Home குழந்தை நலம் குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணுமாம்… உங்கள் இப்படித்தான் வளர்த்தாங்களா?…

குழந்தைகளை இப்படித்தான் வளர்க்கணுமாம்… உங்கள் இப்படித்தான் வளர்த்தாங்களா?…

30

நம்முடைய முன்னோர்கள் பிள்ளைகளை வளர்க்க பிரத்யேகமாக எதுவும் செய்ததில்லை. பிள்ளைகள் மேல் இருக்கும் அன்பு மட்டுமே பிரதானமாக இருந்தது. ஆனால் இன்றைக்கோ மாறிவிட்ட காலச்சூழலில் குழந்தைகளை வளர்க்க ஏகப்பட்ட பயிற்சிகள் தேவைப்படுகின்றன.

குழந்தைகள் வளரும் காலத்தில் பெற்றோர்கள் எப்போதுமே அவர்களுக்கு உறுதுனையாக இருக்க வேண்டும். அதிலும் வளரும் காலத்தில் அவர்களிடம் தென்படும் நல்ல விஷயங்களை நாம் பாராட்ட தவறக் கூடாது.

அதேபோல் அவர்களைக் குறை சொல்லி, தலையில் கொட்டி வளர்ப்பது போன்ற செயல்கள் குழந்தைகளை பாதிக்கும். மற்ற குழந்தைகளோடு நம் குழந்தையை ஒப்பிட்டு குறை சொல்லக் கூடாது.

ஒரு குழந்தை ஏற்றத்தாழ்வு பாராமல், பெரியவர்கள் என்று மதித்து நடந்தால் அதை பெற்றோர்கள் தட்டிக் கொடுத்து இப்படி தான் நடந்துக்கணும் என்று சொல்ல வேண்டும். குழந்தைகளின் நடத்தையில் நல்ல விஷயங்கள் தென்படும்போது சொல்கிற இந்த வார்த்தைகள் அவர்களை உற்சாகம் கொள்ள வைப்பவை.

குழந்தைகள் நல்ல மதிப்பெண் எடுப்பது, விளையாட்டில் ஆர்வம் காட்டுவது, ஏன் உங்களுக்கு ஏதோ சின்ன விஷயம் உதவி செய்தாலோ சந்தோஷமாக வாழ்த்துங்கள். அப்போதுதான் அவர்களுக்கு இதுபோல் பல செயல்களில் ஈடுபட வேண்டும் என்கிற ஆர்வம் எழும்.

படிப்பை தாண்டி அவர்கள் வேறொரு துறையில் ஆர்வம் காட்டி அதில் வெற்றி பெற்றால் கண்டிப்பாக பெற்றோர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்படி செய்தால் அவர்கள் தங்களின் தனித்தன்மையை உணர்ந்து கொள்ள உதவும்.

ஒவ்வொருவருக்குள்ளும் ஏதாவது ஒரு ஸ்பெஷல் விஷயங்கள் இருக்கும். அதை ஒரு சில குழந்தைகளையே பெற்றோர்களிடம் வெளிப்படுத்துவார்கள். அப்படி ஒரு காரியத்தை அவர்கள் செய்து முடிக்கும்போது உன்னால் மட்டும் தான் இதை செய்ய முடியும் என பாராட்ட வேண்டும்.

பெற்றோர்கள் நம்மை நம்புகிறார்கள் என்ற தாக்கம் குழந்தைகள் மனதில் வர வேண்டும். அப்போது தான் அவர்கள் தவறு செய்யத் துணிய மாட்டார்கள். நம்பிக்கை வளர்ப்பது குழந்தைகளை நேர்மையான மனிதனாக வளர்க்கும்.

சாதாரணமாக குழந்தை 9 மணிக்கும் தன் பள்ளி வேலைகள் முடித்துவிட்டு அம்மா நான் டெஸ்ட்டுக்காக எல்லாவற்றையும் படித்துவிட்டேன் என கூறினால், உடனே வெரிகுட், நீ படிச்சு முடிச்சிடுவேன்னு எனக்கு நல்லாத் தெரியும் என்று கூறுங்கள். அது அவர்களுக்கு நம்பிக்கையை தரும்.

பிறந்த நாள், திருமண நாள் போல குழந்தைகள் ஏதையாவது சாதித்த ஒரு நாள் இருக்கும். அதாவது விளையாட்டில் சாதனை படைத்த நாளையோ, அதிக மதிப்பெண் எடுத்த நாளையோ என சில நாட்களை குழந்தைகள் மறந்திருக்க மாட்டார்கள்.

அப்போது குழந்தைகளிடம் அதைப் பகிர்ந்துகொள்வதை வழக்கமாக வைத்துக்கொள்வது நல்லது. இதை மறக்கவே மாட்டேன், ரொம்ப நன்றிடா செல்லம் என்று சொல்லும் அது அவர்களுக்கும் தன்னம்பிக்கையை, தைரியத்தை, தன்னால் முடியும் என்ற உத்வேகத்தையும் கொடுக்க வேண்டும்.