Home காமசூத்ரா ஆண்களை ஹீரோவாக பார்க்கும் பெண்களின் மாயவாழ்க்கை

ஆண்களை ஹீரோவாக பார்க்கும் பெண்களின் மாயவாழ்க்கை

30

201611051111587856_women-see-the-hero-men_secvpfபெண்கள் ஒருபோதும் ஆண்களின் தோற்றத்தை வைத்தோ, சாயலைவைத்தோ மனதை பறிகொடுத்துவிடக்கூடாது.

பெண்கள் அனைவருக்கும் பிடித்த ஹீரோ என்று யாராவது இருப்பார்கள். குறிப்பாக இளம்பெண்களுக்கு எந்த ஹீரோவை பிடிக்குமோ, அவர்களைப் போன்று சாயலில் இருக்கும் ஆண்களை பார்த்தால், அவர்களுடன் நட்புறவுடன் பழகுவதில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.

அசல் ஹீரோவை போலவே நடை, உடை, பாவனைகளில் வலம் வரும் இளைஞர்களை, தங்களுக்கான நிஜ வாழ்க்கை ஹீரோவாக நிர்ணயித்து விடுகிறார்கள்.

ஒரு கட்டத்தில், இதுபோன்ற ஆண்களுடன் பழகுவதற்காக வாய்ப்பு கிடைத்தால்….அப்படி கிடைக்காவிட்டாலும் அதற்கான வாய்ப்பை ஏற்படுத்திக்கொள்வார்கள்.விரைவில் அவர்களுடன் தங்களை நெருக்கப்படுத்திக் கொள்ளும் பெண்கள், சாயலை மட்டுமே அடிப்படையாக வைத்து அவர்கள் மீது காதல்கொள்கிறார்கள்.

மனதை பார்த்து வருவதுதான் காதல் என்று சினிமா வசனங்கள் பேசினாலும், ஒருவருடைய தோற்றமும் காதலுக்கு கைகொடுக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. தோற்றத்தின் மூலம் வரும் இந்த காதல், ஆரம்பத்தில் குணாதிசயங்களை மறைத்து விடுகிறது. அந்த ஆண் எப்படிப்பட்ட குணம் உள்ளவர் என்றாலும், அதனை கண்டுகொள்ளாமல் மாயபிம்பத்திற்குள் சிக்கிகொள்கிறார்கள்.

சாயலுக்கும்– நிஜத்திற்கும் இடையே பெரிய இடைவெளி உண்டு. தோற்றத்தில் தனக்கு பிடித்தவர்போல இருந்தாலும், சினிமாவில் பார்த்த ஹீரோபோல வீரம், பராக்கிரமம், பழக்க வழக்கம், குணாதிசயங்கள் தனது ‘சாயல் காதலரிடம்’ இல்லை என்பது தெரிந்துவிடும்போது மனம் மாயையில் இருந்து விலகி, சிந்திக்கத் தொடங்கும். அப்படி சிந்திக்கத் தொடங்கும் முன்பே சில பெண்கள் அந்த போலி கதாநாயகர்களிடம் நிறைய இழந்துவிடுகிறார்கள்,

இது ‘இல்லாத ஒன்றை இருப்பதாக நினைத்துக் கொள்வது. நிழலை நிஜமாக நினைத்து வாழ்க்கையை தொலைப்பது’ போன்ற மனநிலை. இந்த மனோநிலையால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்.

பெண்கள் ஒருபோதும் ஆண்களின் தோற்றத்தை வைத்தோ, சாயலைவைத்தோ மனதை பறிகொடுத்துவிடக்கூடாது. சினிமாவில் பார்க்கும் ஹீரோவை பிடித்து விட்டால், அவரது அழகினை ரசிப்பது இயல்பான ஒன்று. இதில் தவறு ஏதும் இல்லை. ஆனால் சினிமா என்பது பொழுதுபோக்கான ஒன்று. அதனை அதே கண்ணோட்டத்துடன் பார்க்கவேண்டும்.

சினிமாவை சினிமா என்று மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள், அதில் பார்ப்பவைகளை நிஜத்தில் பார்க்கவேண்டும் என்ற ஆசையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். அப்படி ஆசைகள் மேலோங்கம் பட்சத்தில் உங்களை நீங்களே கட்டுப்படுத்திக்கொள்ளுங்கள்.

ஒரு பெண் தனது சாயலை பார்த்தே தன்னை காதலிக்கிறாள் என்று அந்த ஆணுக்கு தெரியவருகிற கட்டத்தில், அவன் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள முடிவெடுத்துகிறான்.

முடிந்த அளவு தேவைகளை நிறைவேற்றி விட்டு, நாம் தப்பித்துக்கொள்வோம் என்று நிலைக்கு வந்து விடுகையில் அங்கு காதல் மறைந்து காமம் தலைதூக்கும்.