Home ஆண்கள் ஆண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

ஆண்களே இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாதீர்கள்

69

ஆண்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் வருவது இப்போது அதிகரித்து வருகிறது.

50 வயதைத் தாண்டிய ஆண்களில் சுமார் 14 சதவீதம் பேருக்கு இது ஏற்படுகிறது. அமெரிக்காவில் நுரையீரல் கேன்சருக்கு அடுத்தபடியாக புராஸ்டேட் கேன்சரால் இறப்பவர்கள்தான் அதிகம்.

ரெட் மீட் எனப்படும் இறைச்சிகள்தான் இந்தப் புற்றுநோய்க்கு வழிவகுக்கின்றன. உடற்பருமன் உள்ளவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு இரண்டு மடங்கு அதிகம்.

வெயிலுக்குச் செல்லாமலும், இடுப்புக்கு எந்தப் பயிற்சியும் தராமலும் இருக்கிற ஆண்கள் கொஞ்சம் எச்சரிக்கையாகவே இருக்க வேண்டும். காரணம், வைட்டமின் டி குறைவாக உள்ளவர்களுக்கு புராஸ்டேட் புற்றுநோய் அதிகம் வருவதாக ஓர் ஆய்வு கூறுகிறது. தகாத பாலுறவு வைத்துக் கொள்கிறவர்களுக்கும் இது ஏற்படுவதுண்டு.

கண்ட கண்ட வலி மாத்திரைகளை சுயமாக வாங்கிச் சாப்பிடுபவரிடம் இது வருவதற்கு ஆசைப்படுகிறது.வழக்கமாக நம் உடலில் சுரக்கும் என்சைம்கள் நல்லதே செய்யும். ஆனால், PRSS3 என்று ஓர் என்சைம் இருக்கிறது.

இது நமக்கு எதிரி. இதன் அளவு ரத்தத்தில் அதிகமாக இருந்தால், எறும்புகள் மரத்தைச் சுற்றி மண் புற்றை வளர்ப்பதைப் போல், இது புராஸ்டேட் செல்களைத் தூண்டி புற்றுநோயை வளர்க்கிறது.

அறிகுறிகள்

ஆரம்பத்தில் சாதாரண புராஸ்டேட் வீக்கத்துக்குரிய பல அறிகுறிகள் தென்படும்.

அதனால் பயந்துவிட வேண்டாம். இப்போது சொல்லப் போகிற அடையாளங்களைக் கவனியுங்கள். இவற்றில் ஏதாவது ஒன்றிரண்டு இருந்தால், உடல் சூடு, நீர்ப்பிணைப்பு என்று ஏதாவது ஒரு காரணத்தைச் சொல்லி, ஊரிலும் உறவிலும் சொல்லும் மருந்தைச் சாப்பிட்டு நேரம் கடத்தாதீர்கள். உடனடியாக மருத்துவரை பாருங்கள்.

சிறுநீர் செல்லும்போது வேகம் குறையலாம்.

சிறுநீர் செல்வதற்குச் சிரமப்படலாம்.

சிறுநீர் முழுவதுமாக வெளியேறாமல், மீண்டும் மீண்டும் சிறுநீர் கழிக்கத் தோன்றலாம்.

திடீரென்று மொத்தமே சிறுநீர் கழிக்க முடியாமலும் போகலாம்.

சிறுநீர் கழிக்கும்போது கடுமையான எரிச்சல் ஏற்படும். வலி தாங்க முடியாது.

சிறுநீரில் ரத்தம் வெளியேறும். இது ஒரு முக்கியமான அறிகுறி.

விரைகளில் வலி உண்டாகலாம். அலட்சியப்படுத்தக்கூடாது.

பரிசோதனைகள்

‘பிஎஸ்ஏ’ (PSA) டெஸ்ட், ‘ஆசிட் / ஆல்கலைன் பாஸ்படேஸ் டெஸ்ட். இவற்றில் பிரதானமாக மருத்துவர்களுக்கு கை கொடுப்பது ‘பிஎஸ்ஏ’ டெஸ்ட்தான். ‘பிஎஸ்ஏ’ என்பது ‘புராஸ்டேட் ஸ்பெசிஃபிக் ஆன்டிஜென்’ (Prostate Specific Antigen) என்பதன் சுருக்கம்.

இது புராஸ்டேட் செல்கள் சுரக்கிற ஒருவித புரோட்டீன். இதன் அளவு 4 நானோகிராமுக்குக் கீழ் இருந்தால், புராஸ்டேட் வீக்கம் சாதாரணமானது. இதற்கு மேல் தாண்டிவிட்டால், புற்றுநோய் குறித்துச் சந்தேகப்பட வேண்டும்.

அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன். இதில் புராஸ்டேட் எந்த அளவுக்கு வீங்கியுள்ளது என்பது தெரியும். அந்த வீக்கம் எந்த அளவுக்குச் சிறுநீர்ப்பையை அடைத்துள்ளது என்பதையும், ஒருமுறை சிறுநீர் கழித்த பின்னர் சிறுநீர்ப்பையில் எவ்வளவு சிறுநீர் தங்குகிறது என்பதையும் காணலாம்.

இதை வைத்து நோயின் தீவிரத்தைப் புரிந்து கொள்ளலாம். இதிலும் நோயின் பாதிப்பு தீர்மானமாகத் தெரியவில்லை என்றால் எம்.ஆர். ஸ்பெக்ட்ரோஸ்கோப்பி (MR Spectroscopy) எனப்படும் ஸ்பெஷல் டெஸ்ட் தேவைப்படும்.

புராஸ்டேட் புற்றுநோயை தடுக்கும் பயிற்சிகள்

சிறுநீர் கழிக்கும்போது இடுப்புக்குழி தசைகளைச் சுருக்கி சிறுநீர்க் கழிப்பை நிறுத்துங்கள்.

20 நொடிகளுக்கு இப்படி நிறுத்துங்கள்.

இப்போது மறுபடியும் சிறுநீர் கழிக்கவும்.

இது ‘ஒரு சுருக்கம்’ எனப்படுகிறது.

இப்படி 15 முறை செய்யவும்.

இது ஒரு சுற்று எனப்படுகிறது.

தினமும் 3லிருந்து 5 சுற்றுகள் செய்யுங்கள்.

50 வயதுக்கு மேற்பட்டவர்கள்

முழுத்தானிய உணவுகளையும் சிறுதானிய உணவுகளையும் அதிகம் சேர்த்துக்கொள்ளுங்கள்.

தினமும் ஒரு பழம் கட்டாயம் சாப்பிடுங்கள்.

காய்கறிகளை நிறைய சேர்த்துக்கொள்ளுங்கள்.

கொழுப்பு மிகுந்த உணவுகளைக் குறைத்துக்கொள்ளுங்கள்.

நார்ச்சத்துள்ள உணவுகளை அதிகப்படுத்துங்கள்.

முந்திரி, பாதாம் போன்ற கொட்டை வகைகளை அளவோடு சாப்பிடுங்கள்.

பருப்பு மற்றும் முளைகட்டிய பயறுகளை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

மீன் உணவு மிகவும் நல்லது.

முட்டையில் வெள்ளைக் கருவைச் சாப்பிடலாம்.

பால் மற்றும் பால் சார்ந்த உணவுகளை அளவோடு சாப்பிடுங்கள்.

ஆலிவ் எண்ணெயை சமையலுக்குப் பயன்படுத்தினால் நல்லது. ஆனால், விலை அதிகம்.

கிரீன் டீ குடிப்பது நல்லது.

தினமும் உடற்பயிற்சி அல்லது யோகா செய்யுங்கள்.

தினமும் அரை மணி நேரம் வெயிலில் நில்லுங்கள்