Home உறவு-காதல் ஆண்களுக்கு இருந்தால் சந்தேகம்…..அதுவே பெண்களுக்கு இருந்தால்?

ஆண்களுக்கு இருந்தால் சந்தேகம்…..அதுவே பெண்களுக்கு இருந்தால்?

31

சந்தேக குணம் அதிகம் உள்ளது ஆண்களுக்கா? பெண்களுக்கா? என்ற கேள்வி ஒவ்வொருவரிடமும் உள்ளது.

சந்தேகத்தால் மனைவி கொலை, கள்ளக்காதலி கொலை என்ற செய்திகள் அதிகமாக வெளியாவதை பார்த்து ஆண்களுக்கு தான் அதிகமாக சந்தேக புத்தி உள்ளது என்ற பலர் தீர்மானிக்கிறோம்.

ஆனால், சந்தேகம் குணம் ஆண், பெண் என்ற பேதம் பார்க்காமல், இருபாலருக்கும் இருக்கும் ஒரு பொதுவாக நோய் ஆகும்.

திருமணம் ஆன புதிதில், தனக்கு அமைந்துள்ள மனைவி தனக்கு சற்றும் பொருத்தமில்லாமல் மிகவும் அழகாக இருந்தால், அந்த அழகினை ஊறார் ரசிக்க கணவன் ஒருபோதும் அனுமதிக்க மாட்டான்.

என்னதான், வெளிஆட்கள் உன் மனைவி மிகவும் அழகாக இருக்கிறாள் என்று சொல்வதை கேட்டு, சந்தோஷப்படுவதை வெளியில் காட்டிக்கொண்டாலும், உள்ளுக்குள் சந்தேகத்திற்கான புள்ளி வைக்கப்படும்.

ஒரு சில ஆண்கள் இதனை பெரிதாக கண்டுகொள்ளமாட்டார்கள், ஆனால் பல ஆண்கள் தங்கள் மனைவியை தனியாக வெளியில் அனுப்புவதற்கோ, பிற ஆண்களுடன் ஒருபோதும் பேசுவதற்கோ அனுமதிக்கமாட்டார்கள்.

அப்படி தப்பித்தவறி பேசிவிட்டால் கூட, எங்கே நமது மனைவியின் மனம் மாறி கள்ளக்காதல் ஏற்பட்டுவிடுமோ என்று சந்தேகத்தை வளர்த்துக்கொண்டு, கேட்ககூடாத கேள்விகளை கேட்டு வாழ்க்கையையே சீராக்கி கொள்வார்கள்.

இது ஒரு ரகம் என்றால், ஒரு சிலர், உறவுமுறையில் தாங்கள் செய்யும் தவற்றை மறைப்பதற்காகவே தங்கள் துணை மீது சந்தேகப்படுவார்கள்.

தவறான உறவில் இருக்கும் அவர்கள், இது நமது துணைக்கு தெரிந்துவிடக்கூடாது என்பதற்காக, தாங்கள் என்ன தவறு செய்கிறார்களோ, அவை அனைத்தையும் தங்கள் துணையும் செய்வார்கள் என்ற சந்தேகத்தில் சண்டைபோட ஆரம்பித்துவிடுவார்கள்.

இதன் மூலம் தாங்கள் செய்யும் தவற்றையும் மறைக்க முயல்வார்கள். உறவுமுறையில் சந்தேகம் ஏற்படுவதற்கு கடந்தகால வாழ்க்கை ரகசியங்களும் ஒருவகையில் காரணமாக இருக்கிறது.

ஆண், பெண் இருபாலரும் கடுமையான வார்த்தைகளால் ஒருவரையொருவர் சாடிக்கொண்டி மன நிம்மதியை கெடுத்துக்கொள்வார்கள்.

ஆண்களாக இருந்தால் அதன் பெயர் சந்தேகபுத்தி , பெண்ணாக இருந்தால் அதன் பெயர் பொஸஸிவ்னஸ் அப்படித்தான் இந்த உலகம் பார்க்கிறது. காரணம் தன் மனைவி மீது சந்தேகப்படும் ஆண், அவளை அடித்து சித்ரவதை செய்து கொலை செய்யம் நிலைக்கு ஆளாகிறான்.

ஆனால், பெண்களோ தங்கள் கணவர்களை வார்த்தைகளால் திட்டித்தீர்த்துவிடுவதில் மட்டுமே அதிக கவனம் செலுத்துகிறார்கள். இது ஒரு கட்டத்தில் முடியாமல் போகும் பட்சத்தில் வேறு வாழ்க்கையை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபடுகிறார்கள்.

கொலை செய்யும் அளவுக்கு, தற்கொலை செய்து கொள்ளும் அளவுக்கும் இப்பிரச்சினை விஸ்வரூபம் எடுப்பதுண்டு. கவனமாக கையாண்டால் சந்தேகம் என்ற வார்த்தையில் இருந்து வெளியே வருவதற்கு ஆயிரம் வழிகள் இருக்கின்றன.