Home ஆரோக்கியம் பெண்களின் மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்

பெண்களின் மார்பக புற்றுநோயை விரட்டும் ஆரஞ்சுப் பழம்

39

Captureஆரஞ்சுப் பழத்தில் எந்த அளவுக்கு சுவை இருக்கிறதோ, அதைவிட பல மடங்கு நோய் எதிர்ப்பு சக்தியும் இருக்கிறது. விட்டமின், “சி’ சத்துகள் நிறைந்து காணப்படும் ஆரஞ்சுப் பழம், பெண்களின் அழகை, “தகதக’ வென ஜொலிக்க வைக்கும்.

தொடர்ந்து ஆரஞ்சுப் பழம் சாப்பிட்டு வரும் பெண்களை, மார்பக புற்றுநோய் ஒரு போதும் நெருங்கவே நெருங்காது. மார்பக புற்றுநோயை விரட்டும் அருமருந்தாக ஆரஞ்சு பழம் உள்ளது. உடலில், அளவுக்கு அதிகமாக காணப்படும் கொழுப்பை குறைத்து விடுகிறது.

பெண்கள் தங்களுக்கு மார்பக புற்றுநோய் வந்து விட்டாலோ, கொழுப்பின் அளவு அதிகரித்து விட்டாலோ, உடனே டாக்டரை தேடி ஓடுகின்றனர். தினமும், சில ஆரஞ்சு பழங்களை சாப்பிட்டு வந்தாலே, மார்பக புற்றுநோயை தவிர்க்கலாம்.
மற்ற பழங்களை விட, ஆரஞ்சுப் பழத்தில் ஏராளமான சத்துகள் உள்ளன. இதில் உள்ள சிட்ரிக் ஆசிட், உமிழ் நீரை தூண்டச் செய்து, பசியை தூண்டுகிறது.

பொட்டாசியம் சத்து, ரத்தத்தை சுத்திக்கரிக்கிறது. விட்டமின், “சி’ சத்து, உடம்பில் உள்ள காயங்களை குணப்படுத்துகிறது. இதில் உள்ள இரும்புச்சத்து, உடலுக்கு ஆரோக்கியத்தையும், பலத்தையும் அளிக்கிறது. ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை கூட்டுவதால், உடலில் உள்ள பாக்டீரியாக்களை அழித்து, உடலுக்கு உற்சாகத்தை தருகிறது.