Home ஜல்சா செக்ஸ் விளையாட்டால் பயங்கரம்… காதலன் மரணம், காதலி கைது!

செக்ஸ் விளையாட்டால் பயங்கரம்… காதலன் மரணம், காதலி கைது!

15

செக்ஸ் குறித்து பேசுவது நமது நாட்டில் மட்டும் தான் ஒரு குற்றம் போல காணப்படுகிறது. ஆனால், வெளிநாடுகளில் பொது இடத்தில் நின்று செக்ஸ் குறித்து உரக்க பேசினாலும், யாரும் கண்டுக் கொள்ள மாட்டார்கள். செக்ஸ் என்பது இனப்பெருக்கும் என்பதை தாண்டி மனிதர்கள் மத்தியில் தங்கள் இச்சை ஆசையை அதிகரிக்கும் செயலாகவே காணப்படுகிறது. இந்த வேட்கையின் காரணத்தால் தான் BDSM போன்று செக்ஸ் வைத்துக் கொள்வதில் பல வகைகளை நாடுகிறது மனித மனம். செக்ஸ் விளையாட்டு என்றே சிலவன இருக்கின்றன. இதில் ஈடுபடும் மக்கள் மனநிலை வேறுபட்டு காணப்படுகிறது. ஆதிக்கம் காட்டுதல், சோகத்தின் மூலமாக ஈடுபடுதல், அடிமையாக நடந்துக் கொள்வது, எத்தகைய வலியாக இருந்தாலும் அது செக்ஸ் மூலமாக என்றால் ஏற்றுக் கொண்டு ஈடுபடுபவர்கள் என பலவகையினர் இதில் இருக்கிறார்கள்.

ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண்! அனஸ்தேசியா ஒனிகினா (21) ரஷ்யாவை சேர்ந்த இளம்பெண். தனது காதலன் டிமிட்ரி சிங்கேவிச் (24) எனும் முன்னாள் போலீஸ் மற்றும் கட்டாய இராணுவ பயிற்சி பெற்ற நபரை ஒர்யோல் எனும் பகுதியில் இருந்த தனது குடியிருப்பில் வைத்து கிச்சன் கத்தி கொண்டு அறுத்து தனது வீட்டில் வைத்திருந்தார்.

ஆன்லைன்! சர்வதேச ஆன்லைனில் ஊடகங்களில் வெளியாகியுள்ள செய்திகளில், ஒனிகினா தனது காதலனின் தலை, ஆணுறுப்பு, தாடை, கை, கால்கள் மற்றும் சில விரல்களை துண்டு துண்டாக அறுத்து வெட்டி வைத்திருந்தது தெரியவந்தது. காதலனின் சில உடல் பாகங்களை இவர் வெளியே வீசிவிட்டு, பிற பாகங்களை தனது வீட்டில் இருந்த ஃப்ரீசரில் வைத்திருந்தார். சில உடல் பாகங்களை கசாப்பு கடையில் தொங்கவிடுவதை போல வீட்டு அறையில் தொங்கவிட்டிருந்தார் ஒனிகினா, என்று செய்திகள் வெளியிட்டிருக்கிறார்கள்.

செக்ஸ் கேம்! ஒனிகினா தனது காதலனுடன் பி.டி.எஸ்.எம். எனப்படும் செக்ஸ் விளையாட்டை விளையாடியுள்ளனர். அப்போது மூச்சு திணறல் ஏற்பட்டு காதலன் இறந்துவிட்டார். உடனே, தனது சகோதரியை கால் செய்து அழைத்து பேசிய ஒனிகினா, அவரிடம் என்ன செய்கிறாய் என்று கேட்டு, தனது குடியிருப்பில் நடந்த சம்பவத்தை கூறி, தான் காதலனின் உடலை துண்டு, துண்டாக வெட்டி அறுத்துவருவதை கூறியுள்ளார்.

அச்சத்தில் புகார்! காலில் இதை கேட்ட சகோதரி அச்சத்தில் உறைந்து போய் போலீசில் புகார் அளித்துள்ளார். அச்சமயத்தில் ஒனிகினா வீட்டு அருகே வசித்து வந்த பெண்மணி இவரது வீட்டுக்குள் வந்து அறுத்து வைத்திருந்த உடலை கண்டு பயந்துள்ளார். இந்த காட்சியை கண்டு பயந்து போன அந்த பக்கத்து வீட்டு பெண்மணி, நான் எப்படியோ சமாளித்துக் கொண்டேன். அவனது (காதலனின்) உடல் கசாப்புக் கடையில் இறைச்சி தொங்கவிடுவது போல தொங்கவிடப்பட்டு இருந்தது. கை, கால்கள் மற்றும் வயிறு, குடல் பகுதிகள் குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருந்தனர். என்று அப்பெண்மணி போலீஸில் கூறியுள்ளார்.

மர்மம்! மேலும் போலீஸில், இந்த காதல் ஜோடி கொஞ்சம் விசித்திரமானவர்கள். இவர்கள் பி.டி.எஸ்.எம் மற்றும் மறைபொருள் ஆய்வுகள், சாத்தான் மற்றும் கொடூரமான விஷயங்கள் செய்து வருவது போன்ற சந்தேகங்கள் குறித்தும் இவர்களது ஃபேஸ்புக் பதிவுகளிலும் இதை காண இயலும் என்றும் கூறியிருந்தார்.

ஆய்வு! பக்கத்து வீட்டு பெண்மணி கூறியதை அடுத்து அந்த காதலனின் ஃபேஸ்புக் பதிவுகளை ஆராய்ந்தது போலீஸ். அப்போது அந்த பெண்மணி கூறியது போலவே, சாத்தான், பேய், பிசாசு போன்ற தளங்களை லைக் செய்து வைத்திருந்ததும். அது சார்ந்த ஃபேஸ்புக் குழுக்கள் மற்றும் பக்கங்களை அவர் பின்தொடர்ந்து வந்ததும் அறியப்பட்டது.

ஏற்கனவே திருமணமானவர்! ஒனிகினா ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவர் இறந்துவிட்டார். அதன் பிறகு இவர் மனநல மருத்துவமனையில் இருந்ததாகும். ஆனால், முழுமையாக குணமடையும் முன்னரே இவர் பாதியில் வீடு திரும்பிவிட்டார் என்றும் தகவல்கள் அறியப்படுகிறது. ஆரம்பத்தில் காதலனை தான் கொலை செய்யவில்லை பி.டி.எஸ்.எம்-ல் ஈடுபடும் போது இறந்தார், அதன் பிறகு மரணத்தை மறைக்க தான் உடலை அறுத்ததாக கூறினார் ஒனிகினா. ஆனால், பிறகு குற்றவுணர்வு காரணமாக அவரே தனது குற்றச்தை ஒப்புக்கொண்டார். இப்போது மீண்டும் மனநல மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்

திரைப்படம் போல… இது போன்ற காட்சிகள் திரைப்படங்களில் மட்டுமே இதுவரை கண்டுள்ளோம். ஆனால், நிஜ வாழ்வில் இப்படி ஒரு நிகழ்வு நடந்திருப்பது மனதை உறைய வைக்கிறது. இதை வெறுமென மனிதத்தன்மையற்ற செயல், மிருகத்தனமானது என்று கூறிவிட முடியாது. ஒனிகினா மனதளவில் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார். இதன் காரணமாகவே இவர் இப்படியான திடுக்கிடும் குற்ற செயலில் ஈடுபட்டுள்ளார். இவர் செய்தது தவறு தான் என்ற போதிலும், இத்தகைய செயலை செய்ய எப்படியான மனநிலை தூண்டுகிறது என்பது குறித்து ஆய்வு செய்ய வேண்டும்.