Home உறவு-காதல் காதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் 6 பதில்கள்!

காதலில் பதில் கூறுவதற்கு நீண்ட நேரம் எடுத்துக் கொள்வது ஏன்? பெண்கள் கூறும் 6 பதில்கள்!

49

captureகாதலிக்கும் ஆண்களுக்கு எப்போதுமே பெண்கள் மீது ஒரு பொதுவான கோபம் இருக்கும். காதலிக்கிறேன் என தட்டித்தடுமாறி, பல தடவை முயற்சி செய்து உளறிக்கொட்டி கூறினால், ஆம், இல்லை என எந்த பதிலுமே கூறாமல் பெண்கள் கம்மென்று இருந்துவிடுவார்கள்.

அப்படி என்ன தான் பெண்கள் மனதில் ஓடும். ஒரு பதில் கூறுவதற்கு ஏன் ரயில் வண்டி போல நீண்ட நேரம் எடுத்துக் கொள்கிறார்கள் என ஆண்கள் சரமாரியாக கோபப்படுவார்கள்.

ஆனால், நாங்கள் பெண்கள், எதையும் யோசித்து தான் செய்வோம். சடாரென்று முடிவு எடுத்துவிட முடியாது என யாரடி நீ மோகினி க்ளைமேக்ஸ் நயன்தாரா போல சிலர் சில காரணங்கள் கூறுகின்றனர். அவை என்னென்ன என்று இனி பார்க்கலாம்…

குழப்பம்!

பெண்களின் மனம் குழப்பம் நிறைந்த ஒன்று. சில நேரங்களில் அவர்களது பேச்சையும், சில நேரங்களில் மற்றவர் பேச்சையும் கேட்டு மென்மேலும் குழம்பிக் கொண்டே இருக்கும். அதிலும், காதலில் கசகசவென்று குழம்பும். இனித குழப்பம் தான் பெண்கள் ஒருவரை உடனே தேர்ந்தெடுக்க தடையாக இருக்கிறது.

தனக்கான இடம்!

பெண்களுக்கு எப்போதுமே தனக்கான இடம், சுதந்திரம் சார்ந்து இருக்கவும், அதை இழக்கவும் முனையமாட்டார்கள். அதற்காக நிறைய யோசிக்கவும் செய்வார்கள்.

காதலா? காமமா?

பொதுவாகவே முதல் பார்வையில் ஒரு ஆண் தன் காதலை வெளிப்படுத்தினால், அவன் காமத்தினால் அல்லது அழகை கண்டு தான் தன்னிடம் நெருங்க நினைக்கிறான் என்ற எண்ணம் தான் பெண்கள் மனதில் எழும். இதனால் கூட பெண்கள் நேரம் எடுத்துக் கொள்வதுண்டு.

பரிசோதனை…

ஒருவேளை மறுப்பு தெரிவித்ததும், உடனே மனம் மாறிவிடுவார்களா? இல்லை நமக்காக காத்திருப்பார்களா? என பரிசோதிக்கவும் கூட பெண்கள் நேரம் எடுத்துக் கொள்வார்கள்.

எதிர்காலம்!

இந்த நபருடன் காதல் கொள்வதால் நமது எதிர்காலம் நன்றாக இருக்குமா? இவன் நம்மை நன்றாக பார்த்துக் கொள்வானா? இப்போது காதலிப்பதால், தனது எதிர்கால திட்டத்தில் ஏதேனும் பாதிப்புகள் ஏற்படுமா என பெண்கள் கணக்கிடுவார்கள். இதனால் கூட நேர தாமதம் ஆகலாம்.

ஓய்வு!

சில பெண்களுக்கு அதிகமான காதல் விண்ணப்பங்கள் அனுப்பப்படலாம். அதனால், நோ சொல்லி, சொல்லி அவர்கள் ஓய்ந்து போயிருப்பார்கள். அதனால், வெறுப்படைந்து பதிலே கூறாமல் விட்டுவிடுவார்கள்.