Home அந்தரங்கம் ஆண்கள் பெண்களை இப்படி இரண்டு விதமாகத்தான் கையாளுகிறார்கள்… உண்மையா? இல்லையா?

ஆண்கள் பெண்களை இப்படி இரண்டு விதமாகத்தான் கையாளுகிறார்கள்… உண்மையா? இல்லையா?

94

ஆண்கள் அன்பு செலுத்துவதில் கொஞ்சம் அமைதியானவர்கள் தான். ஆண்களுக்கு எதிலுமே தாராள குணம் தான். ‘அந்த‘விஷயங்களில் இன்னும் தாராளமானவர்கள். ஆனால் மனைவியிடமும் காதலியிடமும் ஒரே மாதிரி நடந்து கொள்கிறார்களா என்றால் கிடையாது.

ஆண்களுக்கு பெண்களிடம் எப்போதுமே எதிர்பார்ப்பு அதிகம் தான். ஆனால் நண்பர்களிடம், பெற்றோர்களிடம், குழந்தைகளிடம் என ஆளுக்கு ஆள், சூழலுக்குத் தகுந்தபடி எதிர்பார்ப்புகள் கூடவோ குறையவோ செய்யும்.

அதேசமயம் ஆண்கள் தங்களுடைய எதிர் பாலினத்தவரிடம் வைக்கும் எதிர்பார்ப்புகள் முற்றிலும் வேறு. குறிப்பாக, மற்றவர்களைவிட, மனைவியிடமும் காதலியிடமும் ஆண்களுக்கு எதிர்பார்ப்புகள் அதிகமாக இருக்கும். ஆனால் இருவரிடமும் உள்ள எதிர்பார்ப்பில் வித்தியாசங்கள் உண்டு. குறிப்பாக அந்தரங்க விஷயங்களில் இருவரிடமும் வேறுவேறாகவே நடந்துகொள்வார்கள்.

மது அருந்துதல்

காதலியுடன் இணைந்து உட்கார்ந்து, அவர்களின் அழகை ரசித்துக் கொண்டே குடிப்பதில் ஆண்களுக்கு எப்போதுமே ஒரு பேரானந்தம் தான். ஆனால் மனைவியை அருகில் உட்கார வைத்துக் கொண்டு குடிப்பதை பெரும்பான்மையான ஆண்கள் விரும்பமாட்டார்கள்.

குட்டை ஆடைகள்

மனைவி தன்னுடைய வீட்டு கலாச்சாரத்துக்கு ஏற்றபடி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கும் ஆண்கள், அதே தன்னுடைய காதலி எத்தனை குட்டையான அல்லது ஃபேஷன் ஆடைகளை அணிந்திருந்தாலும் ரசிப்பார்கள். புகழ்வார்கள். இன்னும் ஆடையின் அளவை குறைக்கவே விரும்புவார்களேயொழிய எரிச்சலடைய மாட்டார்கள்.

புகைப்பழக்கம்

பெரும்பாலான ஆணு்கள் தன் மனைவி முன்னால் புகை பிடிக்க மாட்டார்கள். ஏன் நிறைய பெண்களுக்கு தன்னுடைய கணவர் புகைபிடிப்பார் என்பதே தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ஆனால் காதலியின் தோல் மேல் கைபோட்டுக் கொண்டு, புகைப்பிடிப்பது ஆண்களுக்கு மிகப் பிடிக்கும்.

கோபம்

மற்ற விஷயங்கள் எப்படியோ ஆனால் கோபத்தில் மட்டும் நிச்சயம் மனைவியும் காதலியும் வேறுவேறாகவே இருக்கிறார்கள். மனைவியிடம் ஆண்கள் தான் பெரும்பாலும் கோபப்படுவார்கள். திட்டுவார்கள். ஆனால் காதலி விஷயத்தில் அப்படியில்லை. காதலி தான் எப்போதும் கோபப்பட்டு திட்டுவார். இவர் திட்டு வாங்கிக் கொள்பவராக மட்டுமே இருப்பார்.

ரொமான்ஸ்

படுக்கையறையில் அருகருகில் அமர்ந்து கொண்டு, தான் அமைதியாக இருந்தாலும் தன்னை சீண்டிக் கொண்டே, குதூகலப்படுத்திக் கொண்டே இருப்பவளான காதலி இருக்க வேண்டும். தான் ஆரம்பிக்கும் முன் அவளாகவே வந்து ரொமான்ஸ் செய்ய வேண்டும் என்று எதிாபார்க்கும் ஆண்கள் தன்னுடைய மனைவி தானாக வந்து படுக்கையறையில் ரொமான்ஸைத் தொடங்குவதை விரும்புவதில்லை. எரிச்சலடையவே செய்கிறார்கள்.

உடலுறவு

உடலுறவு விஷயத்தில் இன்னும் கொஞ்சம் ஆண்கள்வித்தியாசமானவர்கள். மனைவியிடம் வழக்கம் போல் சடங்காக, எப்போதும் போல் ஒரே மாதிரியாக உறவு கொண்டு முடித்ததும், தூங்கிவிடும் ஆண்கள் காதலி விஷயத்தில் முற்றிலும் வேறு.

காதலியிடம் தான் தங்களுக்குப் பிடித்த அல்லது தாங்கள் செய்ய விரும்பும் அத்தனை பொசிசன்களையும் செய்து பார்க்க நினைப்பார்கள். தான் நினைக்கும் அத்தனையையும் காதலியிடம் பயிற்சி பெற்றுக் கொள்ள வேண்டுமென குழந்தையாகி அடம்பிடிக்கவும் ஆரம்பித்துவிடவார்கள்.
எல்லா எக்ஸ்பிரிமெண்டும் காதலியிடம் தான் நடக்கும்.