Home பெண்கள் தாய்மை நலம் கர்ப்பிணி பெண்ணின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

கர்ப்பிணி பெண்ணின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?

25

கர்ப்பக்காலத்தில் பெண்களின் எடையானது, மிகக்குறைவாக இருந்தாலும் அல்லது ஒரு குறிப்பிட்ட எடைக்கு அதிகமாக இருந்தாலும் அது தாய் மற்றும் குழந்தை ஆகிய இருவரையும் பாதிக்கும்.

கருவறையில் வளரும் குழந்தைக்கு கலோரிகள் மிகவும் அவசியமாகும். கர்ப்பிணி பெண்கள் ஆரோக்கியமான மற்றும் சத்தான உணவுகளை அதிகமாக சாப்பிட வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கர்ப்பக்காலத்தில் இருக்கும் சாதாரண எடை உள்ள ஒரு பெண்ணின் எடையானது, 12 முதல் 16 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.

பெண்களின் உடல் எடையானது, கர்ப்பக் காலத்தில் அதிகமாக இருந்தால், அதை குறைப்பதற்கு முயற்சிக்காமல், சத்தான உணவுப் பொருட்களை அதிகமாக சாப்பிட வேண்டும்.

மேலும் கர்ப்பிணி பெண்கள் தங்களின் உணவில் குறைந்த அளவு உப்பை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.

கர்ப்பக் காலத்தில் பெண்களின் உடல் எடை எவ்வளவு இருக்க வேண்டும்?
குறைந்த உடல் எடைக் கொண்ட பெண்கள் கர்ப்பக் காலத்தில் 13 முதல் 18 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.
அதிக உடல் எடைக் கொண்ட பெண்கள் கர்ப்பக் காலத்தில் 7 முதல் 11 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.
முதன் முதலில் கர்ப்பம் அடைந்த பெண்கள் முதல் மூன்று மாதங்களில், 1 முதல் 2 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.பின் அடுத்தடுத்த ஒவ்வொரு வாரமும் அரை கிலோ கிராம் வரை அதிகரித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
இரட்டைக் குழந்தை இருக்கும் கர்ப்பிணி பெண்களின் உடல் எடையானது, 16 முதல் 20 கி.கி வரை அதிகரிக்க வேண்டும்.