Home பாலியல் பாலுறவிற்கும், காம வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை

பாலுறவிற்கும், காம வெறிக்கும் உள்ள வேறுபாடுகள் யாவை

60

ஒருவர் உயிர் வாழ உணவு தேவைப்படுகிறது. தன் தேவையை உணர்ந்து போதுமான அளவு உண்ண வேண்டும். அவ்வாறு உண்டு வாழ்பவர் மகிழ்ச்சியுடன் நோய் இல்லாமல் இருப்பர். ஆனால் பசியில்லாத போதும் உணவை உண்பவருக்கு நோய்கள் வருவது உண்மை. இந்த உண்மை பாலியலுக்கும் பொருந்தும். தன் உடலுக்கும், உள்ளத்திற்கும் உடல் உறவு தேவையாக இருப்பதை உணர்ந்து, அதைத் தேவையான வேளைகளில் அனுபவிக்க வேண்டும். அவ்வாறு உள்ளோருக்கு மன மகிழ்ச்சியும், மன அமைதியும் அமையும். அப்படியில்லாமல், காண்போரை எல்லாம் புணரத்துடிப்பது காமவெறி ஆகும். இது மேலும் மேலும், வக்கிர உணர்வைத் தூண்டி மனிதனையும், சமூகத்தையும் அழிக்கும். இத்தகைய காமவெறி, உடல் மற்றும் மன வியாதிகளை ஏற்படுத்துவதோடு, முழுமையான பாலியல் உடல் உறவு இன்பத்தையும் அடையச் செய்யாது.

காமவெறியோடு இருப்பவர்கள் பொதுவாக மன அமைதி இல்லாமல் இருப்பார்கள். இவர்கள் எந்நேரமும் உடலுறவு பற்றிய சிந்தனையில் இருப்பார்கள், அவதிப்படுவார்கள். இதனால் இயல்பான உடல் வியாதிகள் அவர்களுக்கு உண்டாகின்றன. காம வெறியின் காரணமாக, இவர்கள் விபச்சார பெண்களுடனோ, வியாதியுள்ள பெண்களுடனோ உறவு கொண்டால், பாலியல் வியாதிகள் வருகின்றன. பெரும்பாலும், இவர்கள் பொதுவாகவே சமுதாயத்தாலும், வீட்டிலுள்ளவர்களாலும் எதற்கும் உபயோக மற்றவர்கள் என்று ஒதுக்கப்படுபவர்கள். இதனால் இவர்கள் மனப்பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள். மனப்பாதிப்பு அடைந்த இவர்கள் குழைந்தைகளைக்கூட உடல் உறவுக்குக் கட்டாயப் படுத்திப் பாலியல் வன்முறையில் ஈடுபடுவார்கள். இப்படிப் பட்டவர்கள் மனவியாதி பிடித்தவர்கள் என்பதால் அவசியம் மருத்தவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்.