Home இரகசியகேள்வி-பதில் நான் வயதுக்கு வரவில்லை ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்!

நான் வயதுக்கு வரவில்லை ஆனால் தாம்பத்தியத்தில் ஈடுபடலாம்!

62

நான் என் பெற்றோருக்கு கடைசிப் பெண்; பிறப்பிலேயே கர்ப்பப்பை இல்லாமல் குறையோடு பிறந்தேன். ஒரு சமயம் சிகிச்சைக்காக சென்றி ருந்தபோது, ஸ்கேன் மூலமாக இந்த விஷயம் தெரிய வந்த து. மற்ற‍பெண்களைப்போல் எனக்கு பூப்பெய் தல் நிகழாது, ஆனால் தாம்பத்தியத்தில்
முழுமையாக ஈடுபடலாம் என்று…
என் குறைபாட்டை நினைத்து அதி ர்ச்சி ஏற்பட்டாலும், வாழ ஒரு வழி இருக்கிறதே என நினைத்து, மன தை தேற்றிக்கொண்டேன். ஆனால், இவ்விஷயத்தை தெரிந்து கொண்ட என் உறவினர்கள், என்னை உதாசி னப்படுத்திபேசுவர். அப்போதெல்லா ம் என் அண்ண ன் தான் என் மனதை பக்குவப்படுத்துவார்.
பட்டப்படிப்பு முடிந்து அரசு வேலைக்கு முயற்சி செய்துகொண்டிரு ந்த வேளையில், என் குறைக்கு ஏற்றாற்போல், மனைவியை இ ழந்த, குழந்தையுடன் இருக்கும் ஒரு வரன் வந்தது; திருமணமும் நடந் தது.
என் கணவர், என் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் உள் ளவர்; சந்தோஷமாகவே வாழ்கி றேன். அவருடைய குழந்தையா க இருந்தவள், இப்போது, என்குழந்தையாகிவிட்டாள். அவள் என் னை , ‘அம்மா’ என்று, அன்புடன் அழைப்பாள். நாங்கள் இருவரும் பாசமா கத் தான் இருக்கிறோம்.
ஆனால், என் கணவர் வீட்டினரைத் தவிர, அவருடைய உறவினர்களுக் கு என் குறை தெரியாததால், ‘இன் னொரு குழந்தை எப்போது…’ என்று ம், ‘என்ன தான் இருந்தாலும் நீ, அவ ளுக்கு வளர்ப்புத் தாய் தான்…’ என்கி ன்றனர். என் கணவரும், என் குழந்தையும் ஆறுதலாக இருந்தபோ தும், ‘ஏன் நாம் மட்டும் இப்படிப் பிறந்தோம்; நம்மாலும் ஒரு குழந் தை பெறமுடிந்திருந்தால் இந்த பேச்சுக்கள் வாங் குவோமா…’ என, எண்ணத் தோன்றுகிறது.
அம்மா, என் உறவினர்களுக்கும், இந்த உலகத்தி ற்கும் என் போன்ற நிலையில் உள்ள குழந்தை பெறாதவர்களுக்கும், ‘நச்’சென்று தாய் மையின் புனிதத்தை புரிய வையுங்களம்மா! பெற்றால் தான் பிள் ளையா? அவள் என் தங்கப் பதுமை!
— இப்படிக்கு, அன்பு மகள்.
அன்பு மகளுக்கு,
தாய்மை என்பது பெண்மையின் பெருமைமிகு விஷயம்தான்; ஆ னால், அதை விட பெருமையானது எது தெரியுமா. தான் பெற்றெடுக் காத குழந்தைக்கு, மலஜலம் கழுவி, கண், காது, மூக்கு துடைத்து, அது பசிக்கு அழுகி றதா, உடல் உபாதையில் சிணுங்குகிறதா என கண்ணுற்று, பாராட்டி, சீராட்டி வளர்க் கிறாளே… அவள் அந்த பெற்றவளை விட பல மடங்கு உயர்ந்தவள். பசியால் அழுத ஞானசம்பந் தருக்கு, ஞானபால் கொடுத்த அம்பிகைக்கு நிகரானவர்கள். அத் தகைய உயர்ந்த இடத்தில் இருக்கும் நீ, மனம் சஞ்ச லப்படலாமா?
மகளே…திருமணமாகி, கர்ப்பப்பை இருந் தும் குழந்தை பாக்கியம் இல்லாத பெண் களையும், திருமணத்திற்கே வழியில்லா த பெண்களையும் நினைத்துப்பார்.. அவர் கள் வேதனையைவிடவா உன் வேதனை பெரிது? சோதனை குழாய் மூலமாவது ஒரு குழந்தையை பெற்றுவிடவேண்டும் என்று லட்ச லட்சமாய் செலவழிப்போரு ம், பத்து ஆண்டு, இருபது ஆண்டுகள் குழந்தை பாக்கியம் இல்லாம ல் சமுதாயத்தின் ஏளன பார்வையால், தங்களுள் ஒடுங்கிப் போகு ம் தம்பதியினரை ஒப்பிடுகையில், நீ, எத்தனைகொடுத்து வைத்தவ ள் …
உனக்கு கர்ப்பப்பை இல்லாததனால், சி னைமுட்டை உற்பத்தி இல்லை; மூன்று நாள் தொந்தரவு இல்லை; கர்ப்பம் தரித் து படும் பத்து மாத அவதி இல்லை; செ த்துப் பிழைக்கும் பிரசவ வேதனை இல் லை; வயிற்றை கிழித்து, குழந்தையை எடுக்கும் சிசேரியன் இல் லை; கர்ப்பப் பை புற்று நோய் வராது; ‘மெனோபாஸ் பீரியடு’ வந்து ஹார்மோன் ஏற்ற, இறக்க த்தால் மனதாலும், உடலாலும் அவதியுற மாட்டாய்.
இத்தனை கஷ்டங்களையும், அனுபவிக்காமல், தங்க விக்ரகம் போ ன்ற ஒரு குழந்தைக்கு நீ தாய் ஆகி இருக்கின் றாய். ஆனால், உனக் குமுன், உன் கணவனை மணந்தவளோ, இத்தனை கஷ்டங்களையு ம் சுமந்து, தன் உயிரைக் கொடுத்து, உனக்காக ஒரு குழந்தையை பெற்று கொடுத்துவிட்டு, அத ன் மழலை இன்பத்தை அனுபவிக்காம ல் போய் சேர்ந்துவிட்டாள். உண்மையில் அவள் அல்ல வா அபாக்கி யவாதி!
ஒரு குழந்தையை பெற்றெடுப்பதில் என்ன சிற ப்பு இருக்கிறது? அக்குழந்தையை நல்லமுறை யில் வளர்த்து, சமுதாயத்திற்குமுன் மாதிரியா க கொண்டு வருவதில் அல்லவா அந்த தாயின், தாய்மையின் சிறப்பு இருக்கிறது!
எனக்குத் தெரிந்த செவிலியர் பெண் ஒருத் தி, ஆயிரக்கணக்கான பிரசவங்களுக்கு துணை நின்றவள். ‘குழந்தையை வெளியில் எடுத்து, தொப்புள் கொடி கத்தரித்து, அசுத்த ங்களை சுத்தம் செய்யும்போ து கிடைக்கும் ஆனந்தம் இருக்கிறதே… அது, வேறு எதிலு ம் கிடைக் காது…’ என்பார்.
நீ, உன் பிறவிக்குறையை நினைத்து மருகம ருகத்தான் அற்பர்களின் நாக்கிற்கு குஷி ஏற் படும்; மாறாக, ‘இன்னொரு குழந்தை எப் போது ?’ என்று கேட்டால், ‘இதோ என் தங்கக் கட்டி. இவள் ஒன்றே போதும்; இவள் ஆயிரம் குழந்தைக ளுக்கு சமமானவள்.’ என்று பெருமை பேசு; மகளே! உனக்கும், உன் கணவ னின் குழந்தைக்கும் பூர்வஜென்ம பந்தம் இருப்பதாக நம்பு. பத்து, பதி னைந்து ஆண்டுகள் நீ பெறாத பிள் ளையை, தாய்பாசத்தை கொட்டி வள ர்த்தால், குழந்தையின் சாயல், உன் னை ஒத்து மாறிவிடும்.
‘சித்தி’ என்ற வார்த்தையை தமிழ் சினி மாவும், இலக்கியமும் பொய் புனைவு செய்து, கொடுமைக்காரி என்ற அர்த்தத் தை வெளிப்படுத்துகின்றன. சித்திகளில் சொக்கத் தங்கங்களும் உண்டு என்ப தை உன்னைப் பார்த்து, இந்த உலகம் தெரிந்து கொள்ளட்டும்.