Home உறவு-காதல் மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி?

மனைவியின் மனதில் இடம் பிடிப்பது எப்படி?

38

கணவன், மனைவிக்குள் சில விஷயங்களை விட்டு கொடுத்து சென்றால் தான் குடும்ப வாழ்க்கை சந்தோஷமாக செல்லும். கணவன் மனைவியை அடிமை போல் நடத்தாமல் அன்புடன் நடத்த வேண்டும். அப்போது தான் குடும்ப வாழ்க்கை சண்டை சச்சரவுகள் இல்லாமல் சந்தோஷமாக அமையும்.

உங்கள் மனைவி உங்களிடம் பேசும் போது அவர்கள் சொல்வதை நன்றாக கவனியுங்கள்.. (தங்கள் சொல்லிற்கு மதிப்பு தருவதில் பெருமிதம் கொள்வார்கள்..)

குடும்ப விஷயங்களில் உங்கள் மனைவியின் கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள்.. (அவர்கள் அதிகமாக எதிர்பார்க்கும் அங்கீகாரம் இது..!)

உங்கள் மனைவியிடம் உள்ள தனித்திறமையை உணர்ந்து, மனதார பாராட்டக் கற்றுக் கொள்ளுங்கள்.. (பெண்கள் தங்களை பாராட்டுவதையும் புகழ்வதையும் அதிகம் நேசிப்பார்கள்..)

உங்கள் மனைவியிடம் பொய் சொல்வதை தவிருங்கள்.. (கணவன் சொல்லும் பொய்களை அவர்கள் விரும்புவதில்லை…)

உங்கள் மனைவியிடம் அடிக்கடி குற்றம் கண்டுப்பிடித்துக் கொண்டு இருக்காதீர்கள்..(அதிலும் குழந்தைகள் முன் தங்களை குறைக்கூறுவதை பொதுவாகவே பெண்கள் விரும்புவதில்லை..)

உங்கள் மனைவியின் ஆடை அலங்காரத்தை ரசித்து வர்ணியுங்கள்.. (உங்கள் வார்த்தைகள் தரும் மகிழ்ச்சி, அவர்கள் மன நிறைவிற்கு வித்திடும்..)

உங்கள் மனைவி வீட்டு வேலைகள் செய்யும் போது அவர்களுக்கு உதவுங்கள்.. (அவர்கள் அதை எதிர்ப்பார்க்காவிட்டாலும், ரசிப்பார்கள்..)

எவ்வளவு பிரச்சனை வந்தாலும், மனைவியின் பிறந்த வீட்டினரை அவமானப்படுத்தும்படி பேசாதீர்கள்.. (இதனால் அவர்கள் மனதில் உங்கள் வீட்டினரை பழி வாங்கும் வெறுப்புணர்ச்சியாக மாறி விடக்கூடும்..)

உங்கள் மனைவியின் பிறந்த நாளையும், உங்கள் திருமண நாளையும் நினைவில் வைத்து, அந்த நாட்களில் அவர்களை கோவிலுக்கோ அல்லது அவர் விரும்பும் இடத்திற்கு அழைத்துச் செல்ல மறவாதீர்கள்.. (மற்ற நாட்களை விட, இதுப் போன்ற நாட்களில் கணவனுடன் இருப்பதை பெண்கள் பெரிதும் விரும்புவார்கள்..)

உங்கள் மனைவி குழந்தை பெற்றுத் தரும் இயந்திரம் இல்லை என்பதை உணர்ந்து அவர்கள் எண்ணங்களுக்கு மதிப்புக் கொடுங்கள். (தன்னை மதிக்கும் கணவனுக்கு பணிவிடை செய்வதில் முதலிடம் தருபவர்களும் அவர்களே..)

உங்கள் மனைவி எதிர்பாராத விதத்தில் அவர்களுக்கு பிடித்த சேலை மற்றும் சுரிதாரை பரிசாக அளித்து அவர்களை மகிழ்வித்து மகிழுங்கள்..!