Home சமையல் குறிப்புகள் செட்டிநாடு அவித்த முட்டை பிரை

செட்டிநாடு அவித்த முட்டை பிரை

21

அனைவருக்கும் முட்டையில் செய்த உணவுகள் பிடிக்கும். இப்போது அவித்த முட்டையை வைத்து சூப்பரான பிரை செய்வது எப்படி என்று விரிவாக கீழே பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

முட்டை – 4
பச்சைமிளகாய் – 1 டீஸ்பூன்
புதினா – சிறிதளவு
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – 1 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – அரை டீஸ்பூன்
எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன்

செய்முறை :

* கொத்தமல்லி, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும். ப.மிளகாயை பேஸ்ட் செய்தும் போடலாம்.

* முட்டையை வேக வைத்து ஓட்டை உடைத்து கத்தியால் முட்டையை சற்று கீறி கொள்ளவும். அப்போது தான் மசாலா உள்ளே போகும்.

* அடுப்பில் நான் – ஸ்டிக் பேனை வைத்து 4 டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பச்சைமிளகாய்/பேஸ்ட்டை சேர்த்து வதக்கவும்.

* மிளகாயின் பச்சை வாசனை போனதும் புதினாவைச் சேர்த்து ஒரு பிரட்டு புரட்டவும்.

* இத்துடன் மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், உப்பு மற்றும் மிளகுத்தூளைச் சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து நன்கு கலக்கவும்.

* பொடிகளின் பச்சை வாசனை போனதும் வேக வைத்த முட்டையைச் சேர்த்து கிளறவும்.

* முட்டையில் மசால் ஏறிவிட்டதா என்று உறுதி செய்துவிட்டு அடுப்பை அணைத்து பரிமாறவும்.

* சூப்பரான செட்டிநாடு அவித்த முட்டை பிரை ரெடி.

குறிப்பு :

பச்சைமிளகாயை பேஸ்ட்டாககூட உபயோகிக்கலாம்.