Home பெண்கள் தாய்மை நலம் கருத்தடை மாத்திரைகள் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகுமா

கருத்தடை மாத்திரைகள் உடல் எடை அதிகரிக்கக் காரணமாகுமா

19

கருத்தடை மாத்திரைகளை ஆங்கிலத்தில் “பர்த் கண்ட்ரோல் பில்ஸ்” அல்லது “பில்ஸ்” என்று அழைப்பர். பெண்கள் கருத்தடைக்குப் பயன்படுத்த இவையும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றில் இரண்டு வகை உள்ளன: ஈஸ்ட்ரோஜென், புரோஜெஸ்ட்ரோன் இரண்டையும் கொண்ட சேர்க்கை மாத்திரைகள் மற்றும் புரோஜெஸ்ட்ரோன் மட்டும் கொண்டுள்ள புரோஜெஸ்ட்ரோன் மாத்திரைகள். இவற்றில் இன்னும் பல வகைகள் உண்டு. அவற்றில் உள்ள ஹார்மோன்கள் சற்று மாறும், அளவும் மாறுபடும். இவை, பெண்களுக்கு கருமுட்டை வெளியிடுவதைத் தடுப்பது, கருப்பை வாய்ப்பகுதியில் சளிப்படலத்தைத் தடிமனாக்குவது, கருப்பையின் உட்புறச் சுவற்றை மெலிதாக்குவது போன்ற பல்வேறு வழிகளில் கருவுறுவதைத் தடுக்கின்றன.

ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளத் தொடங்கும் பெண்களுக்கு, உடல் எடை அதிகரிக்குமே என்ற கவலை இருக்கும். உங்கள் நண்பர்கள் பலர் கருத்தடை மாத்திரிகளைப் பயன்படுத்தி உடல் எடை அதிகரித்தது என்று கூறக் கேட்டிருப்பீர்கள். கருத்தடை மாத்திரைகளில் இருக்கும் இந்த ஹார்மோனில் உடல் எடையை அதிகரிக்கும் பொருள்கள் ஏதேனும் இருக்கிறதா?

கருத்தடை மாத்திரைகளால் உடல் எடை கூடுதல் (Weight gain on the pill)
பல்வேறு வகை கருத்தடை மாத்திரைகளில், பழைய காலத்தில் இருந்தவற்றில் ஹார்மோன் அதிக செறிவில் இருக்கும், அதனால் அவை உடல் எடையை அதிகரிக்கும். ஆனால் இப்போது விற்பனைக்குக் கிடைக்கும் கருத்தடை மாத்திரைகளில் ஈஸ்ட்ரோஜென் ஹார்மோன் குறைவாகவே உள்ளது.

சேர்க்கை கருத்தடை மாத்திரைகளை ஒரு வருடத்திற்கு எடுத்துக்கொண்டால் ஏற்படும் சராசரி உடல் எடை அதிகரிப்பு சுமார் 2. 4 கி. கி. என்று ஓர் ஆய்வு தெரிவிக்கிறது. ஒரு வருடம் இவற்றைப் பயன்படுத்தியவர்களில், சுமார் 7% பேருக்கு மட்டுமே உடல் எடை 10%க்கு மேல் அதிகரித்துள்ளது

44 ஆராய்ச்சி ஆய்வுகளின் ஆதாரங்களை பகுப்பாய்வு செய்த ஓர் ஆய்வில், உடல் எடை அதிகரிப்புக்கு சேர்க்கை கருத்தடை மாத்திரைகள் காரணமாக இருக்கலாம் எனக் கருதக்கூடிய தொடர்பு எதுவும் கண்டறியப்படவில்லை.

வாய்வழி கருத்தடை மாத்திரைகளால் உடலில் நீர் தக்கவைப்பு அதிகமாகுமா? (Do oral contraceptive pills cause water retention?)
ஈஸ்ட்ரோஜென் உள்ள கருத்தடை மாத்திரைகள், உடலில் நீர் சேரக் காரணமாகி, அதனால் உடல் எடை அதிகரிக்க வழிவகுக்கலாம். உடலில் எவ்வளவு நீர் சேர்கிறது என்பது, மாத்திரையில் எவ்வளவு ஈஸ்ட்ரோஜென் உள்ளது என்ற அளவைப் பொறுத்தது. ஈஸ்ட்ரோஜென் சிறுநீரகத்தில் உள்ள பல்வேறு சேர்மங்களைத் தூண்டுவதால் உடலில் நீர் அதிகம் சேர்கிறது என்று தெரியவருகிறது. பழைய வகை கருத்தடை மாத்திரைகளில் 50 mcgக்கும் அதிகமான ஈஸ்ட்ரோஜென் இருக்கும், அவை நீர் கோர்ப்புக்கு வழிவகுக்கும். தற்போது பெரும்பாலும் எல்லா மாத்திரைகளிலும் 30 mcg ஈஸ்ட்ரோஜென் மட்டுமே உள்ளது, இதனால் நீர் சேர வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.

கருத்தடை மாத்திரைகள் பசியை அதிகரிக்குமா? (Do oral contraceptive pills increase appetite?)
வாய்வழி கருத்தடை மாத்திரைகளை எடுத்துக்கொள்ளும் நாட்களில், பசி அதிகரிக்கிறது என்று சில பெண்கள் தெரிவித்துள்ளனர். எனினும், பசி குறைந்துள்ளது என்றும் அதிக பெண்கள் கூறியுள்ளனர். வாய்வழி கருத்தடை மாத்திரைகள் பசி அதிகரிக்கும் என்று நிரூபிக்கும் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. மேலும், அப்படி பசியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டால், அது மாத்திரைகள் பயன்படுத்தத் தொடங்கிய முதல் சில வாரங்களிலேயே நன்கு தெரியும்.

அடிப்படை (Bottomline)
பெண்கள் பலர், கருத்தடை மாத்திரைகளைப் பயன்படுத்துவதை நிறுத்துவதற்கும், பயன்படுத்தத் தயங்குவதற்கும், உடல் எடை அதிகரித்துவிடும் என்ற பயமே முக்கியக் காரணமாக உள்ளது. நீங்கள் பயன்படுத்தும் கருத்தடை மாத்திரைகளால் உடல் எடை கூடுகிறது என்று நீங்கள் நினைத்தால், உங்கள் மகளிர் நலவியல் மருத்துவரிடம் சென்று மாத்திரைகளை மாற்றலாமா என்று ஆலோசனை பெறவும்.