Home சமையல் குறிப்புகள் ஹரப்பா நாட்டுக்கோழி குழம்பு

ஹரப்பா நாட்டுக்கோழி குழம்பு

27

பாய்லர் கோழிகளை விட நாட்டுக் கோழி குழம்பு உடலுக்கு மிகவும் நல்லது, மிக சுவையாகவும் இருக்கும். அதில் சுவையான ஹரப்பா நாட்டுக்கோழி குழம்பு எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள:

நாட்டு கோழி – 1 கிலோ
எண்ணெய் – தேவையான அளவு
கடுகு -1/2 டீஸ்பூன்
இடிச்ச மிளகு – 1/2 டீஸ்பூன்
சீரகம் – 1 டீஸ்பூன்
மஞ்சள்- 1/24 டீஸ்பூன்
உப்பு – சுவைக்கேற்ப

செய்முறை:

முதலில் அடுப்பில் சட்டியை வைத்து எண்ணெய் ஊற்றி காயந்ததும் அதில் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதனுடன் இடிச்ச மிளகு, சீரகம், மஞ்சள் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அதன் பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள நாட்டுக்கோழியை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். நாட்டுக்கோழி நன்கு கொதித்த பின்பு பரிமாறலாம்.

சுவையான ஹரப்பா நாட்டுக்கோழி தயார்.