Home சமையல் குறிப்புகள் இதெல்லாம் இருந்தால் தான் முட்டை பிரியாணி ருசியா இருக்கும்!

இதெல்லாம் இருந்தால் தான் முட்டை பிரியாணி ருசியா இருக்கும்!

23

முட்டை பிரியாணி உடன் தயிர் ரைத்தா, சிக்கன் கிரேவி சேர்த்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டீ1பூன்
முட்டை – 3 ( வேக வைத்தது)
பாசுமதி அரிசி -1 கப் ( வேகவைத்தது)
பச்சை மிளகாய் – 2
வெங்காயம் – 1
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
தக்காளி – 1
தயிர் – 1/2 கப்
கொத்தமல்லி தழை – 1/4 கப்
புதினா தழை 1/4 கப்
மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
மஞ்சள்தூள் – 1 டீஸ்பூன்
கரம்மசாலா தூள் – 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு – 2 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

மசாலா பொருட்கள்

பிரியாணி இலை 1
மிளகு – 1 டீஸ்பூன்
கிராம்பு – 5
ஏலக்காய் – 3
பட்டை – 1
சோம்பு – 1 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்

செய்முறை

அரிசியை சுத்தமாக கழுவி 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்து குக்கரில் வேக வைத்துக் கொள்ளவும்.

அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் வேக வைத்த முட்டையைப் போட்டு பொன்னிறமாக வறுக்கவும்.

அதனுடன், மசாலா பொருட்கள் ( கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம், ஏலக்காய், பிரியாணி இலை, மிளகு) அனைத்தையும் போட வேண்டும்.

அதில், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வெங்காயத்தை பொன்னிறமாக வதக்கவும்.

பின்னர், கடாயில் இஞ்சி, பூண்டு விழுது, நறுக்கிய தக்காளி, புதினா இலை, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், தனியாதூள் சேர்த்து கிளறி விடவும்.

அடுத்து தயிர் ஊற்றி தேவையான அளவு உப்பு சேர்த்து பச்சை வாசனை போனதும் அதில் வேக வைத்த உதிரி உதிரியான சாதத்தை போட்டு நன்றாக மிக்ஸ் செய்யவும்.

இறுதியாக அதன் மேலாக எலுமிச்சை சாற்றை பிழிந்து விட்டு கமகமக்கும் கொத்தமல்லி தழையை தூவி விட்டு சுவையான முட்டை பிரியாணியை பரிமாறலாம்.

ஆவி பறக்க ருசியான முட்டை பிரியாணி ரெடி!