Home உறவு-காதல் I love sex‘அந்த’மேட்டரில் உங்களுக்கு எவ்வளவு மார்க்… தெரிஞ்சிக்கணுமா?… அப்போ இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க…

I love sex‘அந்த’மேட்டரில் உங்களுக்கு எவ்வளவு மார்க்… தெரிஞ்சிக்கணுமா?… அப்போ இந்த கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க…

81

எல்லோருக்குமே ‘அந்த’ விஷயத்தில் தங்களுடைய துணை தன்னை பாராட்டித் தள்ள வேண்டும் என்று தான் நினைப்பார்கள். சிலரோ எப்போதும் என்ன பேசினாலும் ‘அந்த’விஷயத்தோடு தொடர்புபடுத்தியே பேசிக் கொண்டிருப்பார்கள்.

இப்படி ‘அந்த’ விஷயத்துக்கு அடிமையானவர்கள் நிறைய பேர். ஆனால் அதுதான் நம்முடைய கலாச்சாரத்தில் ஆண்களின் பெருமைக்குரிய விஷயம். ‘இந்த’ விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டால் தான் சிறந்த ஆண் என்று நம்பப்படுகிறது.

அப்படி ‘அந்த’ விஷயத்தில் நீங்கள் எப்படி என்று யாராவது சொல்வதற்குப் பதிலாக, நீங்களே உங்களுக்கு மார்க் போட்டால் எப்படியிருக்கும்…

ஆம். கீழ்வரும் கேள்விகளுக்கு நீங்களே பதில் சொல்லி, மார்க் போட்டு பாருங்கள். உங்களுக்கு தெரியும்… நீங்கள் அந்த விஷயத்தில் எவ்வளவு தூரம் அடிமையாகியிருக்கிறீர்கள் என்று…

இந்த கேள்விகளுக்கு ஆம், இல்லை என்ற இரண்டு பதில்களில் ஒன்றைத்தான் கூற வேண்டும்.

அப்படியென்ன கேள்விகள்?

1. உடலுறவு என்பது உங்கள் வாழ்க்கையின் மிக முக்கியமான விஷயம் என்று கருதுகிறீர்களா?

2. உங்களுடைய வேலை, சொந்த விஷயங்கள், பொழுதுபோக்கு ஆகியவற்றை விடவும் உடலுறவு சார்ந்த விஷயம் உங்கள் வாழ்க்கையில் முக்கியத்துவம் பெறுகிறதா?

3. உடலுறவு சார்ந்த விஷயங்களில் மிகக் கட்டுப்பாடோடு இருப்பதாக நீங்கள் உணர்கிறீர்களா?

4. இன்டர்நெட்டில் மற்ற விஷயங்களை விட, கவர்ச்சி, உடலுறவு சார்ந்த விஷயங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குகிறீர்களா?

5. எப்போதாவது உங்கள் பாலியல் இச்சையை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றோ குறைத்துக் கொள்ள வேண்டுமென்றோ நினைத்ததுண்டா?

6. மற்றவர்கள் முன் உங்களுடைய பாலியல் சார்ந்த விருப்பங்களை மறைக்கவோ சிலவற்றை ரகசியமாகவோ வைத்துக்கொள்ள விரும்புகிறீர்களா?

7.உங்களுடைய பாலியல் மற்றும் உடலுறவு சார்ந்த செயல்பாடுகள் விதிகளை மீறியதாக இருந்திருக்கிறதா? விதியை மீறுவதை விரும்புகிறீர்களா?

8. உங்களுடைய பாலியல் சார்ந்த நடத்தைகள் உங்களுக்கோ அல்லது உங்களைச் சுற்றியுள்ளவர்களுக்கோ ஏதேனும் பிரச்னையை கொடுக்கிறதா?

9. உங்களுடைய பாலியல் சார்ந்த நடத்தைகள், ஆசைகள் சமூகத்தில் உள்ள மற்றவர்களைப் போல் சாதாரணமானதான இல்லாமல், வேறுபட்டதாக இருக்கிறதா?

10. எந்த விஷயத்தைப் பற்றி யோசித்தாலும் அவற்றை உங்கள் பாலியல் ஆசைகள் குறித்த விஷயங்கள் முந்தி ஜெயித்துவிடுகிறதா?

இந்த கேள்விகளில் 6 கேள்விகளுக்கு உங்களுடைய பதில் ஆம் என்றால், நிச்சயம் நீங்கள் உடலுறவு சார்ந்த விஷயங்களுக்கு அடிமையாகிவிட்டீர்கள் என்று அர்த்தம்.

அதே 5 கேள்விகளுக்கும் குறைவாக நீங்கள் இல்லை என்று பதிலுரைத்தால் நீங்கள் அந்த விஷயத்துக்கு அடிமையெல்லாம் கிடையாது. உடலுறவை வாழ்க்கையின் ஓர் அங்கமாக மட்டுமே பார்க்கிறீர்குள் என்று அர்த்தம்.