Home ஆண்கள் ஆரோக்கியமான மற்றும் வலிமையான விந்தணுக்களைப் பெறுவது எப்படி?

ஆரோக்கியமான மற்றும் வலிமையான விந்தணுக்களைப் பெறுவது எப்படி?

55

கருத்தரிக்க விரும்புகிறீர்களா? அப்படியெனில், விந்தணுக்களின் ஆரோக்கியத்தையும், வலிமையையும் அதிகரிக்கும் முயற்சியில் முதலில் ஈடுபடுங்கள். இதனால் கருத்தரிக்க முயற்சிக்கும் போது எளிதில் கருத்தரிக்க முடியும். அதற்கு ஒவ்வொரு ஆணும் விந்தணுவின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும் வழி என்னவென்று தெரிந்து கொள்ள வேண்டும்.

இங்கு ஒவ்வொரு ஆணும் ஆரோக்கியமான மற்றும் வலிமையான விந்தணுக்களைப் பெற பின்பற்ற வேண்டிய சில விஷயங்களை தமிழ் போல்ட் ஸ்கை பட்டியலிட்டுள்ளது. அதைப் படித்து பின்பற்றினால், நிச்சயம் விந்தணுவின் ஆரோக்கியம் மேம்படும்.

வால் நட்ஸ் விந்தணுவின் ஆரோக்கியத்தையும் வலிமையையும் அதிகரிக்க வால்நட்ஸ் உதவுவதாக மருத்துவர்கள் பரிந்துரைக்கின்றனர். ஏனெனில் வால் நட்ஸில் ஜிங்க் சத்து ஏராளமாக உள்ளதால், அது டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரித்து, விந்துவின் இயக்கத்தை மேம்படுத்தும்.

வாழைப்பழம் மற்றும் பாதாம் ஆண்கள் வாழைப்பழம் மற்றும் பாதாமை தினமும் சாப்பிட்டு வந்தால், விந்தணு சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வருவதைத் தடுத்து, உறவில் ஈடுபடும் போது சிறப்பாக செயலாற்ற உதவும் மற்றும் எளிதில் கருத்தரிக்க உதவும்.

ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி ஆரஞ்சு மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்களில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள், உடலில் உள்ள டி.என்.ஏ பாதிக்கப்படுவதைத் தடுக்கும் மற்றும் விந்தணுவின் செயல்பாட்டை மேம்படுத்தும்.

ஜிம் செல்லவும் பாடி பில்டர் போன்று தசைகளை வளர்க்க மட்டும் ஜிம் உதவுவதில்லை. ஆண்களின் உடலில் டெஸ்டோஸ்டிரோன் அளவை அதிகரிக்க சில கடுமையான உடற்பயிற்சிகளும் உதவும். எனவே தினமும் தவறாமல் உடற்பயிற்சி செய்யுங்கள்.

புகைப்பிடிப்பதை தவிர்க்கவும் உங்களுக்கு புகைப்பிடிக்கும் பழக்கம் இருந்தால், அதை உடனே தவிர்க்க வேண்டும். ஒருவேளை அப்பழக்கம் இல்லாமல் புகைப்பிடிப்போருடன் இருப்பீர்களானால், உடனே அப்பழத்தைக் கைவிடுங்கள். ஏனெனில் சிகரெட்டில் இருந்து வெளிவரும் புகையை சுவாசித்தாலே, விந்தணுவின் டி.என்.ஏ மற்றும் விந்துவின் செயல்பாடு பாதிக்கப்படும்.

பாதுகாப்பான உடலுறுவு கிளமீடியா மற்றும் மேக வெட்டை போன்ற பாலியல் நோய்த்தொற்றுகள் விந்தணுவின் எண்ணிக்கையை பாதிக்கும். எனவே பாதுகாப்பான உடலுறவில் ஈடுபடுங்கள்.

குளிர்ச்சியான அந்தரங்க உறுப்பு ஆண்கள் வேலை செய்யும் போது மடியில் லேப்டாப்பை வைத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும். மேலும் மொபைலை பேண்ட் பாக்கெட்டில் வைப்பதையும் தவிர்க்க வேண்டும். இதனால் அவைகளில் இருந்து வெளிவரும் கதிர்வீச்சுகள் மற்றும் வெப்பத்தில் இருந்து விந்தணுக்களின் எண்ணிக்கை மற்றும் ஆரோக்கியம் பாதிக்கப்படுவதைத் தடுக்கலாம்.