Home இரகசியகேள்வி-பதில் Erectile Dysfunction விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சையில் வாழ்க்கை முறை

Erectile Dysfunction விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சையில் வாழ்க்கை முறை

75

ஆண்குறி விறைப்பு என்பது, ஆண்குறிக்கு வரும் இரத்த ஓட்டம், நரம்பியல் காரணிகள், ஹார்மோன் காரணிகள் மற்றும் உளவியல் காரணிகள் இவற்றுக்கு இடையிலான ஒருங்கிணைந்த சிக்கலான ஒரு செயல்பாட்டினால் நிகழ்கிறது. உறுதியான விறைப்பை அடையவும் அது நீடிக்கவும் ஆண்குறிக்கு இரத்த ஓட்டம் நன்றாக இருக்க வேண்டும், ஆண்குறியில் இருந்து வெளியேறும் இரத்தத்தின் அளவு குறைய வேண்டும். ஆண்குறிக்கு வரும் இரத்த ஓட்டம் மற்றும் ஆண்குறியில் இருந்து வெளியேறும் இரத்த ஓட்டம் ஆகியவற்றைப் பாதிக்கின்ற நோய்கள் மற்றும் ஆபத்துக் காரணிகள் இந்தச் செயல்பாட்டைப் பாதிக்கலாம்.

விறைப்பின்மைப் பிரச்சனையை சமாளித்தல்  (Management of Erectile dysfunction):

விறைப்பின்மைப் பிரச்சனையை நிர்வகித்தல் என்பதில், இதற்குக் காரணமாக இருக்க சாத்தியமுள்ள உடல் பிரச்சனைகள் (உதாரணமாக டெஸ்டோஸ்டிரோன் பற்றாக்குறை), நோய்கள் (நீரிழிவுநோய், உயர் இரத்த அழுத்தம் போன்றவை) அல்லது உளவியல் காரணிகள் (மனக்கலக்கம், மன இறுக்கம் போன்றவை) ஆகியவற்றைக் கண்டறிவதும் அவற்றுக்கு சிகிச்சை அளிப்பதும் அடங்கும். தற்போது, விறைப்பின்மைப் பிரச்சனைக்கு உள்ள சிகிச்சை முறைகள்: வாய்வழி எடுத்துக்கொள்ளும் ஃபாஸ்ஃபோடையெஸ்டிரேஸ் வகை 5 [PDE-5] தடுப்பு மருந்துகள், இன்ட்ரா-யூரேத்ரல் அல்ப்ரோஸ்டாடில், இன்ட்ராகேவர்னஸ் இன்ஜெக்ஷன் ஆஃப் வாசோஆக்டிவ் ட்ரக், வாக்கும் பம்ப் சாதனங்கள் (பெனிஸ் பம்ப்) மற்றும் பீனில் புரோஸ்தீசிஸ் இம்ப்ளான்ட்ஸ் போன்றவை.

விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சையில் வாழ்க்கை முறையில் மாற்றங்கள் (Lifestyle modification in the treatment of erectile dysfunction):

இந்தப் பிரச்சனைக்கான உரிய சிகிச்சை எடுத்துக்கொண்டு, அதே சமயம் உங்கள் வாழ்க்கை முறையிலும் சில மாற்றங்களைச் செய்யுமாறு உங்கள் மருத்துவர் பரிந்துரைக்கலாம். அவை உங்கள் வாழ்க்கையில் விறைப்பின்மைப் பிரச்சனை வரும் அபாயத்தைக் குறைக்க உதவும். பிற சிகிச்சைக்கு முன்பு அல்லது சிகிச்சை எடுத்துக்கொண்டே நீங்கள் செயல்படுத்தக்கூடிய சில வாழ்க்கை முறை மாற்றங்கள்:

புகைபிடிப்பதை நிறுத்தவும் (Quit Smoking)

விறைப்பின்மைப் பிரச்சனையை உண்டாக்குவதில் புகைப்பழக்கம் முக்கியப் பங்கு வகிக்கிறது. புகைப்பழக்கம் இல்லாதவர்களுடன் ஒப்பிடும்போது, புகைப்பழக்கம் உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்சனை இருப்பதற்கான வாய்ப்பு கிட்டத்தட்ட இருமடங்காக உள்ளது. புகைப்பழக்கமும் கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருப்பதும் இரத்தக் குழாய்களின் சுவர்ப்பகுதியில் கொழுப்பு மிகுந்த கொலஸ்டிரால் அதிகமுள்ள பொருள்கள் படியும் (“பிளேக்”) அபாயத்தை அதிகப்படுத்துகின்றன. இதனை “அதிரோஸ்கெலிரோசிஸ்” என்கின்றனர். இந்தப் பதிவுகள் நாட்கள் செல்லச் செல்ல அதிகரித்துக்கொண்டே சென்று இரத்தக் குழாயை சுருங்கச் செய்து ஆண்குறிக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தின் அளவைக் குறைக்கும் இதனால் விறைப்பின்மைப் பிரச்சனை உண்டாகிறது.

புகைப்பழக்கத்தை விடுவது விறைப்பின்மைப் பிரச்சனை இன்னும் அதிகமாகாமல் தடுக்கவும் தற்போதுள்ள அறிகுறிகளைக் குறைக்கவும் உதவலாம்.

கொழுப்பு அளவுகளைக் கட்டுப்படுத்தவும் (Control your cholesterol levels)

இரத்த லிப்பிடுகளின் (கொழுப்பு) அளவு அதிகமாக இருப்பது, குறிப்பாக கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருப்பது, விறைப்பின்மைப் பிரச்சனையில் முக்கியப் பங்கு வகிக்கிறது. விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களில் சிலருக்கு, கொலஸ்டிரால் அளவு அதிகமாக இருக்கும், வேறு எந்த ஆபத்துக் காரணிகளும் அவர்களுக்கு இல்லாதிருக்கும். சிலருக்கு பல ஆபத்துக் காரணிகளில் அதுவும் ஒன்றாக இருக்கும். கெட்ட கொழுப்பு இரத்தக் குழாய் சுவர்களில் படிந்து இரத்தக் குழாய்கள் சுருங்கி ஆண்குறி உட்பட பல்வேறு உறுப்புகளுக்குச் செல்லும் இரத்த ஓட்டத்தைக் குறைக்கலாம்.

கொலஸ்டிரால் அளவைக் குறைப்பதன் மூலம் விறைப்பின்மைப் பிரச்சனை குறையக்கூடும். கொலஸ்டிரால் அளவைக் குறைக்கும் மருந்துகள் (ஸ்டாட்டின்கள் எனப்படுபவை) விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள சில ஆண்களுக்கு பலனளித்துள்ளன, மேலும் விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சையில் பயன்படுத்தப்படும் PDE-5 தடுப்பு மருந்துகள் (உதாரணமாக வயாக்ரா) செயல்படுவதையும் மேம்படுத்துகின்றன.

உடல் எடையை சரியாக வைத்துக்கொள்ள, தொடர்ந்து உடற்பயிற்சி செய்யுங்கள் (Exercise regularly and maintain optimum body weight)

இதயம் மற்றும் இரத்தக் குழாய்களை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உடற்பயிற்சி உதவுகிறது. இதனால் ஆண்குறிக்கு இரத்தம் நன்கு பாய முடியும். மாசூச்செசிட்ஸ் மேல் ஏஜிங் ஸ்டடி (MMAS) ஆய்வில் நடுத்தர வயதில் உடற்பயிற்சி செய்யத் தொடங்கிய ஆண்களில் விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படும் ஆபத்து உடற்பயிற்சி எதுவும் இல்லாதவர்களுடன் ஒப்பிடுகையில் 70% குறைவாக இருந்தது தெரியவந்தது. தொடர்ச்சியாக உடற்பயிற்சி செய்பவர்களுக்கு விறைப்பின்மைப் பிரச்சனை ஏற்படுவது மிகக் குறைவாக இருந்தது என்றும் 8 வருட கண்காணிப்பில் தெரியவந்தது.

பருமனான ஆண்கள் பங்கேற்ற மற்றோர் ஆய்வில், இரண்டு ஆண்டுகள் கடுமையாக உடற்பயிற்சி செய்த ஆண்களுக்கு, விறைப்பின்மைப் பிரச்சனை பற்றிய தகவல்கள் மட்டும் அளிக்கப்பட்ட ஆண்களுடன் ஒப்பிடுகையில் விறைப்பின்மைப் பிரச்சனையின் அறிகுறிகள் வெகுவாகக் குறைந்திருந்ததும் எடை குறைந்ததும் தெரியவந்தது. எடை குறைவு மற்றும் உடல் செயல்பாடு போன்றவை அவர்களின் அறிகுறிகள் குறைவதில் மிகுந்த தொடர்புடையவையாக இருந்தன.

UCLA ஆய்வு ஒன்றில், உடற்பயிற்சி ஆரோக்கியம் அதிகரிக்கும்போது விறைப்பின்மைப் பிரச்சனை குறைவது கண்டறியப்பட்டது. குறைந்தபட்சம் தினசரி அரை மணிநேரம் வேகமாக நடக்க வேண்டும் அல்லது அதற்கு இணையான உடற்பயிற்சி செய்ய வேண்டும் என்று நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். உடல் நிறை குறியீட்டெண்ணை 30 kg/m2 க்குக் குறைவாக வைத்துக்கொள்ள முயற்சி செய்யவும்.

மது அருந்தும் அளவில் கட்டுப்பாடு அவசியம் (Limit Alcohol)

ஆல்கஹால் பாலியல் விருப்பத்தை அதிகரிக்கும், ஆனால் பாலியல் திறனைக் குறைத்துவிடும்! ஆல்கஹால் நரம்பு செயல்பாடுகளை முடக்கக்கூடியது. இரண்டு முறைக்கு மேல் மது அருந்தினால் விறைப்படையும் தன்மை குறையும், விறைப்பு நீடிக்கும் நேரமும் குறையும்.

கெகல் பயிற்சிகள் (Kegel’s exercises)

கீழ் இடுப்புத்தளப் பகுதியில் அமைந்துள்ள இஸ்ச்சியோகாவெர்நோசஸ் மற்றும் பல்போகாவெர்நோசஸ் உள்ளிட்ட தசைகளைச் சுருக்குவதால் இன்ட்ரா காவர்நோஸ் அழுத்தம் (ஆண்குறியில் உள்ள ஸ்பாஞ்சு போன்ற விறைப்படையும் திசுவில் உள்ள அழுத்தம்) அதிகமாகி ஆணுறுப்பு விறைப்பு அதிகமாகும். பல்போகாவர்நோஸ் தசை ஆண்குறியில் இருக்கும் இரத்தக் குழாயை (சிரை) அழுத்தி விரிவடைந்த ஆண்குறியில் இருந்து இரத்தம் வெளியேறுவதைக் குறைக்கிறது.

இந்தத் தசைகளை வலிமைப்படுத்தும் உடற்பயிற்சிகள் விறைப்பின்மைப் பிரச்சனைக்கான சிகிச்சையில் நல்ல பலன் கொடுத்து உதவும் என்று ஆராய்ச்சிகள் தெரிவித்துள்ளன.

கூடுதல் சத்துணவுகள் (Food supplements)

ஜின்செங் (பனாக்ஸ் ஜின்செங்), பிரெஞ்ச் மாரிட்டைம் பைனில் (பைனஸ் பினாஸ்டார்) இருந்து கிடைக்கும் பைக்நோஜெனால் போன்ற சத்துணவுகளும் ஆன்டிஆக்சிடன்ட் மாத்திரைகளும் விறைப்பின்மைப் பிரச்சனைக்கு நல்ல பலன் கொடுப்பது தெரியவந்துள்ளது. இது போன்ற சத்துப்பொருள்களை எடுத்துக்கொள்வது பலனளிக்குமா என்று உங்கள் மருத்துவரிடம் ஆலோசிக்கவும்.

இதயம், இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளதா என சோதனை செய்துகொள்ளவும் (Get yourself screened for Cardiovascular Diseases)

விறைப்பின்மைப் பிரச்சனை உள்ள ஆண்களுக்கு கரோனரி தமனி நோய் (CAD), செரப்ரோவாஸ்குலார் டிசீஸ் (பக்கவாதம்), பெரிபரல் வாஸ்குலார் டிசீஸ் (கை கால் மற்றும் பிற உறுப்புகளுக்கான தமனிகளில் அடைப்பு) போன்ற இதயம், இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட நோய்கள் வரும் ஆபத்தும் அதிகமுள்ளது. மற்றபடி சாதாரண நபர் ஒருவருக்கு விறைப்பின்மைப் பிரச்சனை இருந்தால், அது அவருக்கு கரோனரி தமனி நோய் போன்ற இதயம், இரத்தக்குழாய்கள் சம்பந்தப்பட்ட பிற நோய்கள் இருப்பதன் அடையாளமாக இருக்கலாம். மருத்துவ ஆலோசனையின்போது உங்களுக்கு இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் உள்ளதா எனக் கண்டறிவதற்காக சில பரிசோதனைகளை மருத்துவர் செய்யலாம்.

உங்களுக்கு விறைப்பின்மைப் பிரச்சனை இருப்பதாக உறுதியானால், மேலே விவரித்த வாழ்க்கை முறை மாற்றங்களைச் செயல்படுத்தி, தொடர்ந்து மருத்துவரிடம் சென்று உரிய சிகிச்சையும் எடுத்துக்கொள்ள வேண்டும். மருத்துவர் பரிந்துரையின்படி இதயம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் உள்ளதா எனக் கண்டறிவதற்கான சோதனைகளையும் (கொலஸ்டிரால் அளவு சோதனை, ECG, எக்கோகார்டியோகிராம் போன்றவை) செய்துகொண்டு மருத்துவரின் அறிவுரைப்படி செயல்படவும்.