Home உறவு-காதல் காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க!!!

காதலன் பொறாமைப்படுறானா?.. மனம்விட்டுப் பேசுங்க!!!

21

காதல் வாழ்க்கையில் காதலர்களுக்கிடையில் பல பிரச்சனைகள் வரும். ஆனால் அந்த பிரச்சனையை நீண்ட நாட்கள் வைத்திருக்கக் கூடாது. இதனால் இருவரும் பிரியும் நிலைமை கூட ஏற்படும். பெரும்பாலும் பிரச்சனை வருவதற்குக் காரணம், காதலிக்கு ஆண் நண்பர்கள் இருப்பதாலும், அவளது மற்ற நடவடிக்கைகளாலும் வருகிறது. மேலும் காதலன் அவளை நன்றாக புரிந்து கொள்ளாதது என்றும் சொல்லலாம்.

பொறாமை என்பது பொதுவாக எல்லோருக்கும் இருப்பது தான். இத்தகைய பொறாமை ஒரு நல்ல உறவையும் அழிக்கும். காதலன் பொறாமை கொள்கிறான் என்றால் அதற்கு காதலியின் நடவடிக்கைகளாலே வரும். அதிலும் காதலிக்கு ஆண் நண்பர்கள் இருந்தால் சொல்லவே வேண்டாம்.

காதனுக்குப் பிடிக்கவில்லை என்பதற்காக நண்பர்களை விட முடியாது தான், அதற்காக காதலையும் விட முடியாதே. ஆகவே பக்குவமாகப் பேசி சமாதானப்படுத்த வேண்டும். முடிந்த அளவு நண்பர்களிடம் பேசுவதை குறைத்துக் கொள்ளலாம்.

அவனுடைய சந்தேகங்களை முடிந்த அளவு பேசி சரி செய்ய வேண்டும். மேலும் அவனுக்கு நீ எவ்வளவு முக்கியம் என்பதையும் தெரிய வைக்க வேண்டும். உன் வாழ்க்கையில் அவன் எந்த இடத்தில் இருக்கிறான் என்பதையும் சொல்லி புரிய வைக்கவும்.

சந்தோஷமான காதல் வாழ்க்கை அமைய வேண்டுமென்றால், சந்தேகம் மற்றும் தெளிவற்ற மனம் ஆகியவை இருக்கக் கூடாது. காதலனிடம் நம்பிக்கையுடன் மனம்விட்டுப் பேசுங்கள். அப்படி இருந்தும் நம்பவில்லையென்றால், பிறகு உங்கள் வாழ்க்கை, நீங்கள் முடிவு எடுக்க வேண்டியது தான்.