Home குழந்தை நலம் Doctor X,உங்க வீட்டுக்குழந்தையும் சுட்டிக் குழந்தையா இருக்கணுமா?… அப்போ இதெல்லாம் சொல்லித்தாங்க…

Doctor X,உங்க வீட்டுக்குழந்தையும் சுட்டிக் குழந்தையா இருக்கணுமா?… அப்போ இதெல்லாம் சொல்லித்தாங்க…

24

போட்டி நிறைந்த இன்றைய உலகில் பள்ளிகளில் கற்றுக் கொள்வது மட்டும் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கப் போதாது. உங்கள் குழந்தை படிப்பைத் தவிர வேறு நிறைய விஷயங்களை உங்களிடம் வெளிப்படுத்தலாம்.

இப்படி வீட்டில் கற்றுக் கொள்ளும் பல விஷயங்களாலும் எதிர்காலத்தில் நிறைய சவால்களை சந்திக்கும் துணிவுடைய இளைஞர்களாக வளர்வார்கள். அதில் முக்கியப் பங்கு பெற்றோர்களுக்கு உண்டு.

மூளையை சுறுசுறுப்பாக வைத்துக் கொள்ள இங்கே சில விளையாட்டுகள் கொடுக்கப்பட்டுள்ளன. அதை உங்கள் குழந்தைகளிடம் முயற்சி செய்து பாருங்கள்.

நினைவாற்றலை வளர்க்க

மிகச் சிறிய குழந்தையாக இருந்தால் அவர்களுடைய பொம்மைகளையெல்லாம் எடுத்து வரிசையாக அடுக்கி வையுங்கள். பிறகு அவர்களுடைய கண்களைக் கட்டிவிட்டு ஏதேனும் ஒரு பொம்மையை மட்டும் ஒளித்து வையுங்கள். கட்டை அவிழ்த்துவிட்டு அவர்களிடம் காணாமல் போன பொம்மையை கண்டுபிடிக்கச் சொல்லுங்கள்.

சற்று வளர்ந்த குழந்தையாக இருந்தால் அவர்கள் முன்பாக நிறைய பொம்மையைக் கலைத்துப் போட்டு, 20 முதல் 25 விநாடிகள் அவர்களுக்கு நேரம் கொடுங்கள்.

எல்லா பொருட்களையும் நன்கு கவனித்துக் கொண்ட பின்பு கண்ணை மூடிக்கொண்டு நீங்கள் சொல்லும் ஒவ்வொரு பொருட்களையும் அதிலிருந்து நீக்கச் சொல்லுங்கள்.

இறுதியில் அவர்கள் எத்தனைப் பொருட்களை எடுத்தனர் என்ற எண்ணிக்கையை நினைவில் வைத்திருக்கிறார்களா என்று கேளுங்கள். அப்படி கேட்பது அவர்கள் அடுத்த முறை விளையாடும் போது எண்ணிக்கையை மனதில் வைத்துக் கொள்ள வேண்டுமென்ற பயிற்சியைத் தரும்.

குடும்பத்தினருடன் விளையாடுங்கள்

இரவு நேரங்களில் வீட்டில் எல்லோரும் ஒன்றாக இருக்கும் பொழுது, செஸ், சீட்டாட்டம் போன்ற குழுவுடன் விளையாடும் விளையாட்டுக்களை குழந்தையோடு சேர்ந்து விளையாடலாம்.

அதுபோன்ற விளையாட்டுகள் குழந்தையின் மூளை வளர்ச்சியைத் தூண்டுவதாக அமையும். இப்படி சேர்ந்திருக்கும் பொழுது அது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் குடும்பம் என்ற அமைப்பையும் வலுப்படுத்த உதவுகிறது.

ஆன்லைன் விளையாட்டுகள்

குழந்தைகளின் திறமைகளை வெளிப்படுத்துவது போன்று பல விளையாட்டுகள் இணையத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. அதில் குழந்தைகளின் கல்வியோடு தொடர்புடைய விளையாட்டுக்களும் நிறைய உள்ளன.

பெற்றோர்களும் உங்கள் குழந்தைகளுடன் சேர்ந்து இணையத்தில் விளையாடுங்கள். அது வெறும் விளையாட்டாக மட்டும் இல்லாமல் நீங்கள் அதிகம் விரும்புகிற உங்கள் குழந்தைகளுக்காக அதிக நேரம் செலவிடுவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமையும்.