Home பாலியல் 1 கிட்னியுடன் வாழும் பெண்ணால் பூரண உடலுறவு சுகம் தரமுடியுமா?

1 கிட்னியுடன் வாழும் பெண்ணால் பூரண உடலுறவு சுகம் தரமுடியுமா?

61

நான் பிறவியிலிருந்தே ஒரு கிட்னியுடன்தான் வாழ்ந்து வருகிறேன். என்னால் “உடலுறவு சுகம்“ முழுமையாகப் பெறவும் (அ) கொடுக்கவும் முடியுமா? சராசரிப் பெண்ணைப் போல முழுமையாக செக்ஸில் ஈடுபட முடியுமா?

ஒரு கிட்னியுள்ளவர்கள் முழுமையாக “செக்ஸில்“ ஈடுபட வழிமுறைகள் இருந்தால் தயவுசெய்து சொல்லுங்கள். ஏனெனில் திருமணத்தில் செக்ஸ் தானே முக்கிய பங்கு வகிக்கிறது. நான் என்னவருடன் முழுமையாக ஒத்துழைக்க உங்கள் ஆலோசனை எனக்கு மிகவும் தேவைப்படுகிறது. நீங்கள் சொல்லும் பதிலில்தான் எனது வாழ்க்கை அடங்கியுள்ளது.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டுக் குழப்பிக்கொள்ளாதீர்கள். தாம்பத்திய வாழ்க்கைக்கும் கிட்னிக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை. கிட்னி உடம்பில் உள்ள ரத்தத்தை எல்லாம் சுத்தமாக வடிகட்டி, வேண்டாத வஸ்துக்களை சிறுநீராக வெளியேற்றுகிறது. இந்த துப்புரவுப் பணியைச் செய்ய ஒரு கிட்னியே போதுமானது. எதற்கும் உபரியாக ஒன்று இருக்கட்டுமே என்று இயற்கை கொசுறாய் இன்னொரு கிட்னியை அளித்திருக்கிறது. ஒரு கண், ஒரு காது, ஒரு நுரையீரல் மாதிரி ஒரேயொரு கிட்னி இருந்தாலும் நாம் உடல் ஆரோக்கியத்தோடு இருக்க எந்தக் குறையுமில்லை.

கிட்னிக்கும் உடல் உறவுக்கும், சுகத்துக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அது வேறு சிஸ்டம். இது வேறு சிஸ்டம். உங்கள் ஃபேமிலி டாக்டரை அணுகி, உங்கள் ஒற்றை கிட்னி ஒழுங்காக இருக்கிறதா என்று பரிசோதியுங்கள்.

ஓகே என்றால் தாராளமாகத் திருமணம் செய்து கொள்ளுங்கள். உங்கள் தாம்பத்திய வாழ்க்கை திருப்திகரமாக அமைய என் வாழ்த்துகள்.