Home ஆண்கள் கல்யாணம் ஆனவுடனே அப்பா ஆகணுமா?… அப்போ இனி 8 மணிக்கே தூங்கப் போயிடுங்க..

கல்யாணம் ஆனவுடனே அப்பா ஆகணுமா?… அப்போ இனி 8 மணிக்கே தூங்கப் போயிடுங்க..

34

எல்லா ஆண்களுக்குமே தங்களுடைய விந்துக்கள் ஆரோக்கியமாக இருக்கின்றனவா?… தங்களால் மனைவியைத் திருப்திப்படுத்த முடியுமா என்ற சந்தேகம் இருக்கத்தான் செய்கிறது.

திருமணம் ஆனவர்கள், திருமணம் ஆகப்போகிறவர்கள் என இருவருக்குமே இந்த பிரச்னை இருக்கிறது. இதற்கும் 8 மணிக்கே தூங்கப் போறதுக்கும் என்ன சம்பந்தம் இருக்குன்னு நீங்க கேட்கலாம்.

ஆண்மைக்குறைபாடு உண்டாவதற்கு மிக முக்கியக் காரணங்களுள் ஒன்று தூக்கமின்மை என்று புதிய ஆய்வு ஒன்று நிரூபணம் செய்துள்ளது. என்ன! இப்போ புரியுதா? ஏன் ஆண்மைக்குறைபாடு அதிகரிச்சுட்டே போகுதுன்னு.

ஆம். இன்றைக்கு பெரும்பாலான ஆண்கள் இரவில் தூக்கமிழந்து வேலை பார்ப்பதும் நண்பர்களுடன் அரட்டையடிப்பதும் கம்யூட்டர் முன் விடிய விடிய உட்கார்ந்திருப்பது ஆகியவை தான் இதற்கெல்லாம் முக்கியக் காரணமாக இருக்கிறது.

முடிந்தவரையிலும் இரவு 8 மணி முதல்10 மணிக்குள் தூங்கச் சென்றுவிடுவது உடலை ஃபிட்டாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவும்.

வேகமாகத் தூங்கச் செல்வதால் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்குமாம். இரவு முழுக்க கண் விழிக்கும் ஆண்களுக்கு இயல்பாகவே விந்தணுக்களின் உற்பத்தி குறைந்துவிடுகிறது.

6 மணி நேரத்துக்கும் குறைவாகத் தூங்குபவர்கள் நிச்சயம் இதுபோன்ற பிரச்னைகளைச் சந்திக்கக்கூடும்.