Home ஆண்கள் ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன? அதன் அறிகுறிகள் என்ன?

43

உலகளவில் மலட்டுத்தன்மை பிரச்சனை என்பது அதிகமாக இருக்கின்றது. 6 தம்பதிகளில் 1 தம்பதிக்கு மலட்டுத்தன்மை பிரச்சனை இருப்பதாக கூறப்படுகின்றது. அதேப்போன்று, மூன்றில் ஒருவருக்கு கருத்தரித்தல் பிரச்சனை இருப்பதாக தெரிய வந்துள்ளது.

மலட்டுத்தன்மை என்பது பெண்களுக்கான பிரச்சனை மட்டும்தானா? ஆண்களுக்கு கிடையாதா? என்று கேள்விகள் எழுகின்றது. நாம் இப்பொழுது, அதைப்பற்றி பார்ப்போம்.

ஆண் மலட்டுத்தன்மை என்றால் என்ன?

ஒரு பெண் கருவுறுதல் அடைவது அந்தப் பெண்ணால் மட்டுமானது மட்டுமல்ல. ஆணும் இணைந்தால் தான் அது நிகழும். அதனால், சில பெண்ணுக்கு குழந்தை பெறவில்லையென்றால், மலடி என்று சொல்லி நாம் சாதாரணமாக முடித்து விடுவோம்.

அதாவது, ஒரு பெண் கருவுறுதலில் தாமதம் ஆகிறதோ அல்லது வருடங்கள் ஏற்பட்டாலோ, இதில் அதிகபட்சமாக ஒரு பெண்ணுக்குத்தான் பிரச்சனை இருக்குமே தவிர, மற்றபடி இதற்கு ஆண்களின் விந்து செல்களில் உள்ள குறைபாடுகள் தான் காரணம் என்கின்றனர் மருத்துவர்கள்.

பாலியல் செயல்பாடு மற்றும் விந்து தரம் வளத்தை பாதிக்கக்கூடிய சில விஷயங்கள்:

1. ஆண்மைத்தன்மை குறைவு

2. விறைப்புத்தன்மையில் பாதிப்பு

3. விந்தணுக்களில் போதிய எண்ணிக்கை இல்லாமை

4. விந்தணுவில் போதிய சூழற்சி இல்லாமை

5. ஹார்மோன் வளர்ச்சியின்மை

இந்த தன்மைகள் எல்லாம் ஒரு ஆணிடம் இருக்கும் பொழுது, அதை ஆண் மலட்டுத்தன்மை என்று கூறுகின்றனர். இதனால், ஒரு பெண் கருவுறுதலில் தாமதமாகும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.