Home சமையல் குறிப்புகள் கேரளா ஸ்பெஷல்: மசாலா மீன் கட்லெட்

கேரளா ஸ்பெஷல்: மசாலா மீன் கட்லெட்

19

இந்த ருசியான மசாலா மீன் கட்லெட் செய்து ரசித்து ருசித்துப் பாருங்கள்.

தேவையான பொருட்கள்

மீன் துண்டுகள் – 1/2 கிலோ

கொத்தமல்லி தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்ததூள் – 1/2 டீஸ்பூன்
மிளகுத்தூள் – 1/4 டீஸ்பூன்
இஞ்சி – 1 டீஸ்பூன்
வினிகர் – 1 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப
எண்ணெய் – 1/4 கப்
வெங்காயம் – 1/2 கப் ( நறுக்கவும்)
பச்சை மிளகாய் – 1 டீஸ்பூன்
முட்டை – 1
ரொட்டித்துகள் – சுவைக்கேற்ப

செய்முறை

மீனை கொத்தமல்லி தூள், மிளகுத்தூள், இஞ்சி, வினிகர், உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி வேக வைக்கவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

வேக வைத்து ஆற வைத்த மீன் துண்டுகளை அதில் சேர்த்து வதக்கி சிறிய பால்ஸ் போன்ற வடிவத்தில் பிடித்துக் கொள்ளவும்.

ஒரு சிறிய கிண்ணத்தில் முட்டையை ஊடைத்து ஊற்றி அதில் உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

சிக்கன் பால்ஸை அடித்து வைத்துள்ள முட்டை கலவையில் போட்டு எடுத்து மீண்டும் ரொட்டித்துகளில் இட்டு இருபுறமும் பிரட்டி சூடான எண்ணெய்யில் போட்டு பொரித்தெடுக்கவும்.