Home குழந்தை நலம் ஆண்குழந்தை பெற்றால் ஆயுள் குறையுமாம்… ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்

ஆண்குழந்தை பெற்றால் ஆயுள் குறையுமாம்… ஆய்வு தரும் அதிர்ச்சி தகவல்

21

ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறையும் வாய்ப்புகள் அதிகமாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

பின்லாந்து நாட்டைச் சேர்ந்த விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வு ஒன்றில் இது பற்றிய சில உண்மைகள் கண்டறியப்பட்டுள்ளன.
இந்த ஆய்வில், ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் பெண்கள் சுமார் 7% சதவீதம் பேர் குறைந்த நாட்களிலேயே உயிரிழப்பதாகக் கூறப்படுகிறது.

மேலும் இதற்கான காரணங்கள் குறித்து ஆராய்ச்சி மேற்கொண்டதில், தாய்மார்களின் உடல் ரீதியான பிரச்சனைகளும் இதில் முக்கிய பங்கு வகிப்பதாக கூறப்பட்டுள்ளது.

ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் பெண்கள், பெண் குழந்தைகளைச் சுமப்பதை விட ஆண் குழந்தைகளச் சுமப்பது கடினம் என்றும் ஆண் குழந்தைகளுக்குத் தாய்ப்பால் கொடுக்க தாய்மார்களுக்குக் கூடுதல் சக்தி தேவைபடுகிறது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே இது போன்ற சில விஷயங்கள் மூலம் ஆண் குழந்தைகளைப் பெற்றெடுக்கும் தாய்மார்களின் ஆயுட்காலம் குறைவதற்கு வாய்ப்புகள் உள்ளது என்று தெரிவித்துள்ளார்கள்.

மேலும் இது குறித்து, பின்லாந்தில் உள்ள துர்கு பல்கலைக்கழகத்தின் ஆய்வாளர் சாமுளி ஹெல்லே என்பவர் இது முற்றிலும் முடிந்த முடிவு. இதற்கான ஆய்வுகள் இன்னும் தொடர்ந்துகொண்டு தான் இருக்கின்றன. இதுவே முழுமையான முடிவல்ல என்றும் தெரிவித்துள்ளார்.