Home பெண்கள் உடல் கட்டுப்பாடு மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது.

மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது.

18

எனது மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மற்றதோடு ஒப்பிடும் போது சிறியதாகவும் உள்ளது .

எனது வயது 25, திருமணமாகவில்லை, எனது மார்பகங்கள் மற்ற பெண்களோடு ஒப்பிடும் போது மிகவும் சிறியதாக உள்ளது. மேலும் எனது ஒரு மார்பகம் மற்றதோடு ஒப்பிடும் போது சிறியதாகவும் உள்ளது . இதனால் எனக்கு பிற்காலத்தில் குழந்தை பெறுவதிலும் பாலூட்டுவதிலும் ஏதேனும் பிரச்சினை ஏற்படுமா?

இது உங்களுக்கு மட்டுமல்ல பல பெண்களுக்கும் ஏற்படும் சந்தேகம்தான்.
முதலாவதாக மார்பகங்களின் அளவு என்பது ஒருவருக்கு ஒருவர் வேறுபடுவது. ஒருவரின் உயரம் இன்னொருவரில் இருந்து வேறுபடுவதைப்போல் மார்பகங்களின் அளவும் வேறுபடுவது சாதாரனம்தான். அதேபோல் ஒரு பெண்ணின் இரண்டு மார்பகங்களும் ஒன்றின் அளவில் இருந்து இன்னொன்று வேறுபடுவதும் சாதாரணமானதே இதனால் எந்தப் பாதிப்பும் இல்லை.

குழந்தை பெறுவதற்கும், மார்பகங்களின் அளவுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை.

நீங்கள் பிரசவிக்கும்போது உங்கள் உடல் உங்கள் மார்பகங்களை பால் ஊட்டுவதற்காக தயார்படுத்திக் கொள்ளும். அதனால் மார்பகங்களின் அளவு தாய்ப்பால் ஊட்டுவதிலும் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தாது.