Home ஜல்சா பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கேமராக்கள்

பெண்களுக்கு ஆபத்தை விளைவிக்கும் கேமராக்கள்

58

Captureபொது இடங்களில் குறிப்பாக பேருந்து நிலையங்கள், ரெயில் நிலையங்கள் மார்க்கெட் போன்ற பொது இடங்களில் வரும் பெண்களை மொபைல் கேமரா மூலம் படமெடுத்து அதனை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் கலாச்சாரம் பெருகிவருகிறது.

ஆடை விலகிய நிலையில் பல குடும்பப்பெண்களின் படங்கள், வீடியோக்களை இணையதளத்தில் வெளியிட்டு வருகிறார்கள். பெண்கள் இது பற்றிய விழிப்புணர்வு கொண்டு தங்கள் ஆடைகள் சரியாக இருக்கிறதா என்பதை சரிபார்த்து கொள்வது நல்லது.

பள்ளி, கல்லூரி, விடுதிகளில் தங்கும் மாணவிகள் அவர்களின் அறைகளில் மற்றும் கழிவறை, குளியலறைகளில் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருகிறதா என்பதில் கவனம் செலுத்தவும்.

பொது கழிப்பிடங்களுக்கு செல்லும் பெண்கள், பொது குளியலறைகளை பயன்படுத்தும் பெண்கள் மற்றும் வெளியூர்களுக்கு செல்லும் போது வேலை நிமித்தமாக அங்கு ஓட்டல்கள், லாட்ஜ்களில் தங்க நேரிடும்போது அங்குள்ள அறைகளை பயன்படுத்தும் போதும் கழிப்பறை குளியலறைளிலும் கேமராக்கள் எதுவும் பொருத்தப்பட்டிருக்கிறதா என்று நன்றாக கவனித்துப் பார்க்கவும்.

தங்களுக்கு தெரியாமல் தங்களை, தங்கள் செயல்களை படமெடுக்கும் கேமராக்க்கள் அங்கு பொருத்தப்பட்டிருக்கலாம் கவனம் தேவை.
நாம் துணிக்கடைகளுக்கு செல்வது இயல்பானது. அங்கு உடைகளை போட்டு பார்த்து சரிபார்க்க சிறிய அறை பெண்களுக்காக பெரிய கடைகளில் ஒதுக்கப்பட்டிருக்கும்.

அந்த துணிக்கடைகளின் உடைகளை போட்டு சரிபார்க்கும் அறைகளை பயன்படுத்தும் பெண்கள் மிகமிக கவனமாக இருக்கவேண்டும்.

அங்கு கண்டிப்பாக தங்களை கண்காணிக்க கேமராக்க்கள் பொருத்தப்பட்டிருக்கும். வேறுநோக்கத்தில் இல்லை என்றாலும் துணிகள் களவு போகிறதா துணிகளை மறைக்கிறார்களா என்று பார்ப்பதற்காகவாவது அங்கு கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கிறது என்பதை கவனத்தில் கொண்டு தாங்கள் உடைகளை மாற்றவும்.

கேமராக்கள் எதுவும் பொருத்தப்படவில்லை என்றாலும் கண்ணாடிகள் பொருத்தப்பட்டிருக்கும். இந்த கண்ணாடிகளிலும் இரண்டு வகை கண்ணாடிகள் உண்டு. இவைகளைப்பற்றியும் நாம் தெரிந்துகொள்வது நல்லது. கண்ணாடிகளில் நம்மை மட்டுமே பிரதிபலிப்பது ஒரு வகை இன்னொரு வகை நாம் பார்க்கும்போது கண்ணாடியாக நம்மை பிரதிபலிக்கும், ஆனால் மறுபக்கதிலிருந்து அதாவது கண்ணாடிக்கு அடுத்த பக்கம் பார்ப்பவர்களுக்கு ஒளிவு மறைவு இல்லாமல் நம்மை காட்டும் இந்த இரண்டாம் வகை கண்ணாடிகள் பற்றிதான் நாம் மிகுந்த ஜாக்கிரதையுடன் இருக்கவேண்டும்.

இந்த உடைமாற்றும் அறைகளில் இந்த கண்ணாடிகளின் ஊடாக மறுபக்கம் கேமராக்கள் பொருத்தப்பட்டிருக்கலாம் அல்லது யாராவது தங்களை படமெடுக்கலாம் இவைகளை கருத்தில் கொண்டு செயல்படவும். நம்மையறியாமலே நம்மை படம், வீடியோ எடுத்து இணையதளத்தில் வெளியிடும் கலாச்சாரம் தற்போது மிக சாதாரணமாக நம் நாட்டிலும் பரவி வருகிறது.

இதுபோன்றவைகளில் சிக்காமல் வாழ பழகிக்கொள்ளவும் தக்க விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.