Home உறவு-காதல் கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்…

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க 10 டிப்ஸ்…

25

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிப்பது சற்றே கடினமான காரியம் தான். மனைவியை சமாளிப்பது தவிர மற்ற எல்லா துறைகளிலும் ஆண்கள் முன்னணயில் உள்ளனர் என்பதும் உண்மை! ஆமாம் கணவன்மார்களே! நாங்கள் குறை சொல்லவில்லை, உண்மையை சொல்கிறோம். உங்களில் சில பேர் மட்டுமே உங்களுடைய தந்தை, அம்மாவை சமாளிப்பதை கவனித்திருப்பீர்கள். இந்த விஷயத்தை சமாளிக்கும் குறிப்புகளை சொல்லத் தொடங்குவதற்கு முன்னர், ‘தவறு’ செய்வது மனைவிகள் மட்டுமல்ல என்பதை நினைவுபடுத்த விரும்புகிறோம். கோபமாக இருக்கும் மனைவினை சமாளிக்க முடியவில்லையெனில், அதற்கு சம அளவு காரணமாக நீங்களும் இருப்பீர்கள்.

கோபமாக இருக்கும் மனைவியை சமாளிக்க விரும்பும் நீங்கள், அவள் உங்களுடைய குடும்பத்தை நடத்துவதற்கு எவ்வளவு முயற்சிகள் எடுக்கிறாள் என்பதை யோசித்துப் பார்த்திருக்கிறீர்களா? அவளுக்கும் சொந்தமான வாழ்க்கை (Career) உள்ளது. எனவே, நாம் உண்மையில் உட்கார்ந்து யோசிக்க வேண்டிய விஷயம் இது தான். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் சில வழிமுறைகளை இங்கே காணலாம்.
அவளை முத்தமிடுங்கள்
உண்மையில் அவள் மன அழுத்தத்துடன் இருக்கிறாள், அவளுக்கு உங்களுடைய அன்பு தேவைப்படுகிறது. அவளை முத்தமிடுங்கள், அவளை எந்த அளவிற்கு விரும்புகிறீர்களோ அந்த அளவிற்கு முத்தமிடுங்கள். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதைவிட சிறந்த டிப்ஸ் எதுவும் இல்லை.

உன்னை புரிந்து கொண்டேன்!
பெரும்பாலான பெண்கள், தங்களுடைய கணவன்மார்கள் தங்களுடைய பிரச்னைகளை புரிந்து கொள்வதில்லை என்று நினைக்கிறார்கள். ஆண்களுடைய ஆண்மை குணம், பெண்கள் பேசும் போது சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு விடுகிறது. மாறாக, அவளை ஓய்வெடுக்கச் செய்யுங்கள் மற்றும் அவளுடைய பிரச்னைகளை நீங்கள் புரிந்து கொண்டுள்ளீர்கள் என்று புரிய வையுங்கள்.

இன்று நான் செய்கிறேன்…
அவள் சமைக்கிறாள். மேலும், நாள் முழுவதும் அலுவலகத்தில் வேலை செய்கிறாள். எனவே, அவளை சமாதானப்படுத்த வேண்டிய வேலை உங்களுடையது தான். அவளுக்கு துணிகளை துவைக்க நீங்கள் உதவி செய்யுங்கள் என்று நாங்கள் பரிந்துரைக்கிறோம். இவ்வாறு செய்தால் அவள் உண்மையிலேய சமாதானமடைவாள்.

நாற்றமடிக்கும் சாக்ஸ்களை நீங்களே எடுத்துவிடுங்கள்
உங்களுக்கு இது ஒரு முக்கியமில்லாத விஷயமாக இருக்கலாம். ஆனால், இதை செய்வதன் மூலம் உங்கள் மனைவியை அமைதிப்படுத்த முடியும். இந்த பழக்கத்தை நீங்கள் கற்றுக் கொள்வதை உங்கள் மனைவி பாராட்டுவாள்.

உங்களுடைய பங்கை அறியச் செய்யுங்கள்
நீங்கள் செய்த விஷயங்களை அவள் கவனிக்க மாட்டாள் மற்றும் மேலும் மேலும் ஏதாவது செய்யச் சொல்லி கேட்டுக் கொண்டிருப்பாள். இந்த வேலைகளை செய்த குறிப்புகளை படுக்கை, சமையலறை மற்றும் டைனிங் டேபிளில் விட்டுச் செல்லுங்கள். நீங்கள் என்ன செய்தீர்கள் என்பதை அவளுக்கு சொல்லுங்கள். இதை அவள் புரிந்து கொள்வாள் என்று நாங்கள் உறுதியளிக்கிறோம்.

அன்பே உனக்கு நன்றி!
கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த உங்களுக்கு உள்ள மற்றொரு சிறந்த வழி நன்றி சொல்வது! அவள் செய்த விஷயங்கள் பற்றி பேசத் தொடங்குங்கள். ஆவற்றிற்காக நன்றி தெரிவியுங்கள். இப்படி செய்தால் உங்களுக்கு சுவை மிக்க டின்னர் கண்டிப்பாக கிடைக்கும்.

அவளை வேலை செய்யவிடுங்கள்
இன்றைய நாட்களின் ஆண்களுக்கு பெண்களும் சமம் என்பதை நாம் அறிவோம். உங்கள் மனைவி நன்கு படித்தவராகவும் மற்றும் வேலை செய்ய விரும்புபவராகவும் இருக்கலாம். ஆனால், அவளுக்கு பிடித்த வேலையை அவளையே தேர்ந்தெடுக்க செய்யுங்கள். உங்களுடைய பண சுமையை குறைப்பதற்காக என்றில்லாமல், அவளுடைய திருப்திக்காக அவளை வேலை செய்ய விடுங்கள்

நீங்களும் என்னுடைய அம்மா தான்!
கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்த இதுவும் ஒரு சிறந்த வழியே! உங்கள் மாமியாரை வீட்டுக்கு அழைத்து, அவரை உங்களுடைய அம்மாவிற்கு சமமாக மதித்து நடந்து கொள்ளுங்கள். இந்த செயலின் பலன் சிறப்பாக இருக்கும்.

முன்னணி
ஆண்கள் மனரீதியாக உறுதியாக இருக்க வேண்டும். கோபமாக இருக்கும் மனைவியை சமாதானப்படுத்தும் வழிகளை தேடுவதை விட்டு விட்டு, அனைத்து சூழல்களையும் எதிர்கொள்ள முன்னணியில் இருந்து தயாராக இருங்கள்! முன்னணிக்கு சென்று உங்கள் குடும்பத்தின் அனைத்து விஷயங்களையும் எதிர்கொள்ளுங்கள்.

பொறுமையும், உறுதியும்
எதுவுமே நடக்கவில்லையென்றால் இதை முயற்சி செய்து பாருங்கள். நீங்கள் செய்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை மற்றும் அவள் உங்களை சுரண்டுகிறாள் என்றும் நீங்கள் நினைக்கும் போது இதை செய்யுங்கள். அவளுடைய நடவடிக்கைகளை நீங்கள் பொறுத்துக் கொள்ளப் போவதில்லை என்று அவளிடம் பொறுமையாகவும், உறுதியாகவும் சொல்லுங்கள். இது அவளை சமாதானப்படுத்திவிடும்.