Home ஆரோக்கியம் உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு

உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு

23

உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு என்றால் என்ன?

ஒரு நபர் அவருக்கு ஏற்படும் சோர்வு அல்லது வலி போன்ற உடல்சார்ந்த அறிகுறிகளைப் பற்றி அதிகப்படியாக கவலையாக உணர்ந்தாரெனில், அது உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு (சோமாடிக் சிம்ப்டம் டிசார்டர் – SSD) எனப்படுகிறது. ஒரு நபரின் தினசரி வழக்கமான நடவடிக்கைகளில் தலையிடக்கூடியவையாக இந்த அறிகுறிகள் தொடர்புடையை தீவிர உணர்வுகள், சிந்தனைகள் மற்றும் நடத்தைகள் மாறும்.

பெரும்பாலான நேரங்களில் அவர்களது பிணிக்கு எந்த உடல் சார்ந்த காரணங்களும் காரணமாக இல்லாமல் இருக்கக்கூடும். உடல்சார்ந்த அறிகுறி குறைபாட்டால் பாதிக்கப்பட்ட நபர் பெரும்பாலும் அவரது மிகையான நடத்தை மற்றும் எதிர்வினைகளில் பிரச்சினைகளைச் சந்திக்க நேரிடும்.

டிஎஸ்எம் – 5 இன் படி, உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு என்பது தற்போது உளரீதியான குறைபாடுகள் மற்றும் ஹிஸ்டீரியா போன்ற மற்ற தொடர்புடைய குறைபாடுகளை உள்ளடக்கிய சொற்பதமாகும்.

SSD -ஆல் பாதிக்கப்பட்ட நபர்களுக்கு ஏதேனும் அவமானம் ஏற்பட்டிருப்பது அதனுடன் தொடர்புடையதாக இருக்கலாம்; இவர்களை சந்திக்கும் மருத்துவர் அவர் கற்பனையாக இவ்வாறு கூறுகிறார் என அவரின் பிரச்சினைகளை நிராகரித்து விடக்கூடும். SSD பொதுவாக ஆண்களைக் காட்டிலும் பெண்களுக்கு முப்பது வயதுக்கு முன்னர் ஏற்படுவதாக அறியப்படுகிறது.

காரணங்கள்

உடல்சார்ந்த அறிகுறி குறைபாடு எதனால் ஏற்படுகிறது என்பதற்கான துல்லியமான காரணம் கண்டறியப்படவில்லை. எனினும், பின்வரும் காரணிகளின் பங்களிப்பு நம்பத்தகுந்ததாக இருக்கிறது:

மரபியல்
குழந்தைப்பருவ வளர்ப்புமுறை
எதிர்மறை மனநிலை ஆட்கொண்டிருத்தல்
கற்றுக்கொண்ட நடத்தை
அறிகுறிகள்:

இதற்கான அறிகுறிகள் பின்வருமாறு:

படபடப்பு, மூச்சுத்திணறல் மற்றும் நெஞ்சு வலி.
வாந்தி, குமட்டல், வயிற்று வலி மற்றும் வீக்கம்
முதுகு வலி, மூட்டு வலி, கைகள் அல்லது கால்கள் வலி
பாதிக்கப்பட்ட நபர் அறிகுறிகள் குறித்து மிகையான கவலை உணர்வு கொள்வது
மிதமான அறிகுறிகளைத் தீவிர நிலையாகக் கருதுதல்.
பல பரிசோதனைகளை மேற்கொண்டு அதன் முடிவுகளை நம்பாமை
அவர்களது மருத்துவர் அவர்களை தீவிரமாக கண்கானிக்க வில்லை எனக்கருதுதல்.
உயர் மட்ட மருத்துவ பராமரிப்பை நாடுதல்
ஒரே அறிகுறிகளுக்காக பல மருத்துவர்களை சந்தித்தல்.
சுகாதாரம் குறித்து நீண்ட நேரம் செலவிட்டு கவலை கொள்ளுதல்.
அவர்களின் அறிகுறிகள் குறித்த அவர்களது நடவடிக்கை, உணர்வுகள், எண்ணங்கள் காரணமாக அவர்களது சாதாரண செயல்பாடுகள் பாதித்தல்.
நோய் கண்டறிதல்

உங்களது அறிகுறிகளுக்கு ஏதேனும் உடல் சார்ந்த காரணங்கள் இருக்கிறதா எனப்பார்க்க உங்களது மருத்துவர் ஒரு உடல்பரிசோதனையை மேற்கொள்வார். ஒருவருக்கு ஏற்படும் அறிகுறிகளைப் பொறுத்து பரிசோதனைகள் மாறுபடும். சிலர் கூடுதலான மதிப்பீட்டிற்காக மனநல மருத்துவரிடம் பரிந்துரைக்கப்படலாம். இது தொடர்புடைய குறைபாடுகளைக் களைவதற்காக ஒரு உளவியல் மதிப்பீடு செய்யப்படும்.

சிகிச்சை

SSD க்கான சிகிச்சை பெற வரும் நபர்கள் தங்கள் மருத்துவர்களுடன் ஆதரவளிக்கும் உறவுமுறை கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக, திரும்ப திரும்ப ஒரே பரிசோதனை நடைமுறைகள் மேற்கொள்வதைத் தவிர்ப்பதற்கு ஒரே முதன்மையான மருத்துவரை அணுக வேண்டும். தேவைப்பட்டால் பிணி நீக்கும் வல்லுனர்களை (மனநல நிபுணர்) சந்திக்கலாம்.

உளவியல் சிகிச்சை

புலனுணர்வு சார்ந்த நடத்தை சிகிச்சை அடிப்படையில், SSD நிகழும் வாய்ப்பு மற்றும் தீவிரத்தினைக் குறைக்க புதிய அணுகுமுறைகள் கண்டறியப்பட்டிருக்கின்றன. அது போன்ற அமர்வுகள் பிரச்சினைகளைத் தீர்ப்பது, மன அழுத்தத்தை கையாளுதல் மற்றும் சமூக திறன்கள் பயிற்சி முதலிய பொது ஆலோசனைகள் இணைந்ததாக இருக்கின்றன.

மருந்தியல் சிகிச்சை

SSD சார்ந்த சில உளவியல் சார்ந்த குறைபாடுகள், குறிப்பாக மன அழுத்தம் மற்றும் கவலை போன்றவைக்கு மருந்து உட்கொள்வது நல்ல பலனைத் தருகின்றது.

தடுத்தல்

SSD க்கு ஆட்பட்டிருக்கும் நபர்களுக்கு அவர்களுக்கு மன அழுத்தத்தை கையாளும் வழிகளைக் கற்பிப்பதற்காக கருத்துரை வழங்குவதன் மூலம் உதவ முடியும். இவ்வாறு கருத்துரை வழங்குவதன் மூலம் அவர்களுக்கு தோன்றும் அறிகுறிகளின் தீவிரத்தைக் குறைக்க உதவ முடியும்.

சிக்கல்கள்

SSD க்கு சிகிச்சை அளிக்கப்படாவிட்டால், பின்வருவன போன்ற சிக்கல்கள் ஏற்படக்கூடும்:

சாதாரண செயல்பாடுகளில் சிக்கல்கள்
சமூக வாழ்க்கையில் மற்றும் பணியிடத்தில் சிக்கல்கள்
தற்கொலை மற்றும் மன அழுத்தம் ஏற்படும் அபாயம் அதிகம்.
தூக்க மருந்துகளையும் அல்லது வலி நிவாரணிகளையும் சார்ந்திருக்கும் நிலை.
அடுத்து செய்ய வேண்டியவை

உங்களுக்கு ஏற்படும் அறிகுறிகள் உங்களது சாதாரண செயல்பாட்டை செய்வதில் சிக்கல்கள் இருந்தாலோ, மன அழுத்தம் அல்லது கவலை ஏற்படும் அறிகுறிகள் தோன்றினாலோ உங்களது மருத்துவரை அணுகுங்கள்.