Home உறவு-காதல் உங்கள் அன்பானவர்க்கு பிடித்தமான 10 காதலர் தின பரிசுகள்..!

உங்கள் அன்பானவர்க்கு பிடித்தமான 10 காதலர் தின பரிசுகள்..!

34

காதலர் தினம் நெருங்கி கொண்டிருக்க, உங்கள் அன்பானவர்க்கு என்ன பரிசு கொடுக்கலாம் என்று யோசித்து சோர்வடைந்துவிட்டீர்களா? கணவருக்கு பிடித்தமான அதே சமயம் பயனுள்ள பரிசு கொடுக்க வேண்டும் என்பதே பெண்களின் ஆசை.

வருடங்கள் செல்ல செல்ல பல வகையான பரிசு பொருட்கள் வந்துவிட்டன. இது நல்லது என்று நீங்கள் நினைத்தால், கடைக்கு செல்லும் போது அதன் கஷ்டம் உங்களுக்கு புரியும்.

இந்த காதலர் தினத்தில் உங்கள் அன்புக்குரியவருக்கு கொடுக்க சில பரிசு பொருட்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.

1) வாசனை திரவியம்:

இந்த பரிசு எப்போதும் தப்பாகாது. உங்கள் கணவருடன் இத்தனை வருடங்கள் வாழ்ந்ததில் அவரின் விருப்பங்கள் குறித்து உங்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்கும். எனவே, அவருக்கு பிடித்தமான மற்றும் பயன்படுத்த கூடிய வாசனை திரவியம் ஒன்றை பரிசளிக்கலாம். உங்கள் கணவர் நிச்சயமாக உங்களை பாராட்டுவார்.

2) நகைச்சுவையான உள்ளாடைகள்:

எல்லோருக்கும் விசித்திரமான மற்றும் நகைச்சுவையான விஷயங்கள் பிடிக்கும். அதிலும் இந்த காலத்து ஆட்களுக்கு மிகவும் பிடிக்கும். எனவே, உங்கள் கணவருக்கும் இது போன்ற உள்ளாடைகளை கொடுக்கலாம். மேலும், இதன் மூலம் உங்கள் கணவரை கிண்டல் செய்யவும் முடியும். நீங்கள் மட்டுமே அவரை அந்த உடையில் பார்க்க முடியும் என்பதால் இது உங்கள் இருவரின் பிணைப்பை அதிகரிக்கும். அதுமட்டுமில்லாமல், உங்கள் கணவருக்கு உள்ளாடைகள் தேவை என்பதால், இந்த பரிசு நிச்சயம் வீணாகாது.

3) தாடியை பராமரிக்கும் செட்:

இந்த பரிசு, தாடி வைத்திருக்கும் கணவர்களுக்காக. இந்த காலத்தில் ஆண்கள் தங்களின் தாடியின் மீது அதிக அக்கறை எடுத்துக்கொள்கிறார்கள். அழகு என்பது பெண்களுக்கு மட்டுமே என்ற காலம் போய்விட்டது. ஆண்களும் தங்களை அழகாய் காட்டிக்கொள்ள நினைக்கிறார்கள். மேலும், பெண்களுக்கும் இது போன்ற ஆண்களை பிடித்திருக்கிறது. எனவே, உங்கள் கணவருக்கு இது போன்று தோற்றத்தை பராமரிக்கும் பொருளை வாங்கி கொடுக்கலாம். இது பல விலைகளில் கிடைப்பதால் உங்கள் பட்ஜெட்டிற்கு ஏற்ற ஒன்றை பரிசளிக்கலாம்.

4) உடற்பயிற்சி கடிகாரங்கள்:

இது விலைமிக்க பரிசாகும். ஆனால் ஆண்கள் அவர்களின் கேட்ஜெட்களை எப்போதும் விரும்புவார்கள். உடற்பயிற்சி கடிகாரங்கள் இப்போதைய டிரெண்ட் என்றே சொல்லலாம். அதுமட்டுமில்லாமல், உங்கள் கணவருக்கும் அவரின் உடலின் மீது கவனம் அப்போது தான் கவனம் வரும் என்பதால் யாரும் உங்களை குறை சொல்ல மாட்டார்கள். புதிய கேஜெட்டைப் பற்றிய உற்சாகம் இருப்பதால் கண்டிப்பாக அவர் உடற்பயிற்சி செய்ய முயற்சி செய்வார். உங்கள் கணவர் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நினைக்கிறீர்களா? அப்போது இது சிறந்த பரிசு என்றே சொல்லலாம்.

5) அவருக்கென்று ஒரு கூப்பன் புத்தகம்:

கூப்பன் என்ற உடன் இலவச பால் இலவச டூத்பிரஷ் என்று கொடுக்க கூடாது. அவருக்கு தேவையான ஒன்றை கொடுக்க வேண்டும். அதாவது, இலவச மசாஜ்கள், இலவச முத்தங்கள், இது போன்று சின்ன சின்ன விஷயங்களாக அதே சமயம் உங்கள் இருவரின் நெருக்கத்தை அதிகரிக்கும் ஒன்றாக இருக்க வேண்டும். மேலும், இது நீங்கள் எழுதிய ஒன்றாக இருக்க வேண்டும். நீங்கள் எப்பொழுது வேண்டுமானாலும் செய்யக்கூடிய ஒன்றாக எழுதுங்கள். அல்லது அதுவே பிரச்சனையில் முடிந்து விடும்.

6) ரொமான்டிக் டின்னர்:

அவரை வெளியில் அழைத்து செல்லுங்கள். அவருக்கு பிடித்தமான உணவகத்துக்கு அழைத்து செல்லலாம்; இல்லையெனில் வீட்டில் அவருக்கு பிடித்தமான உணவு சமைத்து கொடுக்கலாம். ஆனால் அதை அவரை ஆச்சரியப்படுத்தும் வகையில் செய்ய வேண்டும்.

7) நீங்கள் நீங்களாக இருக்க கூடாது:

ஆம், சரியாக தான் படித்தீர்கள். நீங்கள் நீங்களாக இருக்க கூடாது. இந்த யோசனையை நான் ஒரு டிவி நிகழ்ச்சியிலிருந்து எடுத்தேன். அதாவது உங்களுக்கு பிடித்த கதாபாத்திரத்தை எடுத்துக்கொள்ளலாம். உங்கள் கணவரை டின்னருக்கு அழைத்து சென்று வேறு ஒரு நபரை போல் நடந்து கொள்ளலாம். இது உங்களின் காதலை புத்துணர்வுடன் வைத்திருக்கும். அதே சமயம் நீங்கள் வேலை, குழந்தை, பொறுப்புகள் போன்றவற்றை பற்றி பேச கூடாது. நீங்கள் இருவரும் முதல் முறை சந்திப்பதை போன்று நடந்துகொள்ள வேண்டும். இது சற்றே சிறுபிள்ளைத்தனமாக இருந்தாலும், கண்டிப்பாக உங்கள் கணவருக்கு பிடிக்கும்.

8) பலூனில் படங்கள் தொங்கவிடலாம்:

காதலர் தினத்தை உணர்த்த இதய வடிவ பலூன்கள் தவிர வேறு என்ன இருக்க முடியும். பலூனில் ஒரு நூலை கட்டி, அதன் நுனியில் உங்கள் இருவரின் புகைப்படங்களை தொங்கவிடலாம். இவை சீலிங்கிலிருந்து தொங்கும்படி செய்யலாம். இதனுடன் சிறிய கவிதைகள் அல்லது உங்களது மனதில் உள்ளவற்றை செய்யலாம். மேலும், உங்களின் பழைய தருணங்கள், உதாரணமாக நீங்கள் சென்ற படத்தின் டிக்கெட்களையும் சேர்த்துக்கொள்ளலாம். இவையனைத்தும் உங்கள் கணவரை சிறப்பாக உணர வைக்கும்.

9) புத்துணர்ச்சி பெற:

பெண்கள் மட்டும் ஸ்பாக்களை விரும்புவதில்லை. ஆண்களும் விரும்புவார்கள். ஒரு நாளை திட்டமிட்டு நீங்களும் உங்கள் கணவரும் ஓய்வெடுக்க ஸ்பாவிற்கு செல்லலாம். மன அழுத்தத்தில் இருந்து விடுபட ஆண்களுக்கு இது போன்ற ஒன்று நிச்சயமாக தேவை. இதற்காக அவர் கண்டிப்பாக உங்களை பாராட்டுவார்.

10) படுக்கையில் காலை உணவு:

இது அனைவருக்கும் தெரிந்த பல பெண்கள் தங்கள் அன்பை உணர்த்த செய்யும் ஒன்று. ஆண்களுக்கு உணவு மற்றும் படுக்கை மிகவும் பிடித்தமான விஷயங்கள். எனவே, உங்கள் கணவருக்கு பிடித்த உணவை, உங்கள் அன்பை வெளிப்படுத்தும் ஒரு சிறிய வாழ்த்து அட்டையுடன் சேர்த்து வழங்குங்கள். இதய வடிவத்தில் உணவிருந்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். இதனால் உங்கள் இருவரின் நாள் உற்சாகமாக தொடங்கும். இந்த தருணத்தை நீண்ட நேரம் நீட்டிப்பது நல்லது. ஏனென்றால், இதன் பின் உங்கள் வேலைகளில் கவனம் செலுத்த ஆரம்பித்தால் நாள் முடிவதே தெரியாது.