Home ஆரோக்கியம் மூலநோய் எதனால் வருகிறது?

மூலநோய் எதனால் வருகிறது?

22

மூலநோய்-எதனால்-வருகிறதுமூல நோய் வர காரணம்?
நாள்பட்ட மலச்சிக்கல், நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்தல், மலம் கழிக்க கஷ்டப்படுதல், நீண்டநாள்
மூலநோய் எதனால் வருகிறது
வயிற்றுப்போக்கு, ஆசன வாயில் ஏற்படும் நோய்த் தொற்றுகள், அதிக காரம், மற்றும் மசாலா நிறைந்த உணவுகளை சாப்பிடுவது,
அசைவ உணவுகளை அடிக்கடி சாப்பிடுவது போன்ற காரணங்களால் மலக்குடல் அழுத்தத்திற்கு ஆளாகி மூல நோய் வருகிறது.
மூல நோயின் அறிகுறிகள்?
ஆசன வாயில் அரிப்பு ஏற்படுதல், வலியுடன் மலம் கழித்தல், மலத்துடன் இரத்தம் கலந்து வருதல், மலம் கழிக்கும் போதும், கழித்த
பிறகும் தாங்க முடியாத எரிச்சல் மற்றும் வலி எற்படுதல், ஆசன வாய்ப்பகுதியில் பட்டாணி அளவிற்கோ அல்லது அதற்கு மேலோ
மலக்குடல், முளை போல் வெளித்தள்ளுதல் போன்றவையே.
மூலநோய் வராமல் தடுக்கும் வழிகள்?
மலம் கழிக்கும் உணர்வு ஏற்பட்டவுடன் முடிந்த அளவு சீக்கிரமாக மலம் கழித்து விட வேண்டும். அதிகபடியான காரம், மசாலா
உணவுகளை சாப்பிடக்கூடாது. அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். நார்ச் சத்துள்ள உணவு பொருட்களை அதிகம் உட்கொள்ள
வேண்டும். நீண்ட நேரம் ஒரே இடத்தில் அமர்வதை தவிர்க்க வேண்டும்.