Home சமையல் குறிப்புகள் ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி

ஆனியன் சிக்கன் வறுவல் செய்வது எப்படி

25

Captureதேவையான பொருட்கள்:

சிக்கன் – 1/4 கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
இஞ்சி, பூண்டு விழுது – 1 டீ ஸ்பூன்
காய்ந்த மிளகாய் – 2
கரம் மசாலாத்தூள் – 1 டீ ஸ்பூன்
மிளகுத்தூள் – 2 டீ ஸ்பூன்
எண்ணெய் – 3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லித்தழை – சிறிதளவு

செய்முறை :

* சின்ன வெங்காயத்தை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்.

* காய்ந்த மிளகாயை 2 ஆக கிள்ளி வைக்கவும்.

* சிக்கனை நன்கு சுத்தம் செய்து விட்டு சிறு சிறுத் துண்டுகளாக்கி கொள்ளவும்.

* ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் முக்கால்வாசி வெங்காயத்தை போட்டு சிறிது வதக்கிய பின்னர் இஞ்சி பூண்டு விழுதினை சேர்த்து வதக்கவும்.

* அடுத்து அதில் சிக்கனை போட்டு வதக்கவும்.

* பின்பு மசாலாத் தூள்களை சேர்த்து சிறிது நேரம் வதக்கி உடனே தேவையான அளவு உப்பு சேர்த்து சிறிதளவு தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மிதமான தீயிலேயே பத்து நிமிடம் வேக விடவும். (இடையில் கிளறி கொள்ளவும்.)

* சிக்கன் வெந்து, தண்ணீர் வற்றியதும் நறுக்கி வைத்திருக்கும் மீதி வெங்காயத்தை சேர்த்து பிரட்டி இரண்டு நிமிடத்தில் கொத்தமல்லித்தழை தூவி இறக்கி விடவும்.

* இதை சாம்பார், தயிர் சாதத்திற்கும் தொட்டுக் கொள்ளலாம். இதனுடன் குடைமிளகாயையும் வெங்காயம் போல் நறுக்கி சேர்க்கலாம். இன்னும் நல்ல சுவையுடன் இருக்கும்.