Home பெண்கள் உடல் கட்டுப்பாடு உடல் எடை குறைய வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடுங்க!

உடல் எடை குறைய வேண்டுமா? இதையெல்லாம் சாப்பிடுங்க!

26

உடல் எடையை குறைப்பதற்கு உடற்பயிற்சி, டயட் பின்பற்றுதல் மட்டும் போதாது. உணவிலும் கவனம் செலுத்த வேண்டியது அவசியம் ஆகும்.

எலுமிச்சை: எலுமிச்சையில் வைட்டமின் சி உள்ளது. விட்டமின் சி நிறைந்த அனைத்து உணவுகளுமே, கொழுப்பை கரைக்க கூடியது. காலையில் 1 டம்ளர் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறு கலந்து குடித்தால், உடலிலுள்ள கழிவுகளை நீக்கும். தொடர்ந்து எலுமிச்சை சாறு அருந்தினால் இருமல், சளி, தலைவலி, அஜீரண கோளாறு ஆகியவை வராது.

சோம்பு: சோம்பில் தாதுக்கள் நிறைந்துள்ளன. உடலில் செரிமான சக்தியை அதிகப்படுத்தும். இரவு உறங்குவதற்கு முன்பு, சோம்பை வெது வெதுப்பான நீரில் ஊற வைத்து காலையில் அந்தத் தண்ணீரை குடிக்க வேண்டும்.

க்ரீன் டீ : க்ரீன் டீயில் ஆன்டி ஆக்சிடெண்ட் சத்துக்கள் அதிகம் உள்ளன. சர்க்கரை இல்லாமல் தினமும் டீ பருகினால் உடலிலுள்ள கொழுப்பு குறையும். இதில் உள்ள இதர சத்துக்கள் ரத்தக்கொதிப்பை கட்டுப்படுத்தும்.

தர்பூசணி: தர்பூசணியில் நீர்ச்சத்து முழு அளவில் உள்ளது . இதில் அதிக விட்டமின்களும் தாதுக்களும் உள்ளன. இது உடல் எடையை குறைக்க உதவும். தர்பூசணி நம் உடலில் கொழுப்பை சேர விடாமல் தடுக்கும்.

காய்கறிகள்: காலிஃபிளவர், முட்டைக்கோஸ் போன்ற காய்கறிகள் உணவில் அவசியம் சேர்த்துக் கொள்ள வேண்டும் .