Home சூடான செய்திகள் எந்தெந்த ராசிக்காரர்கள் இல்லறத்தில் அதிக இன்பம் அடைவார்கள்?…

எந்தெந்த ராசிக்காரர்கள் இல்லறத்தில் அதிக இன்பம் அடைவார்கள்?…

37

வாழ்க்கைத்துணையை மயக்குவதும் திருப்திப்படுத்துவம் ஒரு கலை. உங்கள் துணையை உங்கள் பக்கம் திரும்ப வைப்பதில்தான் இருக்கிறது உங்களுடைய ஆண்மையின் பலம். அதற்கும் உங்களுடைய ராசிக்கும் சம்பந்தம் இருக்கிறதா என்றால் இருக்கிறது என்றே சொல்ல வேண்டும்.

எந்தெந்த இரண்டு ராசிக்காரர்கள் இணைந்தால் ஆனந்தம் பெருகும் என்று தெரியுமா?…

மேஷ ராசிக்காரர்கள் உங்கள் துணையின் முகம் மற்றும் தலையில் முழு ஈடுபாட்டையும் செலுத்த வேண்டும். ஆண்கள் பெண்களின் தலையை கோதிக்கொண்டே லேசாக முத்தமிட்டால் போதும். உங்கள் துணை உங்களைச் சுற்றியே வட்டமிடுவார்கள்.

ரிஷப ராசிக்காரர்கள் உங்கள் வாழ்க்கைத் துணையின் காது மடல்களை வருடிக் கொண்டே முத்தமிட வேண்டும். சிறிய முணுமுணுப்போடு முதுகுப்பகுதியையும் கழுத்துப் பகுதியையும் வருடிக் கொடுக்க வேண்டும்.

மிதுன ராசிக்காரர்கள் பொதுவாகவே வலிமையானவர்களாக இருப்பார்கள். அப்படி இருக்கும்போது மிதுன ராசிக்கார பெண்களிடம் ஆண்கள் இந்த விஷயத்தில் நிச்சயம் கெஞ்சித்தான் ஆக வேண்டும்.

கடக ராசிக்காரர்கள் ஆரம்பத்தில் கொஞ்சம் தயக்கம் காட்டுவார்கள். கை முதல் பிட்டப்பகுதி வரை தீண்டி, மனநிலையை சரிசெய்ய வேண்டும்.

சிம்ம ராசிக்காரர்கள் மசாஜ் செய்வது, கடிப்பது, நாவால் வருடுவது என கொஞ்சம் ஆழமாக இறங்கியே தன்னுடைய வாழ்க்கைத் துணையை ரசிக்கவும் கொண்டாடவும் செய்வார்கள்.

கன்னி ராசிக்காரர்கள் நாக்காலும் விரல்களாலும் வருடிக் கொடுத்துக் கொண்டே தான் பேசுவார்கள். இவர்கள் இந்த விஷயத்தில் கொஞ்சம் கற்பனைத் திறனோடு செயல்படுவார்கள்.

துலாம் ராசிக்காரர்கள் இந்த விஷயத்தில் நின்று நிதானமாக விளையாடக் கூடியவர்கள். எதையும் பொறுமையுடன் எதிர்கொள்வார்கள்.

விருச்சிக ராசிக்காரர்கள் கொஞ்சம் இந்த விஷயத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். எல்லா விஷயத்தையும் போல கவனக்குறைவாக இதிலும் இருந்துவிடாதீர்கள்.

தனுசு ராசிக்காரர்கள் கொஞ்சம் அதிக உடல் வலிமை கொண்டவர்களாக இருப்பார்கள். முத்தமிடுதல், மசாஜ் செய்தல், கனிவாக நடத்தல் ஆகியவற்றால் நீங்கள் நினைத்ததை சாதிக்க முடியும்.

மகர ராசிக்காரர்கள் முன்விளையாட்டுகளில் கில்லாடிகளாக இருப்பார்கள். தலை முதல் முழங்கால் வரை முத்தமிட்டு, தங்களுடைய தேவையை தன் துணையிடம் நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கும்ப ராசிக்காரர்களின் ஒவ்வொரு உடல் தீண்டலும் தன்னுடைய துணையை உற்சாகப்படுத்திக் கொண்டே இருக்கும். தன்னுடைய துணையை ஈர்ப்பதில் கும்ப ராசிக்காரர்களுக்கு நிகர் அவர்களே தான்.

மீன ராசிக்காரர்கள் இதிலெல்லாம் கொஞ்சம் சுமார் தான். இவர்களை கொஞ்சம் மென்மையாகத் தான் கையாள வேண்டும். எந்த விஷயத்தையும் மிக மெதுவாகவே தொடங்குவார்கள்.