Home ஆரோக்கியம் பெண்களுக்கு வரும் மாதவிடாய் நேரத்தில் உண்ணவேண்டிய உணவுகள்

பெண்களுக்கு வரும் மாதவிடாய் நேரத்தில் உண்ணவேண்டிய உணவுகள்

136

general medical news:பெண்கள் மாதவிடாய் காலத்தில் வைட்டமின் சி, இரும்புசத்து நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். அவை அதிக ரத்த இழப்பு, திரவ இழப்புகளை ஈடு செய்யும். ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் துணை புரியும்.

அதிக வலி, தசைப் பிடிப்பு போன்ற பிரச்சினைகளுக்கு நிவாரணமாகவும் அமையும். முளைகட்டிய தானியங்கள், கீரை, வெல்லம், பழங்கள், நட்ஸ்கள், முழு தானியங்கள் போன்றவற்றை சாப்பிடலாம். சமையலில் மஞ்சள் பொடி, இஞ்சி, சீரகம், லவங்கப்பட்டை போன்றவற்றை தவறாமல் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

ஒருசில வகை உணவுகளை மாத விடாய் காலத்தில் பெண்கள் தவிர்க்க வேண்டியதும் அவசியம்.

காபி பிரியர்கள் அதனை தவிர்ப்பது அவசியமானது. அது ரத்த அழுத்தத்தை அதிகப்படுத்திவிடும். அதனால் இதயத்துடிப்பும் அதிகரிக்கும். வீண் டென்ஷன், கவலை போன்ற பாதிப்புகள் உருவாக்கும். காபிக்கு பதிலாக கிரீன் டீ, தக்காளி, கேரட் ஜூஸ் அல்லது சூப் பருகலாம்.

பதப்படுத்தப்பட்ட உணவுகள், துரித உணவுகள், பன்றி இறைச்சி, ஊறுகாய் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அதற்கு பதிலாக காய்கறி சாலட், கஞ்சி போன்றவற்றை சாப்பிடலாம். வெளி உணவுகளை தவிர்ப்பதும் நல்லது.

கொழுப்பு நிறைந்த உணவுகள், பர்கர்கள், கிரீம் சார்ந்த இனிப்பு பலகாரங்கள் போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். மாதவிடாய் நாட்களில் தவறான உணவுகளை சாப்பிடுவது நீரிழப்பு, சரும வறட்சி போன்ற பிரச்சினைகளை ஏற்படுத்தும். அதற்கு பதிலாக கோதுமை ரொட்டி, சால்மன் மீன்கள், பருப்பு குழம்பு வகைகளை சாப்பிடலாம்.

பால், பாலாடை கட்டி போன்ற பால் பொருட்களை தவிர்ப்பது நல்லது. அதற்கு பதிலாக மோர் பருகலாம்.

நொறுக்கு தீனிகள், பிஸ்கட், சிப்ஸ் போன்ற வறுத்த உணவுகளை தவிர்க்க வேண்டும். அவற்றில் கொழுப்பு அதிகமாக இருக்கும். அவை ஈஸ்ட்ரோஜன் அளவை அதிகப்படுத்தி மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்திவிடும். அதற்கு பதிலாக கேரட், வெள்ளரிக்காய்கள் சாப்பிடலாம்.

ரொட்டி, பீட்சா போன்றவற்றையும் தவிர்க்க வேண்டும். அவை மலச்சிக்கலுக்கு வழிவகுக்கும். செரிமான செயல்பாட்டிற்கும் பாதிப்பை ஏற்படுத்தும்.

பதப்படுத்தப்பட்ட பவுடர்களில் தயாராகும் சூப்கள், பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட பலகாரங்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும். அவற்றுள் உப்பு அதிகமாக இருக்கும். அதற்கு பதிலாக தயிரை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும்.