Home பெண்கள் அழகு குறிப்பு கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்

கன்னிப்பெண்களுக்கு புதிய கால் அணிகலன்

37

காலுக்கு அணியும் ‘நெக்ஸஸ்’ பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? இப்போது இந்தியாவில் கன்னிப் பெண்களிடையே பிரபலமாகிவரும் பேஷன்களில் இதுவும் ஒன்று. இதுதொடைப் பகுதியை அழகுபடுத்தும் அணிகலன்.

டெல்லி, மும்பை, பெங்களூரு கல்லூரி மாணவிகளிடையே பிரபலமாகி வரும் இந்த அணிகலன், டீன்ஏஜ் பருவத்தினருக்கு பிடித்தமான பேஷன் பொருளாகிக்கொண்டிருக்கிறது. இதற்கான மவுசு அதிகரித்துக்கொண்டிருப்பதால், பல்வேறு வடிவங்களில் இதை உருவாக்க வடிவமைப்பு நிபுணர்கள் முன்வந்திருக்கிறார்கள். தங்க நகை வடிவமைப்பாளர்களும் இதை புதுப்பிப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

இது ஒன்றும் தற்கால நவநாகரிக அணிகலன் அல்ல. பழங்காலத்திலே இது போன்ற தொடை அணிகலன்கள் பெண்களால் விரும்பி அணியப்பட்டிருக்கிறது. குறிப்பாக நாட்டிய நங்கையர்கள் உடைக்கு மேல் இந்த அணிகலனை அணிந்திருக்கிறார்கள். சிலப்பதிகாரத்தில் மாதவி இந்த அணிகலனை விரும்பி அணிந்திருக்கிறார்.

காலுக்கு அழகு செய்யும் இந்த அணிகலனை தற்போது ஜீன்ஸ் மீது பெண்கள் அணிகிறார்கள். இந்தி நடிகைகள் பலரிடமும் இந்த பேஷன் ஜூரம் தொற்றிக்கொண்டிருக்கிறது. இதன் மேற்பகுதியை இடுப்பில் சொருகிக் கொண்டால், மீதமுள்ள சங்கிலியை காலுக்கேற்றாற்போல அட்ஜஸ்ட் செய்துகொள்ளலாம். காலுக்கு ஏற்றபடி அணிந்து, கடைசி கொக்கியை இழுத்து மாட்டிவிட்டால் தொடை செயின் சூப்பர் அழகைத்தருகிறது.

கால்களுக்கு கொலுசு அணிவது கொஞ்சம் மாறுபட்டு தொடைவரை சென்றிருக்கிறது. இதை ஒரு காலில் அணிவது மட்டுமே பேஷன். அதனால் ஒற்றையாக தான் கிடைக்கிறது. பெண்கள் லெகிங்ஸ் மீது அணிந்துகொண்டாலும் அழகு தருகிறது. அதே நேரத்தில் ஜீன்ஸ், லெகிங்ஸ் போன்று உடலை ஒட்டியபடி இருக்கும் உடைகளுக்கே இது பொருத்தாக இருக்கிறது.