர் கோலமாக்கி னார்கள் என்றால், நீ காதல் என்கிற பெயரில் உன் வாழ்க்கையை அலங்கோலமாக்க நினைக்கிறாய்~. கொஞ்சம் யோசித்துப் பார்… அவன் யார், எவன், அவன் குடும்ப பின்னணி என்ன ஒன்றும் தெரியாது. வேலைக்கு செல்வதாகவும் தெரியவில்லை; திருமணம் செய்யும் நோக்கமும் இல்லை. அறிமுகமான இரண்டொரு நாளில் ஆபாச எஸ். எம். எஸ் சும், பெண்ணிடம் பணம் பெற நினைக்கும் விசேஷ குணங்களை கொண்ட ஒருவனை, திரும்பிக்கூட பார்க்கலாமா? அவன் இருக்கு ம் திசைக்கே ஒரு பெரிய கும்பிடு போடு.
அவன் உன் உணர்ச்சிகளை தூண்டி, அதில், வக்கிர சந்தோஷம் அடைந்து, அதன்மூலம் பலன் அனுபவிக்க துடிக்கிறான். இவன் உன் னை மணம் புரியவும் மாட்டான்; அப்படியே மணந்தாலும், இவனா ல், நீ சுகப்படவும் மாட்டாய்.
சகோதரி… ஒரு வாழ்க்கையை இழந்துள்ள நீ, அடுத்த வாழ்க்கை யை துவக்க நினைக்கும் போது, காலில் சுடுதண்ணியை ஊற்றிக் கொண்டது போல், நிதானம் இழக்கக் கூடாது; ஒருமுறைக்கு பல முறை யோசித்து, ஆயிரம் முறை, வரப் போகும் வரன் குறித்து விசா ரித்து, பின்புதான் முடிவு செய்ய வேண்டும். அதை விடுத்து, ஊர், பெயர் தெரியாத வழியில் பார்க்கும் ஒருவனை பிடித்திருக்கிறது என, உன் சோகக்கதையை சொல்லி, மொபைல் எண்ணைக் கொடு த்து, அவனின் தரங்கெட்ட பேச்சை செவிமடுத்து, உன்னை நீ தாழ்த் திக்கொள்ளாதே! காதல் என்பது, பரஸ்பரம் ஒருவர்மேல் ஒருவருக் கு எழும் உளப்பூர்வான அன்புணர்ச்சி; அதை யாசித்து பெறமுடியாது .
சகோதரி… உனக்கு வயது தான் அதிகமே தவிர, ஒரு நல்ல வரனை தேர்ந்தெடுக்கக் கூடிய மன முதிர்ச்சி இல்லை; இந்தப் பொறுப்பை உன் பெற்றோரிடமே விட்டுவிடு; ஆனால், இம்முறை, தஞ்சாவூர் பொம்மையைப் போல், பெற்றோர் வார்த்தைக்காக மட்டும் தலை யாட்டாமல், உன் விருப்பத்தை வாய் திறந்து சொல்லி, உன் மனது க்கு பிடித்திருந்தால் மட்டும் ஒப்புக் கொள். அதற்குமுன், திருமண த்திற்கு நிறத்தையும், உயரத்தையும் மட்டுமே அளவு கோலாக கொ ள்ளாமல், உன்னை உனக்காவே மணம் புரிய விரும்புகிறானா, உன் கடந்த கால வாழ்க்கையை குத்திக் காட்டாத பெருந்தன்மையான வனா என்பதையும் பார். அப்போதுதான், அமையப்போகும் வாழ்க் கை உனக்கு சந்தோஷத்தை கொண்டு வரும்.
கடைசியாக ஒன்று…
மனிதாராக பிறந்த எல்லாருடைய வாழ்க்கையிலும், ஏதாவது ஒரு வலி, சோகம், இழப்பு, துயரம், துன்பம் இருக்கத்தான் செய்கிறது; எந்த மனிதரும் முழுக்க முழுக்க சந்தோஷத்தில் மூழ்கித் திளைப்ப தில்லை. அதனால், உனக்குள் இருக்கும் உன் வாழ்க்கை குறித்த சுய பச்சாதாபத்தை தூக்கி எறி. திருமணம் குறித்து, சினிமாத்தனமாக கனவு காணாமல், நிதர்சனத்தை உணர்ந்து, உன்னையும் அதற்கு பக்குவப்படுத்திக் கொள்.