Home ஜல்சா கணவனின் பார்ன் அடிக்ட், இல்வாழ்க்கையை பாதிக்கிறது

கணவனின் பார்ன் அடிக்ட், இல்வாழ்க்கையை பாதிக்கிறது

21

மும்பையை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவன் பார்ன்-க்கு அடிமையாகி இருப்பதாகவும். அதனால் தங்கள் இல்லற வாழ்க்கையில் எதிர்மறை தாக்கங்கள் உண்டாகிறது. எனவே, பார்ன்-க்கு நீதிமன்றம் தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்.

சுப்ரீம்கோர்ட்! மும்பையை சேர்ந்த பெண் ஆபாச இணையதளங்களை முடக்க வேண்டும் என சுப்ரீம்கோர்ட் படியேறி உள்ளார். ஆன்லைன் பார்ன் காரணத்தால் இல்லறம் பாதிக்கப்படுகிறது என அவர் தனது கருத்தை முன்வைத்துள்ளார்.

படித்த நபரே இப்படியா? தனது கணவர் நன்கு படித்தவர். அவரே பார்ன் விஷயத்தில் இப்படி இருக்கிறார். இதனால் எங்கள் வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது. இது இளைஞர்கள் வாழ்க்கையில் இன்னமும் மிகப்பெரிய அளவில் தாக்கத்தை உண்டாக்கும் என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.

நேரம் விரயம் ஆகிறது! தனது கணவர் அதிக நேரத்தை பார்ன் பார்க்க செலவிடுகிறார். அதிலும் இன்று இன்டர்நெட் மிகவும் எளிமையாக கையாள முடிவதால் பார்ன் வேகமாக பரவுகிறது. இதனால் தனது கணவர் வக்கிரமாக மாறி வருவதாகவும். இதனால் இல்வாழ்க்கை சீரழிந்துவிட்டது என்றும் அவர் மனுவில் கூறியுள்ளார்.

சமூக ஆர்வலர்! இம்மனுவை முன்வைத்தவர் ஒரு சமூக ஆர்வலர். இவருடைய முப்பது வருட இல்வாழ்க்கையில் இப்போது பார்ன் மிக பெரிய இடைஞ்சலாக உள்ளது என தெரிவித்துள்ளார். அதிலும் இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான ஒருவர் இப்படி மாறியிருப்பது கவலை அளிக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார்.

முந்தைய தடை! ஏற்கனவே சுப்ரீம்கோர்ட் குழந்தைகள பார்ன் கன்டன்ட் இருக்கும் இணையதளங்களை முழுமையாக தடை செய்ய உத்தரவிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.