Home ஆரோக்கியம் வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

வாயுத்தொல்லை நீங்க எளிய மருத்துவ குறிப்புகள்

23

download (2)* வேப்பம் பூவை உலர்த்தி பொடியாக்கி வெந்நீரில் உட்கொள்வதினால் வாயுதொல்லை நீங்கும். ஆறாத வயிற்றுப்புண்கள் ஆறும்.

* மோருடன் சீரகம், இஞ்சி, சிறிது உப்பு சேர்த்துப் பருகினால் வாயுத் தொல்லை நீங்கும்.

* சுக்கு மல்லி(தனியா) கசாயம் வாயுக்கு நல்லது.

* பசும்பாலில் 10 பூண்டு பற்களை சேர்த்து காய்ச்சி குடித்தால் வாயு சேராது.

* இஞ்சியை அரைத்து பசும்பாலில் கலந்து குடிக்க அனைத்துவித வாயுக்கோளாறும் தீரும்.

* புதினாக்கீரையை நெய் விட்டு வதக்கி, இதனுடன் உப்பு, புளி, மிளகாய், தேங்காய் சேர்த்து துவையல் செய்து உணவுடன் சாப்பிட்டு வர வாயு அகலும்.

* வெந்தயக்கீரை, தூதுவளைக்கீரை, வள்ளக்கீரை, முடக்கத்தான்கீரை போன்ற கீரைகள் வாயுவைப் போக்கும்.

* சமைக்கும் போது இஞ்சி, பெருங்காயம் சேர்த்து சமைப்பது வாயுவைக் குறைக்கும்.

* முடக்கற்றான் கீரையை கைப்பிடி அளவு 1 கோப்பை தண்ணீரில் வேக வைத்து அந்த சாற்றுடன் சிறிது விளக்கெண்ணை விட்டுப் பருக வயிற்றில் உள்ள வாயு வெளியேறும்.

* தினமும் பெருங்காயத்தை சாப்பாட்டில் சேர்த்து வந்தால் வயிற்று வலி, வயிறு உப்புசம் போன்ற தொல்லைகள் வராது. மலச்சிக்கலை நீக்கி, குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி வாய்ந்தது.

* இஞ்சியை அரைத்து நீரில் கலந்து தெளிந்தபின், நீரை எடுத்து, துளசி இலை சாறை சேர்த்து ஒரு கரண்டி வீதம் ஒரு வாரம் சாப்பிட வாய்வுத் தொல்லை நீங்கும்.

* ஓமம், கடுக்காய், வால்மிளகு, வெள்ளைப் பூண்டு, மிளகு, சுண்டைக்காய், சாதிப் பத்திரி, வெங்காயம் போன்றவைகளும் வாயுவைப் போக்கும்.