Home பெண்கள் அழகு குறிப்பு முகத்துல சுருக்கம் விழுதா?… இத ட்ரை பண்ணுங்க..

முகத்துல சுருக்கம் விழுதா?… இத ட்ரை பண்ணுங்க..

27

சருமப் பிரச்னைகளில் மிக முக்கியமான ஒன்று சருமத்தில் சுருக்கம் விழுவது. அது நம்முடைய வயதைவிட அதிக வயதுடையவர் போல காட்டும். அது நமக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும்.

ஆனால் நம்முடைய வீட்டிலேயே இருக்கும் சில இயற்கைப் பொருட்களைக் கொண்டே நம்முடைய சருமச் சுருக்கத்தைப் போக்கி பளிங்கு போல் ஜொலிக்க முடியும். இதோ உங்களுக்கான அந்த சீக்ரெட்ஸ்…

வைட்டமின் “ஈ’ எண்ணெய், வாஸ்லின், கிளிசரின் ஆகிய மூன்றையும், சம அளவு எடுத்துக் கலந்து, சுருக்கங்கள் உள்ள பகுதியில் தடவி, அரைமணி நேரம் ஊறியபின், குளிர்ந்த நீரால் கழுவி விடவும்.

பப்பாளிப்பழச் சாறுடன் காய்ச்சாத பால் அல்லது தயிரின் மேல் இருக்கும் ஆடையை எடுத்து நன்றாக பேஸ்ட் போல் கலந்து முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மேல் போட்டு வந்தால் ஆரம்ப நிலையில் இருக்கும் சுருக்கங்கள் காணாமல் போய் விடும்.

சாத்துக்குடி சாறில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் நன்கு அடர்த்தியாகப் பூசி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும். கொஞ்ச நாள் இப்படி செய்தால் முகத்தில் இருக்கும் சுருக்கங்கள் மறையும்

ஒரு ஸ்பூன் துளசி இலையின் சாற்றுடன், அரை ஸ்பூன் தேன் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தோல் பளபளப்பாக மாறும்.

நல்ல பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து நன்றாக முகத்தில் தடவி மசாஜ் செய்யவும். அதை அப்படியே ஒரு மணி நேரம் காயவிட்டு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவுங்கள். இது முகத்தில் இருக்கும் பருக்களை அகற்றி சருமத்தை மென்மையாக்கும்.