Home உறவு-காதல் ஆண் நேர்மையானவரா? போலியாக நடிக்கிறாரா? 8 அறிகுறிகள்!

ஆண் நேர்மையானவரா? போலியாக நடிக்கிறாரா? 8 அறிகுறிகள்!

30

உடலில் சில மாற்றங்கள் தென்பட்டால் அதை உடல் அறிகுறிகளாக வெளிப்படுத்திவிடும். இது ஒரு நபரின் குணாதிசயங்களுக்கும் பொருந்தும். ஒருவரின் குணாதிசயங்களில் ஏற்படும் மாற்றத்தை அவரது முகமே காண்பித்துக் கொடுத்துவிடும். இந்த வகையில் ஒரு ஆண் உறவில் உண்மையாக நடந்துக் கொள்கிறார் அல்லது போலியாக நடிக்கிறார் என்பதை பெண்கள் எப்படி கண்டுப்பிடிக்கிறார்கள்? என்பது பற்றி இங்கே காணலாம்…

அறிகுறி #1 நேர்மையான ஆண் எல்லா பெண்களையும் சம மதிப்பு அளித்து பழகுவார். ஒருபோதும் தாழ்த்தி நடத்தை விரும்ப மாட்டார். போலியாக நடிக்கும் ஆண்கள் பணக்கார பெண்களுக்கு மதிப்பு அளிப்பார்கள், பணமில்லை என்றால் கேவலமாக கருதுவார்கள்.

அறிகுறி #2 நேர்மையான ஆண் ஒருபோதும் ஒரு பெண்ணை ஈர்க்க நினைக்க மாட்டார். போலியானவர்கள் தங்களை ஸ்மார்ட்டாக காண்பித்துக் கொள்ள நடித்துக் கொண்டே இருப்பார்கள்.

அறிகுறி #3 ஒரு நேர்மையான ஆண், இந்த சமூகம் தன்னை உற்றுப் பார்க்க வேண்டும் என தனியாக எந்த செயலிலும் ஈடுபட மாட்டார்கள். ஆனால், போலியானவர்கள் யாரேனும் தன்னை புகழ வேண்டும் என்பதற்காகவே சில வேலைகளில் ஈடுபடுவார்கள்.

அறிகுறி #4 நேர்மையான ஆண்கள் பண்பாக நடந்து கொள்வார்கள். போலியானவர்கள் தலைமை வகிக்க, தங்களை மேற்கோளிட்டு காட்டிக் கொள்ள துடித்து கொண்டே இருப்பார்கள்.

அறிகுறி #5 நேர்மையான ஆண்கள் எதிலும் நேரடியாக நடந்து கொள்வார்கள். எதையும் மறைக்க மாட்டார்கள். போலியானவர்கள் தங்கள் நடத்தையில் சிலவற்றை மறைத்துக் கொள்வார்கள்.

அறிகுறி #6 நேர்மையான ஆண்கள், தங்களால் எதை செய்ய முடியுமோ, அதை மட்டுமே வெளியே கூறுவார்கள். தங்கள் தோல்விகளையும் ஒப்புக் கொள்வார்கள். போலியானவர்கள் போலி சத்தியங்கள் செய்வார்கள், தோல்விகளுக்கு சாக்குபோக்கு சொல்வார்கள்.

அறிகுறி #7 நேர்மையான ஆண்கள் மற்றவர்களை புண்படுத்தி சிரிக்க மாட்டார்கள். போலியான ஆண்கள் மற்றவர்களை விமர்சித்து அதில் இன்பம் காண்பார்கள்.

அறிகுறி #8 நேர்மையான ஆண்கள் மற்றவர்களுக்கு உதவுவார்கள். போலியானவர்கள் மற்றவரிடம் இருந்து சுரண்டுவார்கள்.