Home உறவு-காதல் ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

ஆத்துக்காரர்(ரி) அல்வா பார்ட்டியா ? கண்டுபிடிக்கலாம் !

45

என் ஆத்துக்காரர் ரொம்ப நல்லவர் ன்னு பெண்கள் பேசறதைக் கேட்பதே சந்தோஷம் தான். ஆனா நிலமை எப்போ வேணும்னாலும் மாறலாம். சைக்கிள் கேப் கிடச்சா போதும் ஆண்கள் ஒரு லாரியையே ஓட்டிட்டு வந்துடுவாங்க. சந்தேகப் படுங்கன்னு சொல்லல ! ஆனா சந்தேகப்படலாமா வேண்டாமான்னு கீழே படிச்சு தெரிஞ்சுக்கங்கன்னு சொல்றேன்.

உங்க பார்ட்னர் கொஞ்ச நாளாவே “அந்த” விஷயத்துல ஆர்வமே இல்லாம இருக்கிறாரா ? முழிச்சுக்கோங்க சம்திங் ராங் !

பாத்ரூம் போனா கூட செல்போனும் கையுமா போறாரா. கீழேயே வைக்காம எப்பவுமே கையில செல்போனை வெச்சிருக்காரா ? ஐயா எங்கயோ மாட்டியிருக்கலாம் வாட்ச் பண்ணுங்க
என் கணவன் இப்பல்லாம் ரொம்ப திருந்திட்டாரு. கண்ணாடி முன்னாடி தான் ரொம்ப நேரம் நிக்கறாருன்னு பெருமையா நினைக்காதீங்க அம்மணி ! இது ரெட் சிக்னல்.
அடிக்கடி பிரண்டைப் பாக்கணும், ஆபீஸ் அவுட்டிங், நைட் ஷிப்ட், லேட் வர்க் இப்படியெல்லாம் சகட்டு மேனிக்கு சொல்றாரா உங்கள் கணவன் ? கொஞ்சம் கவனிக்க வேண்டிய விஷயம் இது !
உங்களுக்குப் பிடிக்காத ஹாபி எல்லாம் அவருக்குப் புடிக்குதா ? ஏதோ பண்ணட்டும்னு விட்டுடாதீங்க. ஒரு அரைக் கண் இருக்கட்டும்.
“சாரி.. வயிறு சரியில்லை”, “சாரி… ரொம்ப பசிச்சுது வெளியே சாப்பிட்டேன்” ன்னு அடிக்கடி சொல்றாரா ? உஷார் உஷார் !
அடிக்கடி இ-மெயில் அட்ரசை எல்லாம் மாத்தறாரா ? வீட்டுக் கம்ப்யூட்டர்ல தினமும் “ஹிஸ்டரி, குக்கீஸ் எல்லாம் அழிச்சுடறாரா ? சேட் விண்டோஸ் எல்லாம் சுத்தமா இருக்கா ? ம்.. …ஹூம்.. சம்திங் ஃபிஷ்ஷி !
நீங்க ஏதாச்சும் கேட்டா ரொம்ப விறைப்பா பதில் சொல்றாரா ? சொன்ன பதிலுக்கு உங்க முக பாவம் எப்படி இருக்குன்னு கவனிக்கறாரா ? முகத்துல எக்ஸ்பிரஷன் சரியில்லையா ? உள்ளுக்குள்ள மணி அடிக்கட்டும் !
ஒரு வார்த்தைல சொல்ல வேண்டிய பதிலுக்கு பத்து நிமிசம் பேசறாரா ? கொஞ்சம் பாஸ்டா சவுண்டா பேசறாரா ? ஐயாவுக்கு மனநிலை கொஞ்சம் தடுமாற்றம்ன்னு புரிஞ்சுக்கோங்க.
நீங்கள் கேட்கும் கேள்விக்கு ரொம்ப தூரமாய் நின்று பேசுகிறாரா ? இல்லேன்னா ரொம்ப ரொம்ப கிட்டே வந்து பேசறாரா ? இல்லேன்னா எதையோ அடுக்கி வைத்துக் கொண்டே பேசுகிறாரா ? நிலமை கொஞ்சம் டவுட் புல் தான் !
திடீரென தனிமை தேடுகிறாரா ? அவருடைய செல்போன் பில், பேங்க் டீட்டெயில்ஸ், இமெயில் பாஸ்வேர்ட் எல்லாம் இடம் மாறுகிறதா ! கணக்கில் வராமல் பணம் செலவாகிறதா ? ஐயையோ… விஷயம் சீரியஸ் !
பொண்ணுங்களோட செண்ட் வாசனை, லிப்ஸ்டிக் இத்யாதி வகையறாக்கள் நாம சொல்லியா தெரியணும் ? எத்தனை சினிமா பாத்திருப்போம் ! கவனிங்க.
கடுப்பாகாதீங்க ஆண்களே….. பெண்களுக்கும் இது பொருந்தும்