Home சூடான செய்திகள் விபச்சாரம் லீகலானால் என்னவெல்லாம் நடக்கும்?

விபச்சாரம் லீகலானால் என்னவெல்லாம் நடக்கும்?

27

26-1474887740-2thingsthatcanhappenifprostitutionbecomeslegalவிபச்சாராம் என்றால் வாயால் மட்டும் தான் பலரும் அபச்சாரம் என கூறுவார்கள். ஆனால், மனதளவில் உடலுறவு என்பது இல்லாமல் 90% ஆண், பெண் வாழ்க்கை இன்றியமையாத ஒன்றாகும். உலகளவில் கற்பழிப்பு விகிதம் அதிகரித்துக் கொண்டிருக்கும் நாடுகளில் இந்தியா முதன்மை வகித்து வருகிறது. கற்பழிப்பை குறைப்பதற்கும் விபச்சாரத்தை லீகல் ஆக்குவதற்கும் என்ன சம்மந்தம் இருக்கிறது? காதலித்த பெண் மறுப்பு தெரிவித்ததால் கொலை செய்ததாக தான் குற்றங்கள் பதிவாகின்றனவே தவிர, கற்பழித்ததாக அல்ல (எண்ணிக்கை அளவில்). ஆனால், இச்சை எண்ணத்தால் தான் பெரும்பாலும் கற்பழிப்பு சம்பவங்கள் நிகழ்கின்றன. கள்ளச்சாராயம் மூலம் உயிரிழப்பு அதிகம் ஏற்பட்டது என்பதால் அரசு டாஸ்மாக்கை கையில் எடுத்தது. கள்ளச்சாராயம் ஒழிந்தது. அதற்காக விபச்சாரத்தை அரசு கையில் எல்லாம் எடுக்க வேண்டாம். சரியான சட்டவிதிகள் அமைத்து அதை லீகல் செய்தால், பெண்களுக்கு எதிரான குற்ற சம்பவங்கள் குறையலாம், குறைக்கலாம்…
பாலியல் நோய் குறையும்! ஒருசில ஆய்வுகளில் பாலியல் தொழிலை லீகல் செய்துவிட்டால் எச்.ஐ.வி போன்ற பாலியல் நோய்கள் 33 – 46% வரை குறைய வாய்ப்புகள் உள்ளன என கூறப்பட்டுள்ளன. இதனால், பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் மற்றும் அங்கு சென்று வருவோரின் ஆரோக்கிய குறைகளும் குறையலாம்.

பாலியல் குற்றங்கள் குறையும்! பாலியல் தொழிலை லீகல் செய்துவிட்டால் பெண்களுக்கு எதிராக நடக்கும் கற்பழிப்பு போன்ற பாலியல் குற்றங்கள் குறையும் என்றும் ஆய்வுகளில் கூறப்பட்டுள்ளது. மேலும், இது பெண்கள் மீது கட்டாயத்தின் பால் நடக்கும் அநாகரிகமான செயல்களையும் குறைக்கும். எனவே, குறிப்பிட்ட இடங்களில் பாலியலை லீகல் செய்வதால் பாலியல் குற்றங்களை வெகுவாக குறைக்கலாம்.

மைனர் பாதுகாப்பு! பதின் வயது மற்றும் சிறுவயது குழந்தைகள் மீதான பாலியல் குற்றங்கள் குறையலாம். மேலும், குழந்தைகளை குறிவைத்து கடத்தும் சம்பவங்கள் உலக அளவில் குறைய வாய்ப்புகள் உள்ளன.

தொழிலார்கள் உரிமை! பாலியல் தொழிலை லீகல் செய்வதால், பாலியல் தொழிலில் ஈடுபடும் நபர்களுக்கும் தொழிலாளர் உரிமைகள் சென்றடையும். இதனால், பாதிகாப்பு உரிமை, சம்பளம், ஆரோக்கியம் சார்ந்த பலன்கள், சட்டரீதியான முறையில் பாதுகாப்பு போன்றவை கிடைக்கும்.

வரி வருவாய்… பாலியல் தொழிலை லீகல் செய்வதன் மூலம் அரசாங்கம் வரி வருவாயும் ஈட்டலாம். சாலை ஓரத்தில் வியாபாரம் செய்பவர்கள், சிறு தொழில் செய்பவர்கள் எல்லாம் வரி கட்ட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரும் அரசு, பாலியலை லீகல் செய்து அதன் மூலம் வரி வசூல் செய்யலாம். இந்தியாவின் பல இடங்களில் இந்த தொழிலில் தான் சர்வசாதாரணமாக லட்சங்கள் புரளுகின்றன.