Home சமையல் குறிப்புகள் மிளகு மட்டன் வறுவல்:

மிளகு மட்டன் வறுவல்:

11

தேவையான பொருட்கள்:


• ஆட்டிறைச்சி – ண கிலோ
• மஞ்சள் தூள் – ட தேக்கரண்டி
• மிளகாய் தூள் – 1 தேக்கரண்டி
• மிளகு தூள் – ண தேக்கரண்டி
• பச்சை மிளகாய் – 1 அல்லது 2
• இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1 டீஸ்பூன்
• தனியா தூள் – 1 தேக்கரண்டி
• ந்றுக்கிய புதினா, கொத்தமல்லி இலைகள் – 1 கப்
• கரம் மசாலா தூள் – ண தேக்கரண்டி
• சீரகத்தூள் – ட தேக்கரண்டி
• அரைத்த தேங்காய் விழுது – 3 டீஸ்பூன்
• வெங்காய விழுது – 1 கப்
• எண்ணெய் – 2 டீஸ்பூன்
• வெந்தயம் தூள் – ட தேக்கரண்டி
• பெருஞ்சீரகம்/சோம்பு தூள் – ண தேக்கரண்டி
• சிவப்பு மிளகாய் – 1 அல்லது 2
• வெங்காயம் அரிந்தது – அரை கப்
• எலுமிச்சை சாறு – சில துளிகள்
• புதிய கொத்தமல்லி இலைகள்
• உப்பு

செய்முறை:
1. ஆட்டிறைச்சியை நன்றாக சுத்தம் செய்து கொண்டு, நீரை வடித்துவிட்டு வைக்கவும்.
2. அரிந்த வெங்காயத்தை சிறிது நீர் விட்டு ஆட்டிக் கொளள்வும்.
3. சாப்பிடுவதற்கு ஏற்றவாறு ஆட்டிறைச்சியை துண்டுகளாக வெட்டிக் கொண்டு, ஒரு கடாயில் எடுத்துக் கொள்ளவும்.
4. இதனுடன் மஞ்சள்தூள், சிவப்பு மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
5. பச்சை மிளகாய், சீரகம், நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லி இலைகள் சேர்க்கவும்.
6. கரம் மசாலா தூள், சீரகத்தூள், உப்பு சேர்க்கவும்.
7. இதை எல்லாம் நன்கு கலந்து கொள்ளாவும்.
8. இப்போது அரைத்த தேங்காய் விழுதை சேர்க்கவும்.
9. இறுதியாக வெங்காய விழுதை சேர்த்து ஒன்றாக அனைத்து பொருட்கள் கலந்து கொள்ளவும்.
10. இதை எல்லாம் நன்றாக கலந்து கொண்டு, தண்ணீர் 1 கப் சேர்த்து பிரஷர் குக்கரில் வைக்கவும்.
11. 4 விசில் வந்ததும், 4 லிருந்து 5 நிமிடங்கள் மிதமான தீயில் வைக்கவும்.
12. ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து சூடக்கிக் கொள்ளவும்.
13. இதனுடன் வெந்தயம் தூள், சோம்பு தூள், சிவப்பு மிளகாய் சேர்த்து நன்கு கலககவும்.
14. இறுதியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து ஒரு நிமிடம் நன்கு கிளறவும்.
15. இதனுடன் வேக வைத்த ஆட்டிறைச்சியை சேர்த்து, இரண்டு நிமிடங்கள் வேக வைக்கவும்.
16. சுவைக்கேற்றவாறு உப்பை சரிபார்த்து போடவும்.
17. மசாலா கலவை த்யார் நிலக்கு வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்.
18. புதிதாக நறுக்கிய கொத்தமல்லி இலைகள் மற்றும் எலுமிச்சை சாறு ஒரு தேக்கரண்டி சேர்த்து அழகுபடுத்தவும்.
19. காரசாரமான் செட்டிநாடு பாணி மட்டன் வறுவல் ரெடி.
20. ரசம் சாதத்திற்கான அருமையான ஒரு ஷைட் டிஷ், இந்த மட்டன் வறுவல்.
21. சப்பாத்தி, நான், ரொட்டி அல்லது சாதத்திற்கும் இந்த டிஷ் சூப்பராக இருக்கும்.