Home ஆண்கள் ஆண்(குறி)கள் பற்றி A-Z பேசும், 100 ஆண்களை நிர்வாணமாக படம் எடுத்த பெண்!

ஆண்(குறி)கள் பற்றி A-Z பேசும், 100 ஆண்களை நிர்வாணமாக படம் எடுத்த பெண்!

159

வாழ்வில் ஆண்களை பற்றிய ஒரு ஐடியாவிற்கான பயணமாக இது இருந்தது என கூறுபவர் லாரா டாட்ஸ்வொர்த். இவர் ஒரு புகைப்பட கலைஞி. இவர் இதற்கு முன் நூறு பெண்களின் மார்பகங்களை படம் எடுத்து பெண்கள் பற்றிய ஒரு ஆவண புத்தகம் எழுதியுள்ளார். இவர் இப்போது அதே போல நூறு ஆண்களின் ஆணுறுப்பை படம் எடுத்து. அது குறித்து அமையும் அவர்களது வாழ்க்கை, ஆரோக்கியம், மனநிலை போன்றவற்றை பற்றி ஒரு ஆவண புத்தகம் தயார் செய்துள்ளார். இந்த பயணத்தின் போது லாரா டாட்ஸ்வொர்த் ஆண்(குறி)கள் பற்றி அறிந்தவை..

#1 ஆண்கள் தங்களை பற்றி துணை பெறுமையாக பேச வேண்டும் என்ற ஆவல் கொடுள்ளனர். இது வெளிப்படையாக யாரும் கூறுவதில்லை எனிலும். தங்கள் பற்றி, தங்களிடம் தங்கள் செயல்கள் பற்றி மனைவி தன்னிடம் அதிகம் பேச வேண்டும் என ஆண்கள் விரும்புகின்றனர்.

#2 பெரும்பாலான ஆண்களுக்கு தங்கள் ஆண்குறி அளவு பற்றி கவலை இருக்கிறது. சிறிய அளவில் ஆணுறுப்பு கொண்டுள்ளவர்கள் அதை தான் தங்கள் வாழ்நாள் அவமானமாக கருதுகின்றனர். சிலர் தங்கள் ஆணுறுப்பை பெரிதாக்கிக் கொள்ள சிகிச்சைகளும் எடுத்துள்ளனர். பலரும் தங்கள் ஆணுறுப்பு இன்னும் பெரிதாக இருந்தால் நன்றாக இருக்கும் என்றவ விருப்பம் கொண்டிருந்துள்ளனர்.

#3 பெண்கள் எப்போதுமே தங்கள் கவலை மற்றும் உணர்வுகள் பற்றி நெருக்கமான தோழிகளிடம் கொட்டிதீர்த்து விடுவார்கள். ஆனால், ஆண்கள் அப்படி இல்லை. தங்கள் பெரும்பாலான கவலையை ஆண்கள் ஆண்களிடம் கூட பகிர்ந்துக் கொள்வது இல்லை. முக்கியமாக தாம்பத்தியம், ஆண்மை குறித்த விஷயங்கள்.

#4 ஆண்கள் தங்கள் துணையை எப்போதும் திருப்திபடுத்த வேண்டும் என்ற ஆசை கொண்டுள்ளனர். ஒரு ஆண், தான் உடலுறவு கொள்ளும் எல்லா பெண்களையும் இன்பத்தை உணர செய்ய வேண்டும் என விருப்பம் தெரிவிததுள்ளார். தங்கள் செயல்பாடு நிறைவாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஆண்கள் மத்தியில் அதிகமாக இருக்கிறது.

#5 ஆண்கள் உடலுறவை அமைதி தேடும் செயலாக தான் பார்க்கிறார்கள். தங்கள் மன அழுத்தம், பதட்டத்தை குறைத்து அமைதியை அளிக்கும் செயலாக தாம்பத்தியம் விளங்குகிறது என ஆண்கள் தெரிவிக்கின்றனர்.

#6 பெரும்பாலான ஆண்கள் ஒரு சிறந்த தந்தையாக திகழ வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டுள்ளனர். ஆல்கஹால், போதை பழக்கம் உள்ள ஆண்கள் தான் இதிலிருந்து கொஞ்சம் விலகி இருப்பது போன்ற பிம்பம் தென்படுகிறது. தாய்மை போல தந்தை ஸ்தானம் என்பதும் ஒரு பெரிய பரிசு, வரம் என்பது போன்ற உணர்வு ஆண்கள் மத்தியிலும் காணப்படுகிறது.

#7 அந்தரங்க பகுதியில் ரோமங்களை நீக்க ஆண்களும் விருப்பம் காட்டுகின்றனர். ஆனால், ஒரு ஆண் மட்டும் அதை நான் செய்வதில்லை. பெண்களும் அதை தான் விரும்புவார்கள் என கருதுவதாக கூறியுள்ளார். மேலும், அந்தரங்க பகுதி ரோமங்களை நீக்குவதற்கு பதிலாக ஆரோக்கியமாக பார்த்துக் கொண்டாலே போதுமானது என அவர் கூறியதாக லாரா டாட்ஸ்வொர்த் தெரிவித்துள்ளார்.

#8 பெரும்பாலான ஆண்கள் ஆண்மை மற்றும் ஆண்குறி சார்ந்த சில விஷயங்களால் மனநல பிரச்சனைகள் சந்திக்கின்றனர். இது சார்ந்த விஷயங்கள் ஒரு ஆணை முழுமையாக செயற்திறன் இழக்க காரணியாக அமைகிறது.

#9 ஆண்குறி என்பது ஆண்களின் ஒரு கொள்கை போன்ற கருவியாக இருக்கிறது. அந்த கொள்கை ஆரோக்கியமாக, சிறந்ததாக இருக்க வேண்டும் என்ற ஆசை ஆண்களிடம் இருக்கிறது. தான் சந்தித்த நூறு ஆண்களும் ஆண்குறி சார்ந்த கேலி, கிண்டல், கவுரவம், கர்வம் என பலதரப்பட்ட கருத்துகள் தெரிவித்தனர். ஆண்கள் இனிமையானவர்கள், என லாரா டாட்ஸ்வொர்த் கூறியுள்ளார்.