Home ஆரோக்கியம் பீர் தொப்பையைக் குறைக்க சில குறிப்புகள்

பீர் தொப்பையைக் குறைக்க சில குறிப்புகள்

20

நண்பர்களுடன் ஜாலியாக வெளியே சென்று பார்ட்டியில் பீர் அருந்தி மகிழ்ச்சியாகப் பொழுதைக் கழிப்பது நம்மில் பலருக்குப் பிடித்த ஒன்றுதானே! ஆனாலும் அதிகமாக இதுபோன்ற பானங்களை அருந்துவதால் அதிலிருந்து வரும் கொழுப்பு வயிற்றுப் பகுதியில் சேர்ந்துவிடுகிறது. இதனால் இளம் வயதினருக்கும் தொப்பை விழுந்துவிடுகிறது! இதைக் குறைக்க என்ன செய்வது? உணவை மிகவும் குறைக்காமலே கொழுப்பைக் குறைக்க வேண்டுமானால், தொடர்ச்சியாக கொழுப்பை எரிக்க வேண்டும். பயந்து போய் இந்தச் சின்ன சந்தோஷத்தை அறவே விட்டுவிடலாம் என்று முடிவு செய்யும் முன்பு, இந்தப் பிரச்சனையில் இருந்து விடுபட முடியுமா எனப் பாருங்கள், அதற்காகத் தான் இந்தக் குறிப்புகள்!

கார்டியோ பயிற்சிகளை அதிகம் செய்யுங்கள்

ஒரு வாரத்திற்கு குறைந்தது 150 நிமிடங்களாவது இதயத் துடிப்புக்கு நன்கு பயிற்சி தரும் கார்டியோ பயிற்சிகளைச் செய்யுங்கள். கூடுதலாக உள்ள கலோரிகளை எரிக்கவும், வயிற்றுப் பகுதியில் இருந்து தேவையற்ற சதையை அகற்றவும் கார்டியோ பயிற்சிகள் மிகவும் உதவும். கார்டியோ பயிற்சி செய்யும்போது துரிதமாக அதே சமயம் தீவிரமாக ஆற்றல் செலவிடப்படும்.

அளவில்லாமல் குடிப்பதைத் தவிர்க்கவும்

எப்போதும் இப்படி தொப்பை இல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், சராசரியாக ஒரு முறை எவ்வளவு பீர் அருந்த வேண்டும் என்பதற்கு நீங்கள் கட்டுப்பாடு வைத்துக்கொள்ள வேண்டும். வாரம் ஒன்றுக்கு 1-2 பீர் என்ற அளவில் அருந்தினால், பரவாயில்லை.

பிளாங்க் பயிற்சிகள்

 

சரியான முறையில் பிளாங்க் பயிற்சிகளைச் செய்தால் வயிற்றுத் தசைகளுக்கு கடுமையான பயிற்சி கிடைக்கும், இதனால் அப்பகுதி நன்கு டோன் ஆகும். உங்கள் உடலின் மேல் பகுதி முழங்கைகளில் தாங்கியிருக்கும்படி, புஷ் அப் செய்யும் நிலைக்குச் செல்லவும். பிட்டங்களும் முதுகும் தோள்பட்டைகளுடன் ஒரே கொட்டில் சீராக இருக்க வேண்டும். இதே நிலையில் குறைந்தது 60 வினாடிகள் இருக்கவும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி 5 செட்டுகள் செய்யவும்.

சரியான உணவுப் பழக்கம்

ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைக் கொண்டுவாருங்கள். அடிக்கடி நல்ல உணவு வகைகளை உண்டு உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை அளியுங்கள். பழங்கள், காய்கறிகள் அதிகம் சாப்பிட்டு, அதிகம் நீர் அருந்தினால் உடலில் இருந்து நச்சுப் பொருள்கள் வெளியேறும், இதனால் அதிக ஆல்கஹால் எடுத்துக்கொள்வதால் ஏற்படும் நீர் கோர்த்துக்கொள்ளுதல் என்ற பிரச்சனையைத் தவிர்க்கலாம்.

லைட் பீருக்கு மாறலாம்

பீர் வேண்டும், ஆனால் பீர் தொப்பை மட்டும் வேண்டாம் என்று நினைத்தால், கொஞ்சம் புத்திசாலித்தனமாக நடந்துகொள்ள வேண்டும், அதாவது ஸ்ட்ராங் பீர்களை விட்டுவிட்டு லைட் பீர்களுக்கு மாற வேண்டும். இது ஒரு நல்ல வழி, ஏனெனில் இது ஸ்ட்ராங் பீரின் அதே சுவையைக் கொண்டிருக்கும், ஆனால் ஒரு முறைக்கு 80 கலோரி மட்டுமே இருக்கும். அதற்காக, நீங்கள் இஷ்டம் போலக் குடிக்கலாம், மற்ற நடவடிக்கைகள் எல்லாவற்றையும் விட்டுவிடலாம் என்று நினைக்க வேண்டாம். சந்தோஷமாக இருங்கள்! ஆனால் அளவோடு!

ஓய்வு

எடுத்துக்கொள்ளும் கலோரி அளவைக் கட்டுப்படுத்துவதும் உடற்பயிற்சி செய்வதும் முக்கியம் தான், அதே சமயம் நீங்கள் தேவையான அளவு ஓய்வெடுக்காவிட்டால் இவற்றின் பலன் முழுமையாகக் கிடைப்பது சந்தேகம் தான். ஒவ்வொரு நாளும் இரவில் 7-8 மணிநேரம் தூங்க வேண்டும். இரவில் நன்றாகத் தூங்கி எழுந்தாலே ஃபிட்டாகவும் ரிலாக்சாகவும் இருப்பதை நீங்களே உணரலாம்.

சரியாகச் சாப்பிடுவது, உடற்பயிற்சி செய்வது, பீர் அளவைக் கட்டுப்பாட்டில் வைப்பது இது போன்ற நடவடிக்கைகளை எல்லாம் தொடர்ந்து சில மாதங்கள் செய்ய வேண்டும், அப்போது தான் கவனிக்கத்தக்க மாறுதல்களைக் காண முடியும். ஆகவே, சீக்கிரமே பலன் இல்லை என்று நம்பிக்கையிழந்து விட்டுவிடக் கூடாது. தொடர்ச்சியாகச் செய்வது தான் முக்கியம், உடனே வெற்றி வேண்டும் என்று நினைக்கக்கூடாது. பொறுமையாக இருங்கள், இந்த ஆலோசனைகளைப் பின்பற்றுங்கள், பலன் கிடைக்கும்!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள மருத்துவ விவரங்கள் தகவலுக்காக மட்டுமே.உடல்நலம் சார்ந்த எந்த முடிவுகளையும் எடுக்கும் முன் அல்லது குறிப்பிட்ட மருத்துவ நிலை பற்றிய வழிகாட்டலுக்கு உங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறவும்.