Home ஆண்கள் நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா..? ஆண்கள் மட்டும் இதை படிக்கவும்!

நீண்ட நாட்களாக குழந்தை இல்லையா..? ஆண்கள் மட்டும் இதை படிக்கவும்!

150

இக் காலத்தில் உள்ள பல தம்பதியர் எதிர்நோக்கும் பிரச்சினை தான் குழந்தைப் பேறின்மை.இதற்கு பல காரணங்கள் இருக்கலாம். அவற்றில் ஒன்று தான் ஆண்களின் விந்தணுக்கள் வீரியமற்றிருதாக இருத்தல்.அதற்காக வயாக்ரா போன்ற மருந்துகளை பலரும் வாங்கி உபயோகப்படுத்துகிறார்கள்.ஆனால் உணவில் சில உணவுகளை அதிகமாக சேர்த்துக் கொள்வதால் இந்த விந்தணுக்களைக் கட்டுக்குள் வைத்துக் கொள்ள முடியும்.

அவை என்ன என்பதை பற்றி இப்போது பார்ப்போம்!

01. இஞ்சி மற்றும் தேன்
உடலின் வெப்பத்தை அதிகரித்து, இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும் செயலை இஞ்சி செய்கிறது. இஞ்சியை சாப்பிடுவதன் மூலம் ஆணுறுப்பிற்கு செல்லும் இரத்த ஓட்டம் அதிகரிப்பதால் விறைப்புத் தன்மை அதிகரிக்கும்.

02. வெங்காயம்
இரண்டு சின்ன வெங்காயத்தை இடித்து அரை டம்ளர் தண்ணீரில் கலந்து ஒவ்வொரு முறை சாப்பிடும் முன்பாகவும் குடிக்க வேண்டும்.அதற்கு அரைதேக்கரண்டி இஞ்சி துருவலில் அதே அளவுக்கு தேனையும் எடுத்து, ஒரு டம்ளர் பாலில் கலந்து கொள்ளவும். தினமும் தூங்கச் செல்லும் முன் இதை குடித்து விட்டால், விரைவில் நல்ல மாற்றம் உண்டாகும்.

03. வெண்டைக்காய்
வெண்டைக்காய் பவுடர் ஒரு தேக்கரண்டி எடுத்து ஒரு டம்ளர் பாலில் கலந்து தினமும் குடித்து வந்தால் விந்தணுக்கள் வீரியமடையும்.

04. கரட் மற்றும் முட்டை
இரண்டு கரட்டுகளை துருவி, அதனை பாதியளவு வேகவைக்கப்பட்ட முட்டையின் மேல் தூவி பின் அதன் மேல் ஒரு தேக்கரண்டி தேனை ஊற்றிக் கொள்ளவும்.இந்த கலவையை மூன்று மாதங்களுக்கு தினமும் சாப்பிட்டு வரவும்.மெதுவாக உங்களிடம் ஏற்படும் மாற்றத்தை நீங்கள் உணர்வீர்கள்