Home இரகசியகேள்வி-பதில் காதலியை தொடவேண்டும் என்று தோன்றவில்லையே.. ஏன் ?

காதலியை தொடவேண்டும் என்று தோன்றவில்லையே.. ஏன் ?

40

காதல் திருமணங்கள் தோல்வியடையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பல்வேறு காரணங்களால் திருமணத்தின் தொடக்கத்திலிருந்த காதலும், இன்பமும் பின்பு நீடிப்பதில்லை, நீடித்து இருக்கும் திருமணங்களிலும் காதலும் இன்பமும் இருக்கும் என்பதில்லை.

புதுமைப்பித்தனின் ஒரு சிறுகதையில் வருவது போன்று கணவனும் மனைவியும் தேய்ந்துபோன சக்கரங்கள் போல் பழகிப் போவதும், அதுவே அவர்களுக்கு வசதியாகவும் இருப்பதால் திருமணங்கள் நீடிக்கின்றன.

திருமணமான தம்பதியினர் அதே நிலையில் நீடிப்பது கிடையாது. ஆண் மகன் வெளியே சென்று சம்பாதித்தால் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், வீட்டில் இருக்கும் பெண் அடங்கிப்போகிறவளாகவும் மாறுகின்றனர்.

உடல் நலம், பணச் சிக்கல்கள், தினசரி மன இறுக்கங்கள் இவை எல்லாமே கணவன் – மனைவியின் நெருங்கிய அன்பை பாதிக்கின்றன. இருவரும் ஒன்றாகச் செலவிடும்நேரத்தையும் குறைக்கின்றன.

வாழ்நாள் முழுவதும் அன்பு நிலைத்திருப்பதற்கு, தம்பதிகளுக்குச் சில யோசனைகள்;

அன்பு மற்றும் காதல் தானாக நிலைப்பதில்லை.

நாம் எதை எதிர்பார்க்கிறோமோ அதை நாம் முதலில் வழங்க வேண்டும் என்றொரு பழமொழி இருக்கிறது. காதலும், அன்பு ம் தொடர நீங்கள் தான் தொடர்ந்து முயற்சி எடுக்க வேண்டும். நேரம் ஒதுக்க வேண்டும். நீங்கள் அன்பு செலுத்தாவிட்டால் உங்களுக்குப் பலனாக அன்பு கிடைப்பது இல்லை. இதனை உணர்ந்து காதலையும் அன்பையும் பலப்படுத்த தொடர்ந்து முயற்சிக்க வேண்டும்.

மனைவிக்கும் கணவருக்கும் மதிப்பு கொடுங்கள்

மனைவிதானே? இதையெல்லாம் சொல்லவேண்டியதில்லை அல்லது சொன்னபடி இன்று திரைப்படத்துக்குப் போகாமல் நாளை போய்க்கொள்ளலாம் என எண்ணுவீர்கள்.

‘மனைவிதானே’ என நீங்கள் எடுத்துக் கொள்வதை ‘ மதிக்க வில்லை’ என அவர்கள் எடுத்துக் கொள்வார்கள்.

குறைகளைப் பெரிதுபடுத்தாதீர்கள்

காதலி\ காதலன் ஒரு மனிதர்தான். யாராக இருந்தாலும் குறைகள் இருக்கும். என்வே, குறையற்ற, பிழையற்ற மனிதரைத்தான் ஏற்றுக்கொள்வேன் என எண்ண வேண்டாம்.

ஊக்கம் கொடுங்கள்;

உங்கள் காதலன் \ காதலி உங்களையே நூறு சதவீதம் சார்ந்து வாழ வேண்டுமென எண்ணாதீர்கள். அவர் தனக்கென வேலை, நண்பர்கள், பொழுது போக்குகள் வைத்திருப்பதை உற்சாகப்படுத்துங்கள். தனியாக வளர ஊக்கம் கொடுங்கள், தனிப்பட்ட வளர்ச்சியடைந்த இருவரிடையே உறவு நீடித்துள்ளது எனவும் அவர்கள் மனம் ஒத்தவர்களாக வாழ்வை நடத்துகிறார்கள் எனவும் ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன.

வற்புறுத்தாதீர்கள்

உங்கள் துணை பாலுறவை விரும்பவில்லை என்றால் விட்டுக் கொடுங்கள். வற்புறுத்தாதீர்கள். காலம் இருக்கிறது. பாலுறவு மட்டுமின்றி, அவருக்கு விரும்பமில்லாத எதிலும் உங்கள்வற்புறுத்தல் தேவையற்றது என்பதைப் புரிந்து நடந்து கொள்ளுங்கள்.

காதலைத் தொடருங்கள்

உங்களுடைய ரொமாண்டிக் காதலை விட்டு விடாதீர்கள். திருமணத்துடன் எல்லாம் முடிந்து விடவில்லை. காதல் கவிதைகள் எழுதுவது,

பரிசுப் பொருள்களைக் கொடுப்பது, காதல்கடிதங்கள் கொடுப்பது, கடற்கரைக்கு அழைத்துச் செல்வது என எல்லாவற்றையும் தொடருங்கள். மேலே சொன்ன ஆலோசனைகளைத் தீவிரமாக்க் கடைப் பிடித்தாலே தம்பதியரின்இல்லற வாழ்க்கை, நல்லறமாக செழிக்கும்.
———————————————-
என் வயது 24. காதலியைப் பார்க்கும்போது பேச வேண்டும்; எப்போதும் அவள் என்னுடன் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஆனால், தொட வேண்டும் என்றொ, உறவுகொள்ள வேண்டும் என்றோ தோன்றவில்லை பிற்கால தேவைகள், குழந்தைகள், , பொது அறிவு இவற்றைப் பற்றிவும் விவாதிப்பது உண்டு. நான் வேறு பெண்ணிடம் உறவுகொண்டதும்இல்லை. என் நண்பர்கள் நேர் மாறாக உள்ளனர். நான் நடப்பது சரியா?

நீங்கள் நடந்து கொள்வது போன்ற ‘ ஒருவனுக்கு ஒருத்தி’ முறைதான் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் நலமானது; இயல்பானதும் கூட . மற்ற பெண்களிடம் நட்பு முறையில் பழகுவது சரியானதுதான். நண்பர்கள் தவறு செய்கிறார்கள் என்பதால் நாமும் தவறு செய்ய வேண்டும் என்பதில்லை.

நான் திருமணமானவன். சொந்தமாக நிறுவனம் நடத்துகிறேன். பணிபுரியும் பெண் உதவியாளருடன் தொடர்பு உள்ளது. இது வலுகட்டாயமாக ஏற்பட்டதல்ல. தானாக இருவருக்கும்நெ ருக்கம் ஏற்பட்டது. இதைத் தொடர்வது தவறு என்பது தெரிந்தாலும் என்னால் விட முடியவில்லை. என்ன செய்வது? இது போன்ற உறவு உள்ளவர்கள் என்ன செய்கிறார்கள்?

’செக்ஸ் ஹராஸ்மெண்ட்’ என்பது வேறு . இதுபோன்ற தவறான செக்ஸ் நெருக்கம் என்பது வேறு. தவறான செக்ஸ் நெருக்கம் என்பது உலகம் முழுவதும் பரவலாக உள்ளது.

ஏன் இந்த உறவு ஏற்படுகிறது?

ஆண்களுக்கு மனைவியைத் தவிர, பிற பெண்களுடன் உறவுகொள்வதில் உள்ள ஆர்வம்.

ஆண்கள் தங்கள் அதிகாரத்தின் மூலமாகக் கிடைத்த வாய்ப்பைப் பயன்படுத்துதல்.

தங்களுடைய ஆசிரியர் அல்லது மேலதிகாரிகளின் நல்லெண்ணத்தை நட்பை இழந்துவிடுவோமோ என்று பெண்களின் மனத்திலுள்ள பயம்.

இதனால் மண வாழ்க்கை திசை மாறிப்போய் வாழ்க்கை நரகமாகி விடலாம். எனவே, இத்தகைய தவறான உறவில் ஈடுபடுவதைத் தவிர்ப்பதுதான் நல்லது.